ஆதிரையின் காதலுக்காக குணசேகரனை நேரடியாக எதிர்க்கும் ஜனனி!
ஆதிரை - அருண் காதலுக்காக ஜனனி எந்த சண்டைக்கும் போக தயாராகிவிட்டாள். குணசேகரனை எதிர்த்து போராட்டத்துக்கு ரெடியாகி, சவாலும் விடுகிறார். ஆதிரை சம்மதம் இல்லாமல் அவள் திருமணம் நடக்காது என்று அவள் நேரடியாகவே சொல்லிவிட்டாள்
வழக்கமான கிரிஞ்ச் சீன்கள் இல்லாமல் தற்போது ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் எதிர்நீச்சல். சன்டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலேயே மிகவும் சிறப்பான தொடராக இது பெயரெடுத்து வருகிறது. முக்கியமாக இளைஞர்கள் அதிக அளவில் பார்க்கும் தொடராக இது விளங்கி வருகிறது. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதை மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.
இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 25th February 2023
ஐஸ்வர்யாவின் பிறந்த நாளை கொண்டாட காத்திருந்தவர்களுக்கு குணசேகரனின் கோபம் எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனால் அவரை மீறி என்ன செய்ய என அனைவரும் அமைதியாகிவிட்டனர். ஐஸ்வர்யாவும் ஏமாற்றத்துடன் நான் போயி படுக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். அதன்பிறகு ஜனனி சர்ப்ரைஸாக ஐஸ்வர்யாவின் பள்ளி தோழிகளை அழைத்து வந்து பிறந்தநாளையும் கொண்டாடச் செய்தார். அப்போதும் குணசேகரன் கோபப்பட, ஐஸ்வர்யா அவரை எதிர்த்து பேசுகிறார்.
கேக் கொடுத்தாலும் அவர் சாப்பிடுவாரா இல்லையா என்பதை அறியாமல், கிச்சனில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நந்தினி ஈஸ்வரியிடம் கேக் சாப்பிட்டாரா மாமா என்று கேட்க, அவளுக்கும் நினைவில்லை தான் சரியாக பார்க்கவில்லை என்று கூறிவிட்டாள். சரி அத விடுவோம் என்று நந்தினி கூற, சித்தி நாங்க அத எப்பயோ விட்டுட்டோம். ஆமா நான்தான் பேசிட்டிருக்கேன்ல.. என நந்தினி கூறுகிறாள்.
அடுத்தநாள் ஆதிரைக்கு செண்டர் வரை செல்லவேண்டிய வேலை இருக்கிறது. இதனை அண்ணனிடம் கூறாமல் எப்படியும் வெளியே செல்ல முடியாது அப்படி சென்றாலும் ஏன் எதற்கு எங்கே என கேள்வி வரும் அதனால் அண்ணனிடம் சொல்லிவிட்டே செல்லலாம் என்று ஆதிரை தயங்கி தயங்கி அண்ணே நா சென்டர் வரை போயிட்டுவந்துடுறேன் என்று கேட்கிறாள்.
அதற்கு குணசேகரன் சரி நீ கூட கரிகாலனையும் கூட்டி போ என்று சொல்கிறார்.
ஆதிரையோ சென்டர் வரை போறதுக்கு எதுக்கு கரிகாலன் என்று கேட்கிறாள். அதற்கு குணசேகரன் கோபத்துடன் முறைத்து பார்த்து கூட்டிட்டு போறதா இருந்தா போகலாம் இல்லன்னா வீட்டுக்குள்ள போ என அதட்டுகிறார்.
நந்தினியும் ரேணுகாவும் தலையை சொரிந்து கொண்டு நிற்கிறார்கள்.
குணசேகரன் ஆதிரை - கரிகாலன் திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் அவர் பாட்டுக்கு ஏற்பாடு செய்துகொண்டு வருகிறார். மண்டப ஓனரை அழைத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதற்கு ஜனனி ஆதிரை சம்மதம் இல்லாமல் அவருக்கு எப்படி திருமணம் செய்து வைக்கலாம் அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கலாம் என ஜனனி கேட்கிறாள்.
