அட நம்ம விஜய் டிவி ஜாக்குலினா இது? – வெறித்தனமான ஒர்க் அவுட் என்பது இதுதானோ!
Vijay tv Jacqueline workout - டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்றாலே அவர்களது குரல் அனைவரையும் வசீகரிக்கும் வகையில் இருக்கும் எனும் பொதுவிதியை தகர்த்து எறிந்து புது விதியை படைத்தவர் ஜாக்குலின்.
Vijay tv Jacqueline workout - டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்றாலே அவர்களது குரல் அனைவரையும் வசீகரிக்கும் வகையில் இருக்கும் எனும் பொதுவிதியை தகர்த்து எறிந்து புது விதியை படைத்தவர் ஜாக்குலின்.
சின்னத்திரை தொகுப்பாளர்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர், நடிகையர்களைப் போலவே, இந்த தொகுப்பாளர்களுக்கும் சமூகவலைதளங்களில் பல லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். அந்த வகையில், ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ள தொகுப்பாளினி யார் என்றால், அவர் விஜய் டிவி ஜாக்குலின் என்று நிச்சயமாக சொல்லி விடலாம்.
பப்ளியான தோற்றம், ஜாலியான பிஹேவியர், டைமிங் சென்ஸ் உள்ளிட்ட திறமைகளால், தொகுப்பாளியாக சாதித்த ஜாக்குலின், கனா காணும் காலங்கள், ஆண்டாள், அழகர், தேன்மொழி பி.ஏ. உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து தனது முத்திரையை பதித்து உள்ளார்.
Vijay tv Jacqueline workout - அதோடு மட்டுமல்லாது, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்து வெள்ளத்திரையிலும் தடம் பதித்தார். அதனைத் தொடர்ந்து, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்திலும் நடித்து இருந்தார்.
கொழுக் மொழுக் என்று அமுல் பேபி கணக்காக இருந்த ஜாக்குலின், தற்போது வெறித்தனமாக ஓர்க் அவுட் செய்து தனது உடல் எடையை பெருமளவில் குறைத்து, சிக் என்று மாறி உள்ளார்.
Vijay tv Jacqueline workout - ஜாக்குலின், வெறித்தனமான ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
என்னமோ பெரிய பிளான் வச்சிருப்பார் போல! வெற்றியடைய நாமும் வாழ்த்துவோமாக!