Ethirneechal ஜீவானந்தம் என்ட்ரி! வேற லெவலுக்கு எதிர்பார்க்கப்படும் எதிர்நீச்சல்!

அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் ஜீவானந்தம் அடுத்தடுத்து சூழ்ச்சிகளை உருவாக்குகிறாரா? அல்லது முடிச்சுகளை அவிழ்க்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Update: 2023-06-01 13:28 GMT

அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் ஜீவானந்தம் அடுத்தடுத்து சூழ்ச்சிகளை உருவாக்குகிறாரா? அல்லது முடிச்சுகளை அவிழ்க்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 1st June 2023

அப்பத்தாவின் மொபைலிலிருந்து எண் கிடைத்தும் ஜீவானந்தத்தை நெருங்க முடியாமல் தவிக்கும் ஜனனி ஒருபுறம், ஜீவானந்தத்தை சந்திக்க திட்டமிடும் கௌதம் ஒருபுறம் என எதிர்நீச்சல் சீரியல் அடுத்தடுத்து மிகவும் சூடுபிடிக்கும் எபிசோட்களுடன் வெளியாகவுள்ளது.

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 31st May 2023

கௌதமும் அருணும் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புகின்றனர். அந்த நேரத்தில் கௌதம் வெளியே செல்லவேண்டும் என்று கூறுகிறான். கௌதம் மிஸ்டு கால் கிடப்பதைப் பார்த்து கௌதம் சக்திக்கு கால் செய்கிறான். அப்போது ரூமை விட்டு வெளியே வரவேண்டாம். தான் திரும்பவும் கால் செய்வதாக கூறி வைக்கிறான்.

வீட்டிலுள்ள ரேணுகா, ஈஸ்வரி, அம்மா விசாலாட்சி மற்ற உறவினர்களை எல்லாம் அழைத்து முன் வீட்டில் குணசேகரன் பேசிக்கொண்டிருக்கிறார். அதில் முக்கியமாக வீட்டிலுள்ளோர்களிடம் சத்தியம் வாங்குவதாக காட்டப்படுகிறது. இந்த வீட்டில் இருக்குறவங்க ஆதிரை - கரிகாலன் கல்யாணத்துல எந்த குழப்பத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதாக சத்தியம் செய்ய வேண்டும் என்று கேட்பதாக புரோமோவில் காட்டப்படுகிறது. அதேநேரம் ரேணுகா நாங்கள் ஏன் சத்தியம் செய்ய வேண்டும் என்று எகிறுவதாகவும் காட்டப்படுகிறது.

இதனையடுத்து கோவிலில் கரிகாலனும் அவனது நண்பனும் மொபைலில் வீடியோ எடுத்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவன் நண்பன் மொபைலில் இருக்கும் நபரை அடையாளம் கண்டுபிடிக்கிறான் கரிகாலன். அது வேறு யாருமில்லை ஆதிரையின் காதலனான எஸ்கேஆர் தம்பி அருண்தான் என்று கத்தி கூறுகிறான். இதனால் சக்தி, ஜனனி ஆகியோர் கொஞ்சம் திடுக்கிடுகின்றனர். ஆதிரை அதிர்ச்சியுடன் எழுகிறாள்.

கோமாவில் இருக்கும் அப்பத்தா அவ்வப்போது கண் விழித்து ஏதாவது பேச முயற்சிக்கிறார். அப்படி ஒரு சமயத்தில் ஜனனி அப்பத்தாவிடம் பேச நேர்கிறது. அவர் பேச முடியாமல் பேசி தன் மொபைல் குறித்து ஒரு தகவலைச் சொல்ல முயற்சிக்கிறார். அப்பத்தாவிடம் பேசும் ஜனனிக்கு அவரின் மொபைல் எங்கே இருக்கிறது என்கிற யோசனைக் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அந்த மொபைலைத் தேட தன் கணவரான சக்தியையும் அழைத்துக் கொண்டு போக முயற்சிக்கிறார்.

சமயலறையிலிருந்து வெளியே வரும் நந்தினி அங்கே குணசேகரன் தலைமையில் அனைவரும் கூடியிருப்பதை அறிந்து ஒவ்வொருவரிடமாக சென்று காபி வேணுமா என்று கேட்டுக் கொண்டே மாடிக்கு ஏறுகிறாள்.

அங்கே ஜனனியும், சக்தியும் வெளியில் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். எங்கே செல்கிறோம் என்று சக்தி கேட்கும்போது அங்கு நந்தினி வருகிறாள். அவள் கீழே குணசேகரன், ஞானசேகரன், கதிர் மற்ற பட்டாளங்கள் நிறைந்து இருப்பதைக் கூறுகிறாள். அவங்க யாருக்கும் நான் பயப்படல என்று கூறிவிட்டு கீழே வருகிறாள் ஜனனி, கூட சக்தியும் இறங்கி வருகிறான். அவனிடம் வம்பிழுக்கிறான் கதிர். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டைக்கு போக நிற்கிறார்கள்.

குணசேகரன் சத்தம்போட்டு கதிரை அமைதியாக இருக்கச் சொல்கிறான். ஜனனியும் தனக்கு வேலை இருப்பதாகவும் அவசரமாக கிளம்பவேண்டும் எனவும் சொல்லிவிட்டு செல்ல முயற்சிக்கிறார். ஆனால் குணசேகரன் சக்தியை நிற்கச் சொல்லி அவனிடம் கொஞ்சம் பேச வேண்டும் என சொல்கிறான். சக்தியையும் ஜனனியையும் முதலில் மறைமுகமாக மிரட்டும் குணசேகரன், அடுத்து நேரடியாகவே இந்த கல்யாணத்தை யார் நிறுத்த முயற்சிக்காங்களோ அவங்கள என்ன வேணாலும் செய்வேன் என கர்வத்தில் மிரட்டுகிறான்.

ஜனனியும், சக்தியும் வெளியில் கிளம்ப போக, குணசேகரன் கூப்பிட்டு நிற்க வைத்துள்ள இந்த சமயத்தில் ஆடிட்டர் வருகிறார். இப்போது குணசேகரன் அவர்களை வேண்டுமென்றே வெளியில் செல்ல சொல்கிறான். இதனால் ஜனனிக்கு டவுட் வருகிறது. அவள் வெளியில் செல்வது போல சென்று ஃபைலை மறந்து வைத்துவிட்டு வந்ததாகக் கூறி திரும்ப உள்ளே செல்கிறாள். அங்கே அப்பத்தா அறைக்கு செல்லும் அவளை பின் தொடர்ந்து செல்கிறான் குணசேகரன்.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 2nd June 2023

ஆதிரை திருமணத்துக்கு சம்மதித்து குணசேகரன் மூக்கை அறுக்க ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதனால் கரிகாலன் - ஆதிரை திருமணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். 

Tags:    

Similar News