உடனே கோபப்பட்ட குணசேகரன் ஏய் என கத்துகிறான். உடனே ஜனனி இந்த நிச்சயம் நடக்காது என்று கூறுகிறாள். பதில் ஏதும் சொல்ல முடியாமல் குணசேகரன் கோபத்தில் கொந்தளிக்கிறார்.
முன்கதை சுருக்கம் | Ethirneechal Serial update
நாச்சியப்பனும், பார்வதியும் அவர்களின் பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். சில வருடங்களில் அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறக்கிறது. பார்வதியின் அண்ணன் திருவேங்கடமும் அவரது மனைவியும் என அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
நாச்சியப்பன் முதல் குழந்தையான ஜனனியை பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்க்கிறார். ஒரு கிரிஞ்ச் பேரண்ட் போல பூமர் அங்கிள் போல அவரை வெளியில் விடாமல் படி படி படி என திணித்து அவரை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். ஜனனியும் குடும்ப கஷ்டம் புரிந்து நன்கு படித்து வருகிறார். தகப்பனான நாச்சியப்பன் அனைத்து விசயத்திலும் கண்டிப்பாக இருக்கிறார். என்ன உடை உடுத்துவது யாரிடம் பழகுவது என்பது உட்பட பல கட்டுப்பாடுகள்.
குணசேகரன், அவருக்கு 3 தம்பிகள், ஒரு தங்கை. சிறு வயதிலேயே தந்தையை பறிகொடுத்த குணசேகரன் அம்மா, தம்பி, தங்கையை ஒத்த ஆளாக நின்று உழைத்து காப்பாற்றுகிறார். பெரியவரானதும் தன் சொந்த உழைப்பால் புது பணக்காரர் ஆகிறார். முன்னதாக அவருக்கு நன்கு படித்த பெண்ணைத் திருமணம் செய்ய ஆசை, அதற்காக ஒரு பெண்ணை பார்க்க அந்த பெண் இவர் படிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக இவரை வேண்டாம் என சொல்லிவிடுகிறது. அதுமட்டுமின்றி இவரின் எதிரியான குடும்பத்தில் வாக்கப்பட்டு செல்கிறது. அங்கும் 4 அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள்.
குணசேகரனின் தம்பிகள் ஒவ்வொருவருக்காக திருமணம் செய்துகொண்டு கடைசி தம்பிக்கு திருமணம் ஆகும்போதுதான் நமக்கு சீரியலே துவங்குகிறது. அதில் ஜனனி மணப்பெண்ணாக சக்தியை மணமுடிக்க வருகிறார்.
ஜனனியின் மாமா மகளுக்கோ இந்த குடும்பம் குறித்து ஆரம்பத்திலேயே சந்தேகம் இருக்கிறது. ஆனால் இந்த குடும்பத்தில் மூத்த மருமகளான ஈஸ்வரி குணசேகரன் பெரிய கம்பெனியின் சிஇஓ, இரண்டாவது மருமகள் ரேணுகா ஞானசேகரனும் ஒரு கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். மூன்றாவது மருமகள் நந்தினி கதிர்வேலனும் அப்படியே. தங்கை ஆதிரைச்செல்வி நல்ல கல்லூரியில் எம்பிஏ படிக்கிறாள். இப்படி ஒரு குடும்பம் கிடைக்க நாம் குடுத்து வைத்திருக்க வேண்டும் என நினைத்து பாழாங்கிணற்றில் ஜனனியை விழச் செய்கிறார்கள் .
அடுத்தடுத்து என்ன நடந்தது. அந்த குடும்பத்தில் ஜனனி நடத்தும் போராட்டமே சீரியலின் அடுத்தடுத்து எபிசோட்கள்.