ஃபேக்தான் ஆனாலும்...! சீமானை அலற விட்ட ஆவுடையப்பன்!
ஆவுடையப்பன் பேசிய வீடியோவில், அவர் சீமானை புகழ்ந்து பேசியிருந்தார்.;
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை மேடையில் வைத்துக் கொண்டே அவரின் கருத்துக்களுக்கு எதிராக ஆவுடயைப்பன் பேசியதாக கூறி எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று கடந்த 4 நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்துகொண்டிருக்கிறது. இது ஃபேக் என்பது தெரிந்தாலும்,அதில் பேசிய விசயங்கள் உண்மைதானே என அலற விடுகின்றனர் சீமான் கட்சிக்கு எதிர் நிலைப்பாடு உடைய கட்சியினர்.
சத்துணவு வழங்குவதில் நிறைய குறைகள் இருக்கலாம். அதை சரி செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டுமே தவிர, அந்த திட்டத்தையே மோசம் என்று சொல்லி அனைவரையும் பட்னி போட பார்க்கிறீர்களே. சத்துணவு காலை உணவுத் திட்டம் போன்றவை வேண்டாம் என்று கூறுபவர்கள் அயோக்கியர்கள் என ஆவுடையப்பன் சீமானை அருகில் வைத்துக் கொண்டே பேசியது போல வீடியோ வைரலானது. ஆனால் அவர் உண்மையில் பேசியது வேற விசயம்.
ஆவுடையப்பன் பேசிய வீடியோவில், அவர் சீமானை புகழ்ந்து பேசியிருந்தார். நான் இதை மேடைக்காக சொல்லவில்லை. அண்ணன் சீமான் கையால் விருது வாங்கியதில் மகிழ்ச்சி. நீங்க நிச்சயம் தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு வரணும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.