GOAT கிளைமேக்ஸ்! பயங்கரமாக சண்டை போட்ட விஜய்! யார் கூட தெரியுமா?

இந்த படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Update: 2024-06-11 13:07 GMT

தி கோட் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் பயங்கரமாக சண்டை போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சியில் அவர் யாருடன் சண்டை போட்டார் என்பதுதான் மிகப் பெரிய சஸ்பென்சாக இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. சிஜி அதிகம் இடம்பெற்றுள்ள இந்த காட்சியில் தளபதி விஜய், அவரது தந்தை கதாபாத்திரத்துடன் மோதுகிறாராம்.

உங்களுக்கு நினைவிருக்கலாம் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் எனவும் அதில் ஒருவர் மகன் கதாபாத்திரம் மற்றொருவர் அப்பா கதாபாத்திரம். நடிகர் விஜய் தன் மகன் கதாபாத்திரம் மூலம் அவரது அப்பா கதாபாத்திரத்துடன் மோதும் காட்சிதான் கிளைமேக்ஸாம் அப்படியானால் இந்த படத்தில் மோகன் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டதே, மோகன் இந்த படத்தில் வில்லன் இல்லையா என்று பலரும் பேசிவருகின்றனர்.

படம் முழுக்க மகனுக்கும் அப்பாவுக்கும் இடையேயான சண்டை இருந்துகொண்டே இருக்குமாம். மகனுக்கு எதிராக அப்பா செய்யும் செயல்கள்தான் படமே என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. இது தவிர, இந்த படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த மாதம் விஜய்யின் பிறந்தநாள் வரும் நிலையில் அன்று செகண்ட் சிங்கிள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News

கொடி (2016)
எல்கேஜி (2019)
சர்கார் (2018)
ஜோக்கர் (2016)