Ethirneechal மிரட்டும் குணசேகரன்! கல்யாணத்தில் வைத்திருக்கும் அதிர்ச்சி!
Ethirneechal மிரட்டும் குணசேகரன்! கல்யாணத்தில் வைத்திருக்கும் அதிர்ச்சி!
ஆதிரையைத் திருமணம் செய்யப் போவது கரிகாலனா? அருணா என்கிற பதைபதைப்பை ரசிகர்கள் உணர்கிறார்கள். அந்த அளவுக்கு திரைக்கதையை கொண்டு போகிறார் இயக்குநர். இந்த வார எபிசோடில் ஜனனிக்கு புதிதாக ஒரு சிக்கல் வர இருக்கிறது. அதை சமாளித்து ஆதிரை - அருண் திருமணத்தை நடத்தி வைப்பாரா ஜனனி?
எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 27th May 2023
கோமாவில் இருக்கும் அப்பத்தா அவ்வப்போது கண் விழித்து ஏதாவது பேச முயற்சிக்கிறார். அப்படி ஒரு சமயத்தில் ஜனனி அப்பத்தாவிடம் பேச நேர்கிறது. அவர் பேச முடியாமல் பேசி தன் மொபைல் குறித்து ஒரு தகவலைச் சொல்ல முயற்சிக்கிறார். அப்பத்தாவிடம் பேசும் ஜனனிக்கு அவரின் மொபைல் எங்கே இருக்கிறது என்கிற யோசனைக் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அந்த மொபைலைத் தேட தன் கணவரான சக்தியையும் அழைத்துக் கொண்டு போக முயற்சிக்கிறார்.
சமயலறையிலிருந்து வெளியே வரும் நந்தினி அங்கே குணசேகரன் தலைமையில் அனைவரும் கூடியிருப்பதை அறிந்து ஒவ்வொருவரிடமாக சென்று காபி வேணுமா என்று கேட்டுக் கொண்டே மாடிக்கு ஏறுகிறாள்.
அங்கே ஜனனியும், சக்தியும் வெளியில் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். எங்கே செல்கிறோம் என்று சக்தி கேட்கும்போது அங்கு நந்தினி வருகிறாள். அவள் கீழே குணசேகரன், ஞானசேகரன், கதிர் மற்ற பட்டாளங்கள் நிறைந்து இருப்பதைக் கூறுகிறாள். அவங்க யாருக்கும் நான் பயப்படல என்று கூறிவிட்டு கீழே வருகிறாள் ஜனனி, கூட சக்தியும் இறங்கி வருகிறான். அவனிடம் வம்பிழுக்கிறான் கதிர். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டைக்கு போக நிற்கிறார்கள்.
குணசேகரன் சத்தம்போட்டு கதிரை அமைதியாக இருக்கச் சொல்கிறான். ஜனனியும் தனக்கு வேலை இருப்பதாகவும் அவசரமாக கிளம்பவேண்டும் எனவும் சொல்லிவிட்டு செல்ல முயற்சிக்கிறார். ஆனால் குணசேகரன் சக்தியை நிற்கச் சொல்லி அவனிடம் கொஞ்சம் பேச வேண்டும் என சொல்கிறான். சக்தியையும் ஜனனியையும் முதலில் மறைமுகமாக மிரட்டும் குணசேகரன், அடுத்து நேரடியாகவே இந்த கல்யாணத்தை யார் நிறுத்த முயற்சிக்காங்களோ அவங்கள என்ன வேணாலும் செய்வேன் என கர்வத்தில் மிரட்டுகிறான்.
ஜனனியும், சக்தியும் வெளியில் கிளம்ப போக, குணசேகரன் கூப்பிட்டு நிற்க வைத்துள்ள இந்த சமயத்தில் ஆடிட்டர் வருகிறார். இப்போது குணசேகரன் அவர்களை வேண்டுமென்றே வெளியில் செல்ல சொல்கிறான். இதனால் ஜனனிக்கு டவுட் வருகிறது. அவள் வெளியில் செல்வது போல சென்று ஃபைலை மறந்து வைத்துவிட்டு வந்ததாகக் கூறி திரும்ப உள்ளே செல்கிறாள். அங்கே அப்பத்தா அறைக்கு செல்லும் அவளை பின் தொடர்ந்து செல்கிறான் குணசேகரன்.
எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 26th May 2023
நல்லவேள இங்க ரேணுகா அக்காவும் ஈஸ்வரி அக்காவும் இல்ல என்று நந்தினி கூறிக்கொண்டே, அது சரி அவங்களுக்கு அங்க என்ன பிரச்னையோ என்று சொல்லுகிறாள்.
அரசு தன் அடியாட்களுடன் அருணைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது சாருபாலா அவருக்கு அழைக்கிறார். அருணை வைத்து குணசேகரன் கேம் ஆடுகிறான் என்று கோபத்தில் கூறுகிறார். அப்போது கோபப்படும் சாருபாலா, தன் அலுவலகத்துக்கு வந்த குணசேகரனிடம் கடு கடு என எரிந்து விழுகிறார். இது என்ன வென்று புரியாத குணசேகரன் வீட்டுக்கு செல்கிறார்.
