எதிர்நீச்சல் இன்று! சுயநினைவின்றி ஆதிரை! குணசேகரன் சொன்ன வார்த்தை!
சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில் இன்று நடைபெறும் காட்சிகளின் புரோமோ வெளியாகியுள்ளது.
அவளை வீட்டுக்கு கொண்டு வராதீங்க. அப்படியே எங்கயாச்சும் பொதச்சிட்டு வந்துடுங்க. இங்க வந்தா நா பொல்லாதவனா மாறிடுவேன். கதிரு நீயும் போயிட்டன்னா நான் நாண்டுக்கிட்டு செத்துடுவேன்டா என ஆதங்கத்தில் பேசுகிறார் குணசேகரன்.
இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 2nd March 2023
ஆதிரை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அருகிலுள்ள போலிஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பின் அனுமதியுங்கள் எனவும் மருத்துவர் சொல்ல, அதற்கு சக்தி கோபத்தில் பேசுகிறான். உடனே ஜனனி சார் நாங்க எல்லா பொறுப்பையும் ஏத்துக்குறோம் எங்க வேணாலும் கையெழுத்து போட்டு தரோம். நீங்க உயிர காப்பாத்துங்க என கெஞ்சவே டாக்டரும் சரி என அவளுக்கு சிகிச்சை செய்ய ஒப்புக் கொள்கிறார்.
அங்கு பணியிலுள்ள நர்ஸ் ஒருவரை அழைத்து அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு பண்ணுங்க. இந்த பேசன்ட்டுக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய வேலைய தொடங்குங்க. உடனே எமர்ஜென்ஸி வார்ட ரெடி பண்ணுங்க என பதற்றமாக கூறிக்கொண்டே மருத்துவரும் நகர்கிறார்.
நந்தினி வழக்கம்போல தனது புலம்பல்களால் அங்குள்ளவர்களை மேலும் பதைபதைக்க செய்கிறாள். அவளுக்கு ரேணுகாவும் ஜனனியும் ஆறுதல் கூறுகின்றனர். நந்தினி நடந்ததை அத்தையிடம் தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் நாமே அவரது மகளைக் கொன்றுவிட்டதாக கூட பேசுவார். இப்போதே தெரிவிக்கவேண்டும் என்று கூற ஜனனி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இப்போது வேண்டாம். அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திவிடும். முதலில் ஆதிரை குணமாகட்டும் என்கிறாள் ஜனனி. இதையே ஆமோதிப்பது போல பதில் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருக்கிறான் சக்தி.
ஜனனி, குணசேகரன் குடும்பத்தின் மூத்த மருமகளான ஈஸ்வரிக்கு ஃபோன் செய்து நடந்தவற்றைக் கூறுகிறாள். ஈஸ்வரி தனது மகனின் கல்லூரிக்கு சென்று திரும்பும் வழியில் அருணையும் பார்க்க நேரிடுகிறது. அருணும் அவள் அருகே நின்று இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். ஜனனி ஆதிரையை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக கூற, அவளுக்கும் பதற்றம் அதிகரிக்கிறது. அருண் சொல்ல முடியாத ஒரு துயரத்தை அடைகிறான் அவனுக்கு சரியாக என்ன நடந்தது என்று புரியாமல் தவிக்கிறான்
விசயம் அறிந்து கரிகாலனும் அவனது அடாவடி தாயும் குணசேகரன் வீட்டுக்கே வந்துவிடுகிறார்கள். மாடியில் குணசேகரனும், கதிரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வருத்தத்தில் இருக்கும் கரிகாலன் மாமா ஆதிரைக்கு ஒன்னும் ஆகிடாதுல்ல என்று கேட்கிறான். யாருக்குடா தெரியும் என்று தனக்கே உரிய அலட்சியத்தனமான பதிலை கூறுகிறான் குணசேகரன். அருகில் என்ன சொல்வது என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறான் கதிர். அவனுக்கு பெரிதாக கவலை இருந்ததுபோலவும் தெரியவில்லை.
கரிகாலனின் தாய் உடனே பதைபதைத்து கரிகாலனை இழுத்துக் கொண்டு வெளியில் செல்கிறாள். என்ன அண்ணே நீயி இடிச்ச புளி மாதிரி உக்காந்து இருக்க என்று கூறிக்கொண்டே அவள் பதறி அடித்து கீழே ஓடுகிறாள்.
போற போக்குல இடிச்ச புளின்னு சொல்லிட்டு போறா பாத்தியா என்று குணசேகரன் கதிரிடம் கூறுகிறான்.
போட்ட கணக்குலாம் வீணா போயிடும் போலிருக்கே என கரிகாலனின் தாய் வருத்தப்பட, அங்கே மருத்துவமனையில் ஆதிரைக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. என்ன ஆகுமோ என்ன நடக்கிறதோ என்கிற பதைபதைப்பில் குடும்பமே இருக்கிறது.
முந்தைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 1st March 2023
அறைக்கு சென்று பார்த்த ஜனனி, அங்கு ஆதிரை சுயநினைவின்றி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். அங்கு அவள் மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடக்கிறாள். செய்வதறியாது திகைத்து பின் ஒவ்வொருவராக அறைக்கு வருகின்றனர். உடனே அண்ணன் சக்தி அவளைத் தூக்கி கொண்டு ஓடுகிறான்.
அங்கே இவள் மாத்திரை சாப்பிட்ட விசயத்தை குணசேகரன் கேட்டும் கண்டுகொள்ளாமல் இருக்கிறான். என்ன மனுசனோ தெரியவில்லை என மற்றவர்கள் இவரைக் கண்டுகொள்ளாமல் மருத்துவமனை செல்லும் அவசரத்தில் இருக்கிறார்கள்.
ஜனனி, சக்தி இருவரும் பதற்றத்துடன் மருத்துவமனையில் ஆதிரையை அனுமதிக்கிறார்கள்.
அருணின் அண்ணன் அவனை பார்க்கிறான். காருக்குள் இருந்தவனை பார்த்து சட்டை கசங்கியிருக்கு, முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு என்ன ஆச்சு என்று கேட்க, அருணும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க புரோமோ துவங்குகிறது.
நந்தினி, ரேணுகா இருவரும் ஆதிரையை மடியில் போட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவசரத்தில் பயத்தில் அழுது கொண்டே செல்கிறார்கள். இங்கே குணசேகரன் ஒரு பொம்பள புள்ளையால எத்தன பிரச்னைடா என கோபத்தில் கத்துகிறான். நீ அங்க போன அப்பறம் இருக்கு கதிரு என கதிரையும் மிரட்டுகிறான். மறந்துருவேன் அவ்ளோதான் என வீராப்பாய் பேசுகிறான்.
ஜனனி, நந்தினி, ரேணுகா, சக்தி ஆகியோர் ஆதிரையை மருத்துவமனை வார்டுக்குள் கொண்ட செல்ல உதவுகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என திக் திக் மொமண்டுகளைக் காண இன்றிரவு சன்டிவியில் காணுங்கள் எதிர் நீச்சல்