Ethirneechal பொங்கி எழுந்த ஈஸ்வரி! ஜனனிக்காக செய்த சப்போர்ட்!

ஜனனிக்காக சப்போர்ட் செய்ய தன் குரலை உயர்த்துகிறாள் ஈஸ்வரி. கதிரிடம் மல்லுக்கு நிற்க ஜனனி தன் தங்கை என்று கூறுகிறாள்.

Update: 2023-05-09 12:06 GMT

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 9th May 2023

குணசேகரன் தன் வீட்டில் வைத்தே அப்பத்தாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் வேறு யாரையும் அவரைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். அதனைக் கண்காணிக்க கதிரிடம் கண்டிப்பாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அப்பத்தாவை அவ்வப்போது ஜனனி அவரது அறையில் சென்று பார்த்து வருகிறார். குணசேகரனும் கதிரும் இல்லாத சமயத்தில் சென்று வந்த ஜனனி, இப்போது கதிரிடம் மாட்டிக் கொள்கிறாள்.

ஜனனி அப்பத்தாவைக் காண வரும்போது கதிர் அவளைப் பார்த்து விடுகிறான். உங்கள எப்படியும் பழைய நிலைமைக்கு கொண்டு வந்துடுவேன் அப்பத்தா என ஜனனி பேசிக் கொண்டிருக்கையில், கதிர் ஜனனி என அழுகுரலில் கிண்டல் செய்கிறான். இதனால் கடுப்பான ஜனனி அவனைப் பார்த்து முறைக்கிறாள்.

அப்ப அப்பத்தாவ யாரும் பாக்கக் கூடாதா என கோபமடைகிறார்கள் குடும்பத்து மருமகள்கள். அப்போது கதிர் யாரு வேணாலும் பாக்கலாம். ஆனா ஜனனி பார்க்க இவ இந்த வீட்டுக்கு யாரு என்று கோபப்பட்டு கேட்கிறான். அதற்கு பதிலளிக்கும் ஈஸ்வரி இவ என் தங்கச்சி அதனால இந்த வீட்ல இருப்பா என்று பேசுகிறாள்.

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 8th May 2023


Full View


குணசேகரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜனனி பதிலளிக்கிறார். கண்மூடித் தனமா செய்யுற அடிமைங்க இருக்குன்னு சந்தோஷப்பட்டுக்கத்தான் என்கிறார். இதனை சமையல் அறையிலிருந்து கூறுகிறார். இதனால் அங்கு கொஞ்சம் அமைதியான சூழல் நிலவுகிறது.

அடுத்த காட்சியில் ஜனனி, ரேணுகா, நந்தினி மூவரும் எஸ்கே ஆர் தம்பி அருணை சந்தித்து பேசுகிறார்கள். அருண் கொஞ்சம் விருப்பமில்லாமல் இருந்தாலும் ஜனனி கூப்பிட்டதால் அவர்களுடன் நின்று பேசுகிறார். கொஞ்சம் அலட்சியமான பேச்சாக இருந்தாலும் அவர் ஜனனிக்கு நின்று பதிலளிக்கிறார்.

ஆதிரைய நீங்க உண்மையா காதலிக்கிறீங்களா என அருணைப் பார்த்து கேட்கிறார் ஜனனி. அதற்கு அருண் என்ன சொல்வதென்று யோசித்துவிட்டு பதிலளிக்கிறார். அந்த சமயத்தில் நந்தினியும் ரேணுகாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கின்றனர். அவதான் அன்னைக்கு அண்ணன் பின்னாடியே போயிட்டாளே. அவளுக்கு அந்த கல்யாணம் ஓகேனு சொல்லிட்டாளே என்று ஆதங்கப்படுகிறான்.

ஜனனி தான் தான் அப்படி பேசச் சொன்னேன் என்கிறாள். இவை எதுவும் புரியாத நந்தினியும் ரேணுகாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் அப்படி சொன்னீங்க என்று புரியாமல் அருணும் முழிக்கிறான்.

