பிக்பாஸ் வீட்டில் அசல் கோலாருக்கு ஆப்பு வைத்த ஜி.பி. முத்து

asal kolar lifted nivshini in bigg boss, bigg boss tamil season 6பிக்பாஸ் வீட்டில் அசல் கோலாருக்கு ஆப்பு வைத்த ஜி.பி. முத்து செயல்பாடுகள் வைரலாகி வருகிறது.

Update: 2022-10-22 11:54 GMT
asal kolar lifted nivshini in bigg boss, bigg boss tamil season 6பிக்பாஸ் வீட்டில் ஜி.பி. முத்து மற்றும் அசல்கோலார்.

asal kolar lifted nivshini in bigg boss, bigg boss tamil season 6உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் வீட்டில் அறிமுகம், கதை சொல்லும் போட்டிகள் எல்லாம் முடிவடைந்து தற்போது சண்டை ஆரம்பித்துவிட்டது. நடிகர் அசிம் ஆயிஷா, விக்ரமனிடம் வம்பு இழுத்து போட்ட சண்டைகள் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டன. கடந்த 10 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும் அசல் கோலார் என்ற நடிகர் வீட்டில் உள்ள மற்ற நடிகைகளிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றி ஏராளமான விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் இருந்து எழுந்து வருகிறது.

asal kolar lifted nivshini in bigg boss, bigg boss tamil season 6அசல் கோலார் பெயருக்கு ஏற்றார் போல் கோளாறான ஆளா என்று பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர். அதற்கு தகுந்தார் போல் தான் அவருடைய செயல்பாடுகளும் தொடர்ந்து இருந்து வருகிறது. ஏற்கனவே இலங்கை ஜனனியிடம் அவர் மிக மோசமாக நடந்து கொண்டது குறிப்பாக அவரது முதுகில் கை வைத்தது போன்ற செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தன. அது மட்டுமல்ல நடிகை மைனா நந்தினியிடமும் மோசமாக நடந்து கொண்டார் என்று ஒரு விமர்சனம் பரவி வருகிறது.

asal kolar lifted nivshini in bigg boss, bigg boss tamil season 6இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே குடியிருந்து வரும் பிரபல யூடியுபர் ஜி. பி. முத்து அசல் கோலாரை அழைத்து நெல்லை வட்டார மொழி வழக்கத்தில் பேசி அவருக்கு ஆப்பு அடித்து உள்ளார். அது என்ன ஆப்பு என்பதை பார்ப்போமா? அசிமும், அசல் கோளாறும் சேர்ந்து வர அசல் கோலாரை அழைக்கும் ஜி. பி. முத்து தம்பி வாங்க வாங்க வாங்க உட்காருங்கள் உக்காருங்க என்கிறார். அவர் உட்காராமல் போகவே ஏன் தம்பி உங்களுக்கு ஆம்பளைகளே பிடிக்காதா ஆம்பளைகள் கிட்ட பேச மாட்டீங்களா? பொம்பளைகள் தான் பிடிக்குமா? அவங்க கிட்ட தான் பேசுவீங்களா ? எங்க கிட்ட பேச மாட்டீங்களா? இவ்வளவு நாளும் அண்ணே அண்ணே அப்படின்னு சொல்லி பேசுவீங்க பாசமா இருப்பீங்க இப்போது கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க ஏன் தம்பி அப்படி? நாங்க வீணா போனவங்க என்று நினைக்கிறீங்களா? என்று தமாசாக பேசுவது போல் பேசி அப்படித்திருக்கிறார். இவர் பேச பேச மறக்க மாட்டேன் உங்களை மறக்க மாட்டேன் அண்ணே என கூறியவாறு அருகில் அமர்கிறார்  அசல்கோலாறு. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News