நித்யானந்தாவை திருமணம் செய்ய விரும்புகிறேன்… நடிகை பிரியா ஆனந்த் அதிரடி..!
நடிகை பிரியா ஆனந்த், சர்ச்சைக்குரிய சாமியரானா நித்யானந்தாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.;
தமிழ்த்திரையுலகில், 'வாமனன்' படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று பலராலும் வசீகரிக்கப்பட்டு முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கினார்.
இதனைத்தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த 'எதிர்நீச்சல்' திரைப்படம் இவருக்கு நல்ல பெயரையும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு 'வணக்கம் சென்னை', 'வை ராஜா வை', 'இரும்பு குதிரை' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து மேலும் பரவலான இடத்தை தமிழ்த்திரையுலகில் பெற்றார். அதோடு, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பிற மொழிப் படங்களிலும் ரவுண்டு கட்டினார்.
இந்தநிலையில்,பாலியல் சர்ச்சை சாமியாரான நித்யானந்தா மீது தனக்கு ஒரு க்ரஷ் இருப்பதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் பிரியா ஆனந்த் தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அண்மையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரியா ஆனந்த் அந்தப் பேட்டியில், "நித்யானந்தா மீது எனக்கு ஒரு க்ரஷ் உள்ளது. அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். அவரை திருமணம் செய்து கொண்டால் பிரியா ஆனந்த் என்கிற என் பெயரைக்கூட மாற்றத் தேவை இல்லை. பெயர் பொருத்தம் பக்காவாக உள்ளது. பெயரில் உள்ள ஆனந்த் என்பதை மட்டும் மாற்றினால் போதும். நித்யானந்தாவை எல்லோருக்கும் பிடிக்கிறது. அவரை அனைவரும் பின் தொடர்கிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. அதனால்தான் அனைவரும் அவரின் பேச்சைக் கேட்டு வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.