கர்நாடக மாநில ரசிகர்கள் சார்பில் நடிகர் விஜயின் முழு உருவச்சிலை
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கர்நாடக மாநில ரசிகர்கள் சார்பில் நடிகர் விஜயின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை பனையூரில் நடைபெற்ற மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கர்நாடக மாநில ரசிகர்கள் சார்பில் நடிகர் விஜயின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தஞ்சாவூர் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் கூட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பனையூரில் உள்ள நடிகர் விஜயின் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். மேலும் கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக வழங்கப்பட்ட நடிகர் விஜயின் முழு உருவச் சிலையை மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.
இந்த சிலை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்திலேயே வைக்கப்பட உள்ளது. பிற்பகல் தொடங்கி நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் , விஜய் ரசிகர்களும் பங்கேற்றனர்.