அச்சம் தவிர் குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி வெளியீடு

Short Film Tamil -பெண் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அச்சம் தவிர் குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2022-09-13 09:40 GMT

அச்சம் தவிர் குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி வெளியிடப்பட்டது.

Short Film Tamil -திருப்பூர் மாவட்டத்தில் பல விழிப்புணர்வு குறும்படங்களை இயக்கி பல்வேறு விருதுகளை பெற்ற பிரபல குறும்பட இயக்குனர் குமார் தங்கவேல் இயக்கத்தில் ஈஷா மீடியா தயாரிப்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் அச்சம்தவிர். இப் படத்தின் படப்பிடிப்பு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இப்படம் பெண்கள் பெண் குழந்தைகள் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி தைரியமாக எதிர் கொள்ள வேண்டும் என்பதை கருவாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.



இப்படம் பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் அசோக்குமார், வேலுசாமி, நடிகைகள் திரைப்பட குறும்பட நடிகை வென்மதி ஷீபா, மீனா, சுலோச்சனா, அனிதா கந்தசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை நாமக்கலை சேர்ந்த யாசின் மற்றும் மதுரையை சேர்ந்த கனி ஆகியோர் செய்துள்ளனர்.  பேராவூரணியை சேர்ந்த இசையமைப்பாளர் பாலா இசையமைத்துள்ளார். திருப்பூர் செந்தில் குமார் மேற்பார்வையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.


இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ்  நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல திரைப்பட நடிகர் சாம்ஸ்  சமூக வலைதளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார். அச்சம்தவிர் விழிப்புணர்வு குறும்படம் பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது. போட்டிகள் முடிவடைந்த பிறகு படம் வெளியிடப்படும் என்று படகுழுனர் தெரிவித்துள்ளனர்







அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News