‘‘8 வயதில் தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்": நடிகை குஷ்பு
தனது 8வது வயதில் தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு, இவர் நடித்த சின்னத்தம்பி திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் மூலம் தான் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் குஷ்பு தனது 8வது வயதில் தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், இது கடினமான விஷயமாகவும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் வர்ணித்துள்ளார்.
மேலும் அவர் 15 வயதாக இருந்தபோது, அவர் தனது தந்தைக்கு எதிராக போராடத் தொடங்கியதாகவும், பின்னர் அவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டாதகவும், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சமீபத்தில் ஜெய்ப்பூரில் மோஜோ ஸ்டோரி ஏற்பாடு செய்த "ஸ்ரீட் வுமன்" நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்த நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு, என்னை மறக்காமல், மன்னிக்காமல், எனக்குப் பின்னால் வைத்து முன்னேறிச் செல்ல எனக்கு நீண்ட காலம் பிடித்தது. நான் தந்தையால் சிறுவயதில் நான் சந்தித்த துஷ்பிரயோகம். ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவை ஏற்படுத்துகிறது.
எனது தாய் மிகவும் மோசமான திருமணத்தை அனுபவித்து வருகிறார். ஒரு மனிதன் தனது மனைவியையும், குழந்தைகளையும் அடித்து, தனது ஒரே மகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவர் அதை தனது பிறப்புரிமை என்று நினைத்துள்ளார். ஆணாக இருப்பது அவரது உரிமை. மேலும் இந்த பாலியல் வன்கொடுமை நடந்தபோது எனக்கு வெறும் 8 வயதுதான், ஆனால் 15வது வயதில் அவருக்கு எதிராகப் பேசும் தைரியம் எனக்கு வந்தது என்று குஷ்பு பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், எனது15வது வயதில், அது போதும் என்று நான் நினைத்தேன். நான் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தபோது, உண்மையில் எங்களை அவர் விட்டுவிட்டார். அடுத்த வேலை உணவு எங்கிருந்து வரப்போகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் எங்களை விட்டுவிட்டு சென்றார். தனது தந்தைக்கு எதிராக நின்றதில் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில் அவர் குடும்பத்தில் இருந்திருந்தால், நான் இவ்வளவு தூரம் சென்றிருக்க மாட்டேன். நான் வீட்டில் ஒரு மனிதனுடன் சண்டையிட முடிந்தால், உலகத்தை மிக எளிதாக நிர்வகிக்க முடியும் என்று வெளிப்படையாக நடிகை குஷ்பு தெரிவித்தார்.
கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பின்னர் அவர் அரசியலுக்கு வந்தார். காங்கிரசிலிருந்து விலகி 2020ல் பாஜகவில் சேர்ந்தார்.