Ethirneechal அரசிடம் மாட்டிக்கொண்ட அருண்! நகை வாங்க செல்லும் குணசேகரன்!

அருணிடம் அரசு ஆதிரை உனக்கு வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கியா என கேட்கிறார். இதனால் இன்றைய எபிசோடில் ஆதிரையை திருமணம் செய்ய அருணுக்கு சம்மதம் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

Update: 2023-05-10 09:30 GMT

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 10th May 2023


Full View


அருணுக்கு ஆதிரை மீது காதல் இருப்பது அவ்வப்போது தெரியவந்து கொண்டே இருக்கிறது. அன்று ஜனனி பேசும்போதும் சரி, வீட்டில் ஆதிரை அழும் போதும் சரி அருணுக்கு காதல் இருப்பது தெரிந்தது. ஆனால் தன் அண்ணனை அவமானப்படுத்தியதற்காகவும் அவருக்கு மேலும் எந்த மனக்கசப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தன் காதலை மறைத்து ஆதிரையை வெறுப்பதாகவே தெரிகிறது. இதனை அரசு தன் தம்பி அருணிடமே கேட்கிறார். அருண் இந்த விசயத்தில் உறுதியாக இருக்கியா என்று அவர் கேட்டுவிடுகிறார்.

அங்கே குணசேகரன் வீட்டில் நாள் நன்றாக இருப்பதாகவும் நகை எடுக்கலாம் என்றும் குணசேகரன் அம்மாவிடம் கேட்கிறார். அதற்கு அம்மா உன் விருப்பப்படியே செய்யிப்பா என்று கூறுகிறார். ஆனால் அவரது பேச்சில் கொஞ்சம் கலக்கம் இருப்பதை அறிந்துகொண்ட குணசேகரன் என்ன ஆச்சு ஆதிரையும் எஸ்கேஆர் தம்பியும் மனசுக்குள்ள ஓடிட்டு இருக்காங்களா என்று கேட்கிறார். 

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 9th May 2023

நந்தினியின் அப்பா, ஈஸ்வரியின் அப்பா, ரேணுகாவின் அம்மா என மூவருக்கும் சாப்பாடு பரிமாறி விழுந்து விழுந்து கவனிக்கிறான் கதிர். இதனைப் பார்த்த ரேணுகா அவள் அம்மாவிடம் நீங்க ஏன் இங்க வந்தீங்க. சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போங்க நாங்க வேலை இருக்கும்போது கூப்பிட்டு அனுப்புறோம் என்று சொல்கிறாள். உடனே கதிர் அவங்க யாரும் இப்ப போகமாட்டாங்கள். ஆதிரை கல்யாணம் முடியுற வரைக்கும் இங்கதான் இருக்க போறாங்க. கல்யாணம் காட்சின்னா சம்பந்திங்க இல்லாம எப்படின்னு அண்ணன் வர சொல்லிருக்காரு.

உடனே நந்தினியும் தன் பங்குக்கு ஏதோ பேச, உடனே மாமியார் அவளை அதட்டுகிறாள். அதான் மூத்தவன் சொல்லிருக்கான்ல அப்ப அதன்படிதான் நடக்கும். நீ எதுவும் பேசாத என்று கூறிவிட்டு, கதிரிடம் நீங்க முடிவு பண்ணிட்டீங்கள்லப்பா அப்படியே நடக்கட்டும் என்கிறாள். அடுத்து வீட்டு மருமகள்கள் நால்வரும் நந்தினி, ஈஸ்வரியின் அப்பாக்களுடன் தனியே நின்று பேசுகிறார்கள்.

குணசேகரன் தன் வீட்டில் வைத்தே அப்பத்தாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் வேறு யாரையும் அவரைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். அதனைக் கண்காணிக்க கதிரிடம் கண்டிப்பாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அப்பத்தாவை அவ்வப்போது ஜனனி அவரது அறையில் சென்று பார்த்து வருகிறார். குணசேகரனும் கதிரும் இல்லாத சமயத்தில் சென்று வந்த ஜனனி, இப்போது கதிரிடம் மாட்டிக் கொள்கிறாள்.

ஜனனி அப்பத்தாவைக் காண வரும்போது கதிர் அவளைப் பார்த்து விடுகிறான். உங்கள எப்படியும் பழைய நிலைமைக்கு கொண்டு வந்துடுவேன் அப்பத்தா என ஜனனி பேசிக் கொண்டிருக்கையில், கதிர் ஜனனி என அழுகுரலில் கிண்டல் செய்கிறான். இதனால் கடுப்பான ஜனனி அவனைப் பார்த்து முறைக்கிறாள்.

அவளை இழுத்துக் கொண்டு வெளியே வருகிறான் கதிர். அப்போது அவனின் தம்பி சக்தியை கத்தி அழைக்கிறான். டேய் வாடா இங்க. இவளுக்கு என்ன உரிமை இருக்கு இந்த வீட்டுல. இதோ என்னோட மூத்த அண்ணி இவங்களுக்கு உரிமை இருக்கு. இது ரெண்டாவது அண்ணி அவங்களுக்கும் உரிமை இருக்கு. இதோ என் பத்தினி. இவளுக்கும் உரிமை இருக்கு. இவ யாரு இந்த வீட்டுல என்று கேட்கவும் அதற்கு பதிலளிக்கும் ஈஸ்வரி இவ என் தங்கச்சி அதனால இந்த வீட்ல இருப்பா என்று பேசுகிறாள்.

களேபரமே நடந்து முடிந்ததும் என்ன சொல்வதென்று தெரியாத ஜனனி தன் அறைக்குள் சென்று விடுகிறாள். அப்போது ஈஸ்வரியும், நந்தினியும் அவளிடம் சமாதானம் செய்யுமாறு சக்தியை அனுப்புகின்றனர். உள்ளே சென்ற சக்தி அவன்லாம் ஒரு ஆளுனு நீ பெருசா எடுத்துக்காத. படுத்து தூங்கு ஜனனி என்கிறான் சக்தி. இதனைத் தொடர்ந்து ஜனனி, சக்தியைத் தன் அறையிலேயே தூங்கும்படி கேட்கிறாள். அவன் முதலில் மறுத்தாலும் ஜனனி விடுவதாக இல்லை.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 11th May 2023

ஆதிரை திருமணத்துக்கு சம்மதித்து குணசேகரன் மூக்கை அறுக்க ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதனால் கரிகாலன் - ஆதிரை திருமணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Tags:    

Similar News