திருமண நாளில் நடக்கும் அதிரடி! குணசேகரனை நேருக்கு நேர் எதிர்க்கும் ஜனனி! ஜெயிப்பாரா?

திருமண நாளில் குணசேகரனை நேருக்கு நேர் எதிர்க்கும் ஜனனி! ஜெயிப்பாரா? ஆதிரை - அருண் திருமணம் நடக்குமா?

Update: 2023-06-13 04:45 GMT

அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் ஜீவானந்தம் அடுத்தடுத்து சூழ்ச்சிகளை உருவாக்குகிறாரா? அல்லது முடிச்சுகளை அவிழ்க்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 13th June 2023

இன்றைய நாள் எபிசோடில் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு நடைபெறும் நிகழ்ச்சிக்காக ஜான்சி ராணி தான் வாங்கிக் கொடுத்த சேலையை அணிந்து வரும்படி ஆதிரையிடம் சொல்ல, அதற்கு அவள் வழக்கம்போல முடியாது என்று சொல்ல சண்டை மீண்டும் ஆரம்பிக்கிறது.

ஜான்சி ராணி அடம்பிடிக்க பதிலுக்கு பிடி கொடுக்காமல் ஆதிரை பேச, அந்த நேரத்தில் ஆதிரையின் அண்ணன் குணசேகரன் அங்கு வருகிறார். தனக்கே உரிய கர்வத்தில் என்னம்மா ஏன் சேலைய கட்ட மாட்டியா என்று கோபத்தில் பேச, அங்கு இருந்த ஜனனி நம்ம காரியம் நடக்கணும்னா நாமதான் கொஞ்சம் இறங்கி போகணும், சேலைய மாத்திட்டு வா என்று ரகசியமாக சொல்லி அவளை சேலை மாற்றச் செய்கிறாள்.

இந்த சமயத்தில் ஜான்சி ராணி, கதிர் மற்ற உறவினர்களில் தண்ணி பார்ட்டிகள் எல்லாரும் நன்றாக குடித்துவிட்ட திருமண மண்டபத்தில் நடக்கும் கச்சேரியில் மேடை ஏறி குத்தாட்டம் போடுகின்றனர். வரிசையாக பாடல்கள் பாட அங்கே ஜான்சியுடன் சேர்ந்து கதிர் கண்டபடி ஆட்டம் போடுகிறான். கூடவே புதுமாப்பிள்ளை கரிகாலனும் புகுந்த ஆட, அந்த நேரத்தில் குணசேகரன் அங்கு வருகிறார். கூடவே தம்பி ஞானசேகரனும் வருகிறான்.

அங்கு நடக்கும் கூத்தைப் பார்த்து மனது வெம்பி ஏம்பா என் மானம் மரியாதை எல்லாம் போயிடும் போலயேப்பா. குணசேகரன் வீட்டு கல்யாணத்துல இப்படி கூத்து நடக்குதே என மனசு நொந்து பேசுகிறான். கதிரையும் ஜான்சிராணியையும் கூப்பிட்டு பார்த்தும் அவர்கள் காதில் எதுவும் விழவில்லை என்பதால் மேலும் கோபம் அதிகரிக்கிறது குணசேகரனுக்கு. கோபத்தில் நேரடியாக மேடைக்கு செல்ல முற்படும்போது அவனைத் தடுத்து நிறுத்தும் ஞானம் அங்க போன உங்க மரியாதை எல்லாம் போயிடும் என்கிறான்.

அதற்கு குணசேகரன் அதான் எல்லா மானமும் போயிடிச்சே. இனிமே என்ன இருக்கு என்கிறான். அதற்கு குணசேகரனின் தம்பி ஞானசேகரன் கொஞ்சம் பொறுமையா இருங்கன்னே. எல்லாம் நம்ம சம்பந்தி சரக்குதான் என மீண்டும் கூறுகிறான். இதனால் கடுப்பான குணசேகரன் அத வேற ஓயாம சொல்லாதப்பா. கல்யாணம் மட்டும் நடக்கட்டும் இந்த ஜான்சி ராணிக்கு கொஞ்சம் காசு குடுத்து இத நிறுத்த சொல்லிடுவோம்.

