'வெள்ளை ஆடைக்கு கிடைத்த மரியாதை'- ஜி.பி முத்து பெருமிதம்

GP Muthu Bigg Boss 6 Tamil- வெள்ளை நிற வேட்டி, சட்டை, பவுடர் பூசிய முகம். நெற்றியில் விபூதி, குங்குமம், படிந்துவாரிய தலை இதுதான், 'டிக்டாக்' ஜி.பி முத்துவின் அடையாளம். இந்த வெள்ளை ஆடையை 'பிக்பாஸ்' வீட்டிலும் அணிந்ததால், தனக்கு மரியாதை கிடைத்ததாக, பெருமிதப்பட்டிருக்கிறார் ஜி.பி முத்து.

Update: 2022-10-15 07:26 GMT

GP Muthu Bigg Boss 6 Tamil- ‘பிக்பாஸ்’ சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி முத்து. அருகில் சக போட்டியாளர் சாந்தி.

GP Muthu Bigg Boss 6 Tamil- 'டிக்டாக்' மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜி.பி முத்து. இவரது முழுப்பெயர் ஜி. பேச்சிமுத்து. இவர் 'டிக்டாக்'கில், தினமும் ஏராளமான வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். வீட்டில் இருந்தாலும், அல்லது வெளியில் சென்றாலும் அவற்றை வீடியோக்களாக பதிவிட்டு விடுவார். பிரபலமான சினிமா பாடல்களை பாடியும், 'பஞ்ச்' வசனங்களை பேசியும் இவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்துவார்.

இவரது, 'டிக்டாக்'  வீடியோக்களை பலரும் கிண்டலடித்து, கமெண்ட் செய்வது வழக்கமாக நடக்கும். சிலர், கடுமையான வார்த்தைகளால், ஜி.பி முத்துவை கேலி செய்து கமெண்ட் செய்யும் போது, பதிலுக்கு  அவர்களை கண்டபடி திட்டுவார் ஜி.பி முத்து. குறிப்பாக, 'பேப்பர் ஐடி' என, இவர் சில குறிப்பிட்ட நபர்களை கண்டபடி ஏசுவார். சில குறிப்பிட்ட வார்த்தைகளால், இவர் திட்டுவது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. 


'டிக்டாக்' மூலம், பிரபலமான ஜி.பி முத்து, பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்ட துவங்கினார். கடந்தமுறை நடந்த 'பிக்பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சியில், இவர் பங்கேற்பார் என பரவலாக பேசப்பட்ட நிலையில், இவர் பங்கேற்கவில்லை. 'மனைவி, குழந்தைகளை என்னால் பிரிந்து இருக்க முடியாது. அதுவும், பிக்பாஸ் வீட்டுக்குள் மொபைல் போன் இல்லாமல், என்னால் இருக்கவே முடியாது. அதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை,' என்றார்.

ஆனால், தற்போது துவங்கிய 'பிக்பாஸ்' சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டார் பலராலும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி முத்து, முதல் ஆளாக 'பிக்பாஸ்' வீட்டுக்குள் நுழைய, 'இன்று இரவு முழுவதும் வேறு யாரும் வீட்டுக்குள் வரமாட்டார்கள். நீங்கள் தனியாக தான் இருக்க வேண்டும்,' என, கமல்ஹாசன் பொய்யாக மிரட்டி 'கலாய்க்க', அதற்கு பதறிய ஜி.பி முத்து, நான் பாத்ரூமுக்கு கூட தனியாக போனது இல்லை. தயவுசெய்து, நீங்களாவது வீட்டுக்குள் வந்து எனக்கு துணையாக இருங்கள்,' என, அழுகிற குரலில் கமலிடம் மன்றாடினார். இது, பார்வையாளர் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியது.  


பிக் பாஸ் 6 சீசன் தொடங்கி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதற்குள் பல பிரச்சனைகள், பஞ்சாயத்துகள் என நிகழ்ச்சியில் பரபரப்பு தொற்றிக்கொண்டு விட்டது. அதிலும் ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி இடையேயான பிரச்னைதான், தற்போது உச்சக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது.


'எனக்கு, 41 வயதாகிறது. என் மகள் போல தனலட்சுமி இருக்கிறார். வயதுக்கு மரியாதை கொடுக்க சொல்கிறார்' என்ற ஜி.பி முத்துவுக்கு ஆதரவாக, அவரது ரசிகர்கள் தனலட்சுமியை, கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த வாரத்தில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்வு செய்யும்படி பிக்பாஸ் கூறினார். அப்போது பலரும் சமையல் டீம் சாந்தி மற்றும் எல்லா டீமிற்கும் உதவி செய்த ஜிபி முத்துவை தான் சொன்னார்கள். ஜிபி முத்து சிறந்த போட்டியாளராக தேர்வான நிலையில், 'வெள்ளை வேட்டி சட்டை போட்டதுக்கு இன்று மரியாதை கிடைத்து இருக்கிறது' என தெரிவித்து இருக்கிறார். அது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோவில் காட்டப்பட்டு வருகிறது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News