அங்கு ஈஸ்வரி, ரேணுகாவை குணசேகரனின் உறவினர்கள் இவர்கள் என்ன சமையல் செய்ய சலித்துக் கொள்கிறார்கள் என குணசேகரனிடமே புகார் செய்கிறார்கள். அதற்கு ஈஸ்வரி சில விசயங்களைக் கூறுகிறார். வீட்டில் மொத்தம் 20 பேர் இருக்கிறோம். குழந்தைகளுக்கு 3, பெண்களுக்கு 4, ஆண்களுக்கு 5,6 தோசை என ஒரு நாளைக்கே 100க்கும் அதிக எண்ணிக்கையில் தோசை சுட வேண்டும். அதில் ஒருவருக்கு வெங்காயத்தோசை, ஒருவருக்கு நெய் தோசை, இன்னொருவருக்கு முட்டை தோசை, தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி என ஆளாளுக்கு ஒரு வகையில் சுட வேண்டியிருக்கிறது. இதை செய்ய 3 மணி நேரம் ஆகும். அதுவும் சூடா சாப்பிட வேண்டும். என அவர் செய்யும் வேலைகளை அடுக்குகிறார்.
அலங்காரம் செய்யப்பட்டு பளபள என இருக்கும் பொம்மையைப் போன்றுதான் நாங்களும் பார்க்க பள பளவென இருக்கும் என்று கூறியதும் இதுவரை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த குணசேகரன் திடீரென போதும்மா நிறுத்துங்கமா என்று சத்தமிடுகிறான். அப்போது குணசேகரனின் அம்மா பேச ஆரம்பிக்கிறார். தனது மனதில் ஆயிரத்தெட்டு கஷ்டங்கள் இருப்பதை ஆணவம் குறையாமல் எடுத்து கூறுகிறார் குணசேகரன். தன் தம்பிகளுக்குள் சண்டையை மூட்டி விட்டு ஞானம் ஒரு பக்கம் போயிட்டான். கதிர் கோவிலுக்கு போயிட்டான். இப்ப நான் மட்டும் தனியா கெடந்து கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் என்று கூறுகிறான்.
ஆமா நான் டீ கேட்டேனே என்ன ஆச்சு என்று கேட்டுவிட்டு மாமா நீங்க மோர் கேட்டீங்கள்ல. பாருங்க உங்க மக ஒன்னர மணி நேரமா பேசிட்டு இருக்கா எங்க சொல்றத கேக்குறா என்று கூறிவிட்ட போங்க டீ கொண்டு வாங்க என்று அனுப்புகிறார் குணசேகரன்.
கோவிலில் கரிகாலன் தன் நண்பனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான். இந்த பக்கம் ஜனனி, சக்தி கவலையில் உக்கார்ந்து இருக்கிறார்கள். பூஜைக்கு ரெடி ஆகிவிட்டது வாங்க என்று தெரிவிக்கிறார். அந்த நேரத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் நண்பர் ஆதிரையுடன் கரிகாலனை வீடியோ எடுத்து நம்ம தலைவரோட பாட்ட பேக்ரவுண்டல போட்டா செம்மயா இருக்கும் என்று கூறுகிறார்.
கரிகாலனையும் ஆதிரையையும் ஒரே இடத்தில் உக்கார வைக்கின்றனர். ஆனால் ஆதிரை அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. நந்தினியும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் அங்கு கொஞ்சம் குழப்பம் ஏற்படுகிறது. நந்தினி அத்தையிடம் கால் பண்ணி கேளுங்க என்கிறாள். கரிகாலன் ஆதிரையை கடுப்பேத்திக் கொண்டிருக்கிறான் இதனால் அவள் கோபமடைகிறாள். பூஜையும் நல்லபடியாக முடிவடைகிறது.
கௌதமும் அருணும் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புகின்றனர். அந்த நேரத்தில் கௌதம் வெளியே செல்லவேண்டும் என்று கூறுகிறான். கௌதம் மிஸ்டு கால் கிடப்பதைப் பார்த்து கௌதம் சக்திக்கு கால் செய்கிறான். அப்போது ரூமை விட்டு வெளியே வரவேண்டாம். தான் திரும்பவும் கால் செய்வதாக கூறி வைக்கிறான்.
வீட்டிலுள்ள ரேணுகா, ஈஸ்வரி, அம்மா விசாலாட்சி மற்ற உறவினர்களை எல்லாம் அழைத்து முன் வீட்டில் குணசேகரன் பேசிக்கொண்டிருக்கிறார். அதில் முக்கியமாக வீட்டிலுள்ளோர்களிடம் சத்தியம் வாங்குவதாக காட்டப்படுகிறது. இந்த வீட்டில் இருக்குறவங்க ஆதிரை - கரிகாலன் கல்யாணத்துல எந்த குழப்பத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதாக சத்தியம் செய்ய வேண்டும் என்று கேட்பதாக புரோமோவில் காட்டப்படுகிறது. அதேநேரம் ரேணுகா நாங்கள் ஏன் சத்தியம் செய்ய வேண்டும் என்று எகிறுவதாகவும் காட்டப்படுகிறது.
இதனையடுத்து கோவிலில் கரிகாலனும் அவனது நண்பனும் மொபைலில் வீடியோ எடுத்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவன் நண்பன் மொபைலில் இருக்கும் நபரை அடையாளம் கண்டுபிடிக்கிறான் கரிகாலன். அது வேறு யாருமில்லை ஆதிரையின் காதலனான எஸ்கேஆர் தம்பி அருண்தான் என்று கத்தி கூறுகிறான். இதனால் சக்தி, ஜனனி ஆகியோர் கொஞ்சம் திடுக்கிடுகின்றனர். ஆதிரை அதிர்ச்சியுடன் எழுகிறாள். இவ்வாறு புரோமோ முடிகிறது.
எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 29th May 2023
ஆதிரை திருமணத்துக்கு சம்மதித்து குணசேகரன் மூக்கை அறுக்க ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதனால் கரிகாலன் - ஆதிரை திருமணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.