கள்ளத்தனமா சாராயம் காய்ச்சா போலீஸு புடிச்சிட்டு தலைல பானைய தூக்கி வச்சி கொண்டு போகும். குணசேகரன் சம்பந்தி சாராய வழக்கில் கைதுனு பெருசா பேப்பர்லலாம் போடுவான் என்று கூறுகிறார் குணசேகரன். பின் அங்கிருந்து குணசேகரனை ஞானம் அழைத்துச் சென்று விடுகிறான்.

இரவு சாப்பாடு போடும் நேரம் வருகிறது. அங்கு கரிகாலன் தன்னுடைய சித்தியை சாப்பிட விடாமல் தடுக்கிறான். அவனுக்கு ஆதிரையுடன் தான்தான் முதலில் சாப்பிடவேண்டும் மற்றவர்கள் அப்றம் சாப்பிடலாம் என்று எண்ணம். ஜான்சி ராணியிடம் ஆதிரையைக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கிறான். தரதரவென இழுத்துக் கொண்டு வருகிறாள் ஜான்சி. ஆதிரை தன்னை விடச் சொல்லி கேட்டும் அவள் விடுவதாக இல்லை. பின்னாடியே ஜனனியும் வருகிறாள். இங்கே ஒரே கூத்தாக நடந்துகொண்டிருக்கிறது.

அம்மாவை மருத்துவமனையிலிருந்து பார்த்துவிட்டு திரும்பிய ரேணுகா நேரடியாக மண்டபத்துக்கே வருகிறார். அங்கு அச்சடித்து வைக்கப்பட்ட பேனர்கள், போஸ்டர்களைப் பார்த்து கமெண்ட் செய்துகொண்டே மாடியில் ஏறுகிறார். வந்தவர்களை வரவேற்றுவிட்டு, சமையலறை பக்கமாக நந்தினியும், மாமியார் விசாலாட்சியும் இருப்பதைப் பார்த்து அங்கு வந்து சேர, சாப்பிடும் இடத்தில் நடக்கும் கூத்தை பார்க்கிறாள். பின் மாமியாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார்கள் நந்தினியும் ரேணுகாவும்.

அந்த நேரத்தில் குணசேகரன் அங்கு வர ஆதிரையை மிரட்டுகிறான். ஜனனியை விரட்டுகிறான். அதன்பின்னர் ஜான்சி ராணியிடம் நல்ல சோத்த அமுக்கி வய்யிமா வாயில என்று கூறிச் செல்கிறான்.

இந்த பக்கம் ஆதிரை - அருண் திருமணத்துக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறான் சக்தி. கல்யாணத்தை நடத்தி வைக்கும் ஐயருக்காக கோவிலில் காத்திருக்கிறான். கொஞ்ச நேரத்தில் ஐயர் வருகிறார். அவர் நாளைக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும் அந்த லிஸ்ட்டை அனுப்பியிருக்கிறேன். நானும் சில பொருட்கள் வாங்கிட்டு வரணும் அதுக்கு 3000 ரூபாய் பணம் நீங்க தரணும் என்று கூற பணத்தை எண்ணி கொடுக்கிறான் சக்தி.

மீண்டும் திருமண மண்டபத்தில் குணசேகரன் தம்பி ஞானசேகரனிடம் புலம்பிக் கொண்டிருக்கிறான். அப்போது ரேணுகா மோர் கொண்டு வருகிறார். அதனைக் கொண்டு வரும் சாக்கில் ஒட்டு கேட்குறியா என்று குணசேகரன் கேட்க, அதற்கு தனக்கு நேரமில்லை என்று சொல்கிறாள் ரேணுகா. சக்தி எங்க ஆளையே காணோம் என்று கேட்கும்போது ஏதேதோ சொல்லி சமாளிக்கிறாள். பின் அங்கிருந்து ரேணுகா சென்ற பிறகு ஞானத்திடம் இவங்க போக்கே சரியில்ல. நந்தினி எதுக்கெடுத்தாலும் எதிர்த்து பேசுறா, உன் பொண்டாட்டி எதுவுமே பேசாம எல்லாமே ரியாக்ஷன்தான். அம்மா எதுக்கெடுத்தாலும் அழுகுது. இவங்க சரி இல்ல. ஏதோ திட்டம் போடுறாங்க.

