Ethirneechal குணசேகரனுக்கு எதிராக ஜனனியுடன் சேர்ந்த குடும்பம் போடும் பலே திட்டம்!

குணசேகரனுக்கு எதிராக சூப்பரான திட்டம் ஒன்றைத் தீட்டிகிறார் ஜனனி. இதற்கு குணசேகரன் குடும்பத்து மருமகள்கள், குணசேகரனின் அம்மா, தங்கை, நந்தினியின் அப்பா உள்ளிட்டோரும் சம்மதம் தெரிவித்து அவருடன் சேர்ந்து திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Update: 2023-05-08 13:25 GMT

குணசேகரனுக்கு எதிராக சூப்பரான திட்டம் ஒன்றைத் தீட்டிகிறார் ஜனனி. இதற்கு குணசேகரன் குடும்பத்து மருமகள்கள், குணசேகரனின் அம்மா, தங்கை, நந்தினியின் அப்பா உள்ளிட்டோரும் சம்மதம் தெரிவித்து அவருடன் சேர்ந்து திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர்.

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 8th May 2023

குணசேகரனும் அவனது தம்பி கதிரும் அப்பத்தாவை தங்கள் வீட்டில் வைத்து தங்களது திட்டப்படி எல்லாம் நடக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் நினைப்பதுபோல எதுவும் நடக்கப்போவதில்லை என்கிறார் ஜனனி.

ஜனனி, நந்தினி, ரேணுகா மூவரும் அருணைச் சந்தித்து நடந்த விசயத்தைப் பேச முயற்சி செய்கிறார்கள். அவர்களின் கடை அருகே சென்று நீண்ட நேரம் காத்திருந்து அருணை தனியே சந்திக்கிறார்கள். ஆதிரையை உண்மையிலேயே காதலிக்கிறீர்களா அருண்  என ஜனனி கேட்கிறார். நந்தினி ஆதிரையைப் பற்றியும் அவளின் காதலைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறாள். அதேநேரம் அருண் முதலில் கோபப்படுகிறார். அடுத்து கொஞ்ச நேரத்தில் அவனும் ஆதிரையைக் காதலிப்பதாகவும் மிஸ் செய்யவதாகவும் கூறுகிறான். ஆனால் அந்த சமயத்தில் கடும் கோபத்தில் அங்கு வந்த அருணின் அண்ணன் அரசு, அவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். 

குணசேகரன் பொம்பளைங்கள அனுப்பி விளையாட ஆரம்பிக்கிறானா  என எடுத்தெறிந்து பேசி அவர்களை பேசவே விடாமல் அனுப்பி விடுகிறான். மூவரும் வீட்டுக்கு வருகிறார்கள். ஜனனி முதலில் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு மற்ற இருவரையும் உள்ளே செல்ல கேட்கிறாள். அங்கு நந்தினியின் அப்பாவுக்கும் ஈஸ்வரியின் அப்பாவுக்கு கதிர் உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறான். அன்புடன் அவன் நடந்து கொள்வதை யாராலும் நம்ப முடியவில்லை. 

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 6th May 2023

அம்மா இன்னொருவர் அதுவும் தனது எதிரியின் மனைவி காலில் விழுவதை அறிந்த குணசேகரனும், கதிரும் வேக வேகமாக பதறியடித்துக் கொண்டு வந்து அவரைத் திட்டுகின்றனர். ஏன் காலில் விழுறீங்க என கோபத்துடன் கேட்கின்றனர். யாரைக் கேட்டுட்டு இங்க வந்தீங்க... இதுதான் உங்க தம்பி வீடா எஸ்கேஆர தம்பியா தத்து எடுத்துக்கிட்டீங்களா என கோபத்தில் கத்துகிறான் குணசேகரன்.

தான் கையில் கொண்டு வந்த பத்திரிகையை எப்பா எஸ்கேஆர்.. இந்தா உனக்கு தமிழ் படிக்க தெரியும்தானே இந்த பத்திரிகைய படி பாக்கலாம் என ஆதிரை - கரிகாலன் திருமண பத்திரிகையைப் படிக்கச் சொல்கிறான் குணசேகரன். அடுத்து எஸ்கேஆரின் மனைவி சாருலதாவை படிக்க சொல்வான் என எதிர்பார்க்கும் நிலையில், அருணிடம் எப்பா அமெரிக்க தம்பி, நீ படிக்கிறியா தமிழ் படிக்க தெரியுமா என்று கேட்டதும் மூவரும் வெறுப்பில் வேறு திசையைப் பார்த்து நிற்கிறார்கள்.

எனக்கு இங்கிலீஷ்தான் படிக்க வராது. தமிழ் நல்லாவே படிப்பேன் என்று படித்துக் காண்பிக்கிறார். அப்போது ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்று படிக்கவும் குணசேகரனின் அம்மா, தம்பி ஞானசேகரன், ஆதிரை மூவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அந்த நேரத்தில் எனக்கு அருண்தான் வேணும் என அடம்பிடிக்கிறாள் ஆதிரை. அம்மாவும் குணசேகரனிடம் ஏதோ பேச முயற்சிக்கிறார்.

