Indian 2 படத்தில் அவர் பெரிய வில்லன் இல்லியாம்! அவரையும் விட பெருசா ஒருத்தர்!
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் யார் மெய்ன் வில்லன் என்பது தெரியவந்துள்ளது.
இந்தியன் 2 படத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பதாகவும் அவர்தான் படத்தில் மெய்ன் வில்லன் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில், நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் எஸ் ஜே சூர்யாவுக்கு இந்த படத்தில் நல்ல அழுத்தமான வேடம் தான் என்றாலும் அவரை விட பெரிய வில்லன் ஒருவர் இருக்கிறார் என்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் பீக் என்று சொன்னால் அது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம்தான். பிரம்மாண்டம், கிராபிக்ஸ் காட்சிகள் என எதுவுமே இல்லாமல் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் அளவுக்கு பிசினஸ் செய்துள்ள இந்த படம் தமிழ் சினிமாவின் சிகரமாக பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படம் இந்திய சினிமாவின் சிகரமாக அமையும் என்று பேசி வருகிறார்கள். இந்த படத்தைப் பார்த்த கமல்ஹாசனே வியந்து ஷங்கரைப் பாராட்டியிருக்கிறார் என்றார் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், காஜல், சித்தார்த், ரகுல் பிரீத், பிரியா பவானி ஷங்கர், டெல்லி கணேஷ், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் துரித கதியில் நடந்து வருகின்றது. கமல்ஹாசன் நடிக்கும் போர்சன் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 15 நாட்களே எஞ்சியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் கமல்ஹாசனுடம் மொத்தம் 7 வில்லன்கள் மோத இருக்கிறார்களாம். அந்த வகையில் எஸ் ஜே சூர்யாவும் அதில் முக்கியமான வில்லனாம். ஆனால் அவரையும் விட ஒரு ஸ்ட்ராங்கான கேரக்டரில்தான் சமுத்திரக் கனி நடிக்கிறார் என்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் கமல்ஹாசன், சமுத்திரக்கனி, மாரிமுத்து ஆகியோர் நடிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.