சூர்யா - ஜோதிகா மீது வழக்கு போடுங்க! கோர்ட் உத்தரவின் பரபர பின்னணி

ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக, சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-05-05 07:15 GMT

நடிகர் சூரியா நடித்த ஜெய்பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. அத்துடன்,ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் சார்பில் அதன் தலைவர் சந்தோஷ் நாயகர் என்பவர், இந்து வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில், அவர்களை இழிவுபடுத்தியும், பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையில், அவர்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும், மகாலட்சுமியையும் இழிவுபடுத்தியும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் புகார் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், ஜெய்பீம் படத்தை எடுத்தும், விளம்பர செலவாக ஒரு கோடி ரூபாய் காட்டி கிறிஸ்துவ மதமாற்ற நிறுவனங்களுக்கு கொடுத்து அந்நிய செலாவணி குற்றம் செய்தும், அகரம் அறக்கட்டளையின் நோக்கங்களுக்கு எதிராகவும் குற்றங்கள் செய்திருப்பது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டுமென புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டு, வேளச்சேரி போலீசில் புகார் மனுவை சந்தோஷ் நாயகர் அளித்தார். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜோதிகா- சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய,  வேளச்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முதல் தகவல் அறிக்கையை மே 20ல் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News