குணசேகரனும் அவனது தம்பி கதிரும் அப்பத்தாவை தங்கள் வீட்டில் வைத்து தங்களது திட்டப்படி எல்லாம் நடக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் நினைப்பதுபோல எதுவும் நடக்கப்போவதில்லை என்கிறார் ஜனனி.

ஜனனி, நந்தினி, ரேணுகா மூவரும் அருணைச் சந்தித்து நடந்த விசயத்தைப் பேச முயற்சி செய்கிறார்கள். அவர்களின் கடை அருகே சென்று நீண்ட நேரம் காத்திருந்து அருணை தனியே சந்திக்கிறார்கள். ஆதிரையை உண்மையிலேயே காதலிக்கிறீர்களா அருண் என ஜனனி கேட்கிறார். நந்தினி ஆதிரையைப் பற்றியும் அவளின் காதலைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறாள். அதேநேரம் அருண் முதலில் கோபப்படுகிறார். அடுத்து கொஞ்ச நேரத்தில் அவனும் ஆதிரையைக் காதலிப்பதாகவும் மிஸ் செய்யவதாகவும் கூறுகிறான். ஆனால் அந்த சமயத்தில் கடும் கோபத்தில் அங்கு வந்த அருணின் அண்ணன் அரசு, அவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.

குணசேகரன் பொம்பளைங்கள அனுப்பி விளையாட ஆரம்பிக்கிறானா என எடுத்தெறிந்து பேசி அவர்களை பேசவே விடாமல் அனுப்பி விடுகிறான். மூவரும் வீட்டுக்கு வருகிறார்கள். ஜனனி முதலில் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு மற்ற இருவரையும் உள்ளே செல்ல கேட்கிறாள். அங்கு நந்தினியின் அப்பாவுக்கும் ஈஸ்வரியின் அப்பாவுக்கு கதிர் உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறான். அன்புடன் அவன் நடந்து கொள்வதை யாராலும் நம்ப முடியவில்லை.

நந்தினியின் அப்பா, ஈஸ்வரியின் அப்பா, ரேணுகாவின் அம்மா என மூவருக்கும் சாப்பாடு பரிமாறி விழுந்து விழுந்து கவனிக்கிறான் கதிர். இதனைப் பார்த்த ரேணுகா அவள் அம்மாவிடம் நீங்க ஏன் இங்க வந்தீங்க. சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போங்க நாங்க வேலை இருக்கும்போது கூப்பிட்டு அனுப்புறோம் என்று சொல்கிறாள். உடனே கதிர் அவங்க யாரும் இப்ப போகமாட்டாங்கள். ஆதிரை கல்யாணம் முடியுற வரைக்கும் இங்கதான் இருக்க போறாங்க. கல்யாணம் காட்சின்னா சம்பந்திங்க இல்லாம எப்படின்னு அண்ணன் வர சொல்லிருக்காரு.

உடனே நந்தினியும் தன் பங்குக்கு ஏதோ பேச, உடனே மாமியார் அவளை அதட்டுகிறாள். அதான் மூத்தவன் சொல்லிருக்கான்ல அப்ப அதன்படிதான் நடக்கும். நீ எதுவும் பேசாத என்று கூறிவிட்டு, கதிரிடம் நீங்க முடிவு பண்ணிட்டீங்கள்லப்பா அப்படியே நடக்கட்டும் என்கிறாள். அடுத்து வீட்டு மருமகள்கள் நால்வரும் நந்தினி, ஈஸ்வரியின் அப்பாக்களுடன் தனியே நின்று பேசுகிறார்கள்.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir Neechal serial tomorrow episode youtube 10th May 2023

ஆதிரை திருமணத்துக்கு சம்மதித்து குணசேகரன் மூக்கை அறுக்க ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதனால் கரிகாலன் - ஆதிரை திருமணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். 

Tags:    

Similar News