தற்கொலைக்கு முயன்ற ஆதிரை! காப்பாற்றினார்களா?

காதல் பிரச்னையால் தற்கொலைக்கு முயன்ற ஆதிரையைத் தூக்கிச் சென்ற அண்ணன். மருத்துமனையில் அவரைக் காப்பாற்றினார்களா?

Update: 2023-02-28 14:34 GMT

வழக்கமான கிரிஞ்ச் சீன்கள் இல்லாமல் தற்போது ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் எதிர்நீச்சல். சன்டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலேயே மிகவும் சிறப்பான தொடராக இது பெயரெடுத்து வருகிறது. முக்கியமாக இளைஞர்கள் அதிக அளவில் பார்க்கும் தொடராக இது விளங்கி வருகிறது. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதை மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 28th February 2023

கடுமையான கோபத்தில் அருணையும், ஆதிரையையும் அவமானப்படுத்திவிட்டனர். ஆதிரையை அடித்து வீட்டு அறையில் பூட்டி வைத்துவிட அவளோ அண்ணனிடம் நான் செத்துவிடுவதாக கூறுகிறார். இது நாடகம் என்றும் பேசுகிறார்கள்.

ஆதிரை குணசேகரனிடம் தான் அருணைத் தவிர யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டார். அப்படி அருணை திருமணம் செய்யமுடியாமல் ஆனால் தான் உயிரோடு இருக்கமாட்டேன் என்று கூற, கதிர் அவளை அடித்து இழுத்துச் சென்று அறையில் அடைத்து வைக்கிறான்.

ஆதிரை ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் தூக்கமாத்திரைகளை ஒரே நேரத்தில் தின்று தற்கொலைக்கு முயல்கிறாள். இதனால் வீடு பரபரக்கிறது. சக்தி அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுவதாக இன்றைய எபிசோட் புரோமோ மூலம் தெரியவருகிறது.

முன்னதாக, ஆதிரை ஜூஸ் குடிக்கவில்லை என்று அந்த ஜூஸைக் கொண்டு குணசேகரனிடம் நீட்டி நீங்கள் குடிக்கிறீர்களா என்று கேட்கிறாள் நந்தினி.

இதனை பார்த்த குணசேகரன் என்ன கிண்டலா என்று கோபப்படுகிறார். இவ கூட எப்படிடா குடும்பம் நடத்துற என்று கதிரிடம் கேட்கிறார். நீங்கதானே கட்டி வச்சீங்க என்று கூறிய கதிரிடம், வந்த ஒன்னு கூட சரியா அமையலயேடா என்று ஃபீல் பண்ணுகிறார்.

ஆதிரையைத் தேடி வரும் ஜனனிக்கு ஷாக். அவள் நிலையின்றி படுத்து கிடக்கிறாள். சுயநினைவு இல்லை என்பதால் கவலை கொள்கிறாள் ஜனனி. ஆதிரை மாத்திரை சாப்பிட்டாள் என நந்தினி கூற, என்ன சும்மா டிராமா பண்ணிட்டு திரியுறாளா என்று குணசேகரன் கேட்கிறார்.

Tags:    

Similar News