Ethirneechal Today கோபத்தில் கரிகாலன் அம்மா! உடைந்து அழும் சக்தி...!
குணசேகரன் மட்டும் தன்னை ஏமாற்றினால் மொத்த குடும்பத்தையும் சந்தி சிரிக்க வைத்துவிடுவேன் என்று கூறுகிறாள் கரிகாலனின் அம்மா.
இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 3rd March 2023
பெரிய இடத்தில் சம்மந்தம் பேசப் போகிறோம் அது நடந்துவிடும் என நம்பி பல இடங்களில் கடன் வாங்கி வைத்திருப்பதால் கரிகாலனின் தாய் பயத்தில் இருக்கிறாள். ஆதிரைக்கு ஏதாவது ஆகி அவளை கரிகாலன் திருமணம் செய்ய முடியாமல் ஆகிவிட்டால் சொத்து இல்லை ஒரு பைசா கூட கிடைக்காது என நினைத்து வருத்தப்படுகிறாள்.
கரிகாலனைக் கூட்டிக் கொண்டு அவசர அவசரமாக மருத்துவமனைக்கு ஓடுகிறாள். கரிகாலனும் மாமா வாக்கு குடுத்தா அதுல இருந்து மீற மாட்டார்ம்மா என்கிறான் கரிகாலன். அதற்கு அவனது அம்மா அந்த தேங்கா மண்டயன் ஏதாது திரிசமம் பண்ணான்னு வச்சிக்கோ மொத்த குடும்பத்தையும் சந்தி சிரிக்க வச்சிடுவேன் பாத்துக்க என கரிகாலனிடம் வெத்தலை போட்டு மென்ற வாயால் பேசுகிறாள் அவனது அம்மா.
இதனைக் கேட்ட கரிகாலன் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறான். அங்கே சக்தி தனிமையில் நின்று எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறான். அவனைக் காணவில்லை என்று தேடினாளோ என்னவோ சக்தி தனியாக இருப்பதை பார்த்துக் கொண்டு அவனிடம் பேச வருகிறாள் ஜனனி.
சக்தி தனது நிலைமையையும் தங்கை நிலைமையையும் நினைத்து வருத்தத்தில் இருக்கிறான். நாம இத்தன அண்ணன்களோட பொறந்துருக்கோம் இவ்ளோபேரு இருக்காங்களேன்னு நினைப்பு. ஆனா இப்பதான் தெரியுது அநாதை மாதிரி இருக்கேன் என்று கூறி அழுதே விடுகிறான் சக்தி. உடனே ஜனனி சக்திக்கு ஆறுதல் கூறுகிறாள்.
முந்தைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 2nd March 2023
ஆதிரை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அருகிலுள்ள போலிஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பின் அனுமதியுங்கள் எனவும் மருத்துவர் சொல்ல, அதற்கு சக்தி கோபத்தில் பேசுகிறான். உடனே ஜனனி சார் நாங்க எல்லா பொறுப்பையும் ஏத்துக்குறோம் எங்க வேணாலும் கையெழுத்து போட்டு தரோம். நீங்க உயிர காப்பாத்துங்க என கெஞ்சவே டாக்டரும் சரி என அவளுக்கு சிகிச்சை செய்ய ஒப்புக் கொள்கிறார்.
அங்கு பணியிலுள்ள நர்ஸ் ஒருவரை அழைத்து அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு பண்ணுங்க. இந்த பேசன்ட்டுக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய வேலைய தொடங்குங்க. உடனே எமர்ஜென்ஸி வார்ட ரெடி பண்ணுங்க என பதற்றமாக கூறிக்கொண்டே மருத்துவரும் நகர்கிறார்.
நந்தினி வழக்கம்போல தனது புலம்பல்களால் அங்குள்ளவர்களை மேலும் பதைபதைக்க செய்கிறாள். அவளுக்கு ரேணுகாவும் ஜனனியும் ஆறுதல் கூறுகின்றனர். நந்தினி நடந்ததை அத்தையிடம் தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் நாமே அவரது மகளைக் கொன்றுவிட்டதாக கூட பேசுவார். இப்போதே தெரிவிக்கவேண்டும் என்று கூற ஜனனி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இப்போது வேண்டாம். அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திவிடும். முதலில் ஆதிரை குணமாகட்டும் என்கிறாள் ஜனனி. இதையே ஆமோதிப்பது போல பதில் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருக்கிறான் சக்தி.
ஜனனி, குணசேகரன் குடும்பத்தின் மூத்த மருமகளான ஈஸ்வரிக்கு ஃபோன் செய்து நடந்தவற்றைக் கூறுகிறாள். ஈஸ்வரி தனது மகனின் கல்லூரிக்கு சென்று திரும்பும் வழியில் அருணையும் பார்க்க நேரிடுகிறது. அருணும் அவள் அருகே நின்று இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். ஜனனி ஆதிரையை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக கூற, அவளுக்கும் பதற்றம் அதிகரிக்கிறது. அருண் சொல்ல முடியாத ஒரு துயரத்தை அடைகிறான் அவனுக்கு சரியாக என்ன நடந்தது என்று புரியாமல் தவிக்கிறான்
விசயம் அறிந்து கரிகாலனும் அவனது அடாவடி தாயும் குணசேகரன் வீட்டுக்கே வந்துவிடுகிறார்கள். மாடியில் குணசேகரனும், கதிரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வருத்தத்தில் இருக்கும் கரிகாலன் மாமா ஆதிரைக்கு ஒன்னும் ஆகிடாதுல்ல என்று கேட்கிறான். யாருக்குடா தெரியும் என்று தனக்கே உரிய அலட்சியத்தனமான பதிலை கூறுகிறான் குணசேகரன். அருகில் என்ன சொல்வது என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறான் கதிர். அவனுக்கு பெரிதாக கவலை இருந்ததுபோலவும் தெரியவில்லை.
கரிகாலனின் தாய் உடனே பதைபதைத்து கரிகாலனை இழுத்துக் கொண்டு வெளியில் செல்கிறாள். என்ன அண்ணே நீயி இடிச்ச புளி மாதிரி உக்காந்து இருக்க என்று கூறிக்கொண்டே அவள் பதறி அடித்து கீழே ஓடுகிறாள்.
போற போக்குல இடிச்ச புளின்னு சொல்லிட்டு போறா பாத்தியா என்று குணசேகரன் கதிரிடம் கூறுகிறான்.
போட்ட கணக்குலாம் வீணா போயிடும் போலிருக்கே என கரிகாலனின் தாய் வருத்தப்பட, அங்கே மருத்துவமனையில் ஆதிரைக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. என்ன ஆகுமோ என்ன நடக்கிறதோ என்கிற பதைபதைப்பில் குடும்பமே இருக்கிறது.