எல்லா திட்டத்தையும் எப்படி தவிடுபொடி ஆக்கிட்டு கல்யாணத்த நடத்தி முடிக்குறேன் பாரு ஞானம் என்கிறான் குணசேகரன். 

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 12th June 2023

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சுவாரசியமான கதைக்களங்களில் ஒன்று அருணின் பிரச்சனைக்குரிய திருமணத்தைச் சுற்றி வருகிறது, இது பல நாட்களாக ரோலர்கோஸ்டர் சவாரியை ஒத்த தீவிர உணர்ச்சிகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கவர்ச்சியான கதைக்களம் பார்வையாளர்களை கவர்ந்தது, நகரத்தின் பேசுபொருளாக மாறியது. இதன் விளைவாக, பார்வையாளர்களின் மைண்ட் வாய்ஸால் இயக்கப்பட்ட இயக்குனர், ஜீவானந்தின் நுழைவை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியின் தீவிரத்தை அதிகரிக்க ஒரு பாராட்டத்தக்க முயற்சியை எடுத்துள்ளார். இந்த வளர்ச்சி ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு அலையை உருவாக்கியுள்ளது, வரவிருக்கும் அத்தியாயங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறது, ஏனெனில் கதை பரபரப்பான திருப்பத்தை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருணின் திருமணம் பல சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ஒரு கொந்தளிப்பான பயணம் போன்றது, இது விசுவாசமான ரசிகர்களிடையே விவாதம் மற்றும் ஊகத்தின் தலைப்பாக மாறியுள்ளது. ஜீவானந்தின் கதாபாத்திரத்தை கதைக்குள் கொண்டு வருவதற்கான இயக்குனரின் முடிவு, நிகழ்ச்சியின் ஈர்ப்பைத் தக்கவைத்து, பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு ஒரு சிந்தனை அணுகுமுறையை நிரூபிக்கிறது. இந்த மூலோபாய நகர்வு உற்சாகத்தை மீண்டும் தூண்டி, பார்வையாளர்களை அவர்களின் திரையில் கவர்ந்திழுக்கும்.

வரவிருக்கும் எபிசோடுகள் ஆவலுடன் காத்திருக்கின்றன, ஏனெனில் ரசிகர்கள் கதையின் தீவிரத்தை எதிர்பார்க்கிறார்கள், புதிய திருப்பங்கள் மற்றும் திருப்பங்களை உறுதியளிக்கிறார்கள். பார்வையாளர்களின் தீவிர எதிர்பார்ப்பு, கதாபாத்திரங்களுடனான அவர்களின் ஆழமான தொடர்பிற்கும், பிடிமான கதையை மீண்டும் ஒருமுறை வெளிவருவதைக் காணும் அவர்களின் விருப்பத்திற்கும் சான்றாக நிற்கிறது. கதைக்களம் தடிமனாகும்போது, ​​'எதிர்நீச்சல்' அதன் கவர்ச்சிகரமான கதைசொல்லல் மற்றும் தொடர்புடைய கதாபாத்திரங்கள் மூலம் அதன் பார்வையாளர்களை தொடர்ந்து கவர்ந்திழுக்கிறது, ஒவ்வொரு அத்தியாயமும் பார்வையாளர்களை அடுத்ததை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 14th June 2023

ஜனனி, குணசேகரனுக்கு இடையில் முந்திக் கொண்டு வேலை பார்த்த ஜீவானந்தம், பட்டம்மாளின் கைரேகையை எடுத்து அதிர்ச்சியளிக்கிறார். அப்பத்தா அறையில் கண்காணிப்புக்காக ரகசிய கேமரா பொருத்தியிருந்த தன்னையே ஏமாற்றி குணசேகரன்தான் கைரேகை எடுத்துவிட்டதாக நினைக்கிறான் ஜனனி. 

Tags:    

Similar News