ஜெயிலர் படத்துல இத்தன பேரா? அம்மாடியோவ் லைனா வந்துட்டே இருக்கே!
ஆகஸ்ட் 1ம் தேதி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு உருவாகி வரும் படம் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து சினிமாக்களிலிருந்தும் நடிகர்களை எடுத்து காஸ்டிங் செய்திருக்கிறார்கள்.
விக்ரம் படம் வெளியானபோது கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்தபோதே இது மிகப்பெரிய விசயம், 3 ஹீரோக்கள் இணைகிறார்கள் என்று பேசப்பட்டது. அதைவிட பல நடிகர்களை இணைத்துள்ளது நெல்சனின் ஜெயிலர் திரைப்படம். இதில் ரஜினிகாந்துடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவராஜ்குமார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஷெராஃப், தெலுங்கிலிருந்து சுனில், நாகபாபு, தமிழில் வசந்த் ரவி, ஜாபர் சாதிக், யோகி பாபு என பலரை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
இவர்களுடன் மேலும் பல நடிகர்களும் நடித்திருக்கிறார்கள் அவர்களின் பெயர்களை இப்போது பார்க்கலாம்.
ரஜினிகாந்த்,
மோகன் லால்,
ஜாக்கி ஷெராஃப்,
சிவ ராஜ்குமார்,
சுனில்,
ரம்யா கிருஷ்ணன்,
விநாயகன்,
மிர்னா மேனன்,
தமன்னா,
வசந்த் ரவி,
நாக பாபு,
யோகி பாபு,
ஜாபர் சாதிக்,
கிஷோர்,
பில்லி முரளி,
சுகுந்தன்,
கராத்தே கார்த்தி,
மிதுன்,
அர்ஷத்,
மாரிமுத்து,
நமோ நாராயணா,
ரித்விக்,
அனந்த்,
சரவணன்,
அறந்தாங்கி நிஷா,
மகாநதி சங்கர்,
கலை அரசன்
ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் முதன்முறையாக இணையும் இந்த படத்துக்கு இசையமைக்கும் பணியை அனிருத் கவனிக்கிறார். ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
ஜெயிலர் படம் கடந்த ஆண்டே துவங்கி இப்போது வரை நடைபெற்று வருவதால் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை மகிழ்ச்சியுறச் செய்யும் வகையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
ஆகஸ்ட் 1ம் தேதி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.