தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபல வில்லன் நடிகர்
மக்களிடமும் நண்பர்கள் மத்தியிலும் நம்பிக்கை வருவதற்காக தடுப்பூசி போட்டுக் கொண்ட செய்தியை வெளியிட்டுள்ள நடிகர்.;
தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபல வில்லன் நடிகர்!
தடுப்பூசி பற்றிய பயமும் குழப்பமும் சந்தேகமும் மக்களிடம் இத்தனை நாள் இருந்து கொண்டிருந்தன. இப்போதுதான் மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு மக்கள் நம்பிக்கையுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகிறார்கள். இதற்குப் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களது படங்களைச் சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் வெளியிட்டு வருவதும் ஒரு காரணம் எனலாம்.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில்' சார்பட்டா பரம்பரை'படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஆர்யாவும் அண்மையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதே படத்தில் நடிக்கும் நடிகர் சோமு இன்று கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இவர் வெற்றிமாறனின் வட சென்னை' படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்றிருந்தார்.'முந்திரிக்காடு' படத்தில் பிரதான வில்லன். '6அத்தியாயம்' படத்திலும் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. தவிர இவர் ஐந்து குறும் படங்கள், இரு டெலி பிலிம் உள்பட சின்னத்திரையிலும் பங்கேற்றுள்ளார். சில நம்பிக்கையான வாய்ப்புகள் கொண்ட படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.
மக்களிடமும் நண்பர்கள் மத்தியிலும் நம்பிக்கை வருவதற்காக தடுப்பூசி போட்டுக் கொண்ட செய்தியை வெளியிட்டுள்ளார்.