அம்மாவைப் பேச விடாமல், அடுத்து ஆதிரையை இழுத்துக் கொண்டு போக நினைக்கிறான் கதிர். அப்போது ஞானசேகரன் தடுக்க முயற்சிக்க இருவருக்கும் முட்டிக் கொள்கிறது. இதனையடுத்து ஆதிரையை இழுத்துக் கொண்டு கீழே செல்கிறான் கதிர். அடாவடியாக இழுத்துக் கொண்டு போவதால் ஞானசேகரனும் அவளை விடுடா என்று பின்னாடியே செல்கின்றனர் அனைவரும்.

அப்போது ஜனனி அங்கே வருகிறாள். தான் ஆதிரையுடன் தனியாக பேச வேண்டும் என்று கூறுகிறாள். முதலில் ஆதிரை அங்கிருந்து நகர மறுத்தாலும் தான் உன் நல்லதுக்காகத் தான் சொல்றேன் வா என இழுத்துச் செல்கிறாள் ஜனனி. ஜனனி ஆதிரையுடன் பேசி அவளை திருமணத்துக்கு சம்மதம் என்று சொல்ல வைக்கிறாள். அனைவரும் அங்கிருந்து செல்கின்றனர்.

குணசேகரன் வீட்டில் அனைவரும் இருக்கு அந்த நேரத்தில் அங்கே விளக்கு ஏற்றும்படி குணசேகரன் சொல்கிறான். அங்கு ஜான்சி ராணி விளக்கை ஏற்றுகிறாள். அப்போது நந்தினி குறுக்கிட்டு எங்களுக்கு விளங்கல சரியா என்ன நடக்குது சொல்லுங்கன்னு சொல்ல, குணசேகரன் வழக்கம்போல அவர்களை மதிக்காமல் இருக்கிறான்.

அந்த நேரத்தில் ஆதிரையும் அவள் அம்மாவும் உள்ளே வருகிறார்கள். ஆனால் அவளும் கல்யாணத்தை எதிர்க்காமல் தன் அறைக்குள் சென்றுவிடுகிறாள். அவளது அம்மாவும் குணசேகரனிடம் எப்பா நடக்கவேண்டியது நடக்கட்டும் பாத்துக்கப்பா என்று எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் செல்கிறாள்.

கடைக்காரன் கிட்ட பணத்த விட்டெறிஞ்சா அவன்பாட்டுக்கு பொருட்கள வீட்டுக்கு வந்து போடப்போறான் என குணசேகரன் பேசுகிறார். இது வழக்கம்போல வீட்டிலுள்ள அனைவருக்கும் கடுப்பை ஏற்படுத்தினாலும் முனுமுனுத்துக் கொண்டிருக்கிறார்கள். உடனே அங்கு நிற்கும் ரேணுகா அதுக்கு எதுக்கு எங்கள போகச் சொல்றீங்க என்று சலிப்புடன் கேட்கிறார்.

குணசேகரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜனனி பதிலளிக்கிறார். கண்மூடித் தனமா செய்யுற அடிமைங்க இருக்குன்னு சந்தோஷப்பட்டுக்கத்தான் என்கிறார். இதனை சமையல் அறையிலிருந்து கூறுகிறார். இதனால் அங்கு கொஞ்சம் அமைதியான சூழல் நிலவுகிறது.

அடுத்த காட்சியில் ஜனனி, ரேணுகா, நந்தினி மூவரும் எஸ்கே ஆர் தம்பி அருணை சந்தித்து பேசுகிறார்கள். அருண் கொஞ்சம் விருப்பமில்லாமல் இருந்தாலும் ஜனனி கூப்பிட்டதால் அவர்களுடன் நின்று பேசுகிறார். கொஞ்சம் அலட்சியமான பேச்சாக இருந்தாலும் அவர் ஜனனிக்கு நின்று பதிலளிக்கிறார்.

ஆதிரைய நீங்க உண்மையா காதலிக்கிறீங்களா என அருணைப் பார்த்து கேட்கிறார் ஜனனி. அதற்கு அருண் என்ன சொல்வதென்று யோசித்துவிட்டு பதிலளிக்கிறார். அந்த சமயத்தில் நந்தினியும் ரேணுகாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கின்றனர். அவதான் அன்னைக்கு அண்ணன் பின்னாடியே போயிட்டாளே. அவளுக்கு அந்த கல்யாணம் ஓகேனு சொல்லிட்டாளே என்று ஆதங்கப்படுகிறான்.

ஜனனி தான் தான் அப்படி பேசச் சொன்னேன் என்கிறாள். இவை எதுவும் புரியாத நந்தினியும் ரேணுகாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் அப்படி சொன்னீங்க என்று புரியாமல் அருணும் முழிக்கிறான்.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 9th May 2023

ஆதிரை திருமணத்துக்கு சம்மதித்து குணசேகரன் மூக்கை அறுக்க ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதனால் கரிகாலன் - ஆதிரை திருமணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். 

Tags:    

Similar News