Ethirneechal கரிகாலனை விரட்டும் மாமியார்.. உண்மையை உளறிக் கொட்டிய கரிகாலன்!
எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் விறுவிறுப்பாக செல்ல இருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட் யூடியூபில் முழு எபிசோடும் Ethirneechal serial today episode youtube full episode வெளியாவதற்கு முன்பாக தொலைக்காட்சியிலும் சன் நெக்ஸ்ட் ஆப்பிலும் வெளியாகும்.
எதிர்நீச்சல் சீரியல் இன்று | Ethirneechal serial today episode youtube full episode
கரிகாலனை அவன் வீட்டுக்கு போகச் சொல்கிறார் மாமியார் விசாலாட்சி. அவனுடன் செல்ல மறுக்கும் தன் மகள் ஆதிரையின் பக்கம் நியாயம் இருப்பதாக அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார். அதேநேரம் ஜான்சி ராணி கரிகாலனுடன் தன் மருமகளையும் கூட்டிச் செல்ல நினைக்கிறார்.
கரிகாலன் சபையிலேயே நான் ஆதிரையைக் கூட்டிச் சென்று என் வீட்டில் முதலிரவு நடத்திக் கொள்கிறேன் என வெட்கமே இல்லாமல் பேச, அதற்கு ஜான்சி ராணி ஷாக் ஆகிறாள். ஏன்டா ஏற்கனவே எல்லாம் முடிஞ்சிடிச்சின்னு சொன்னியேடா என்று ஜான்சி ராணி கேட்க, அவ அப்படித்தான்மா சொல்ல சொன்னா என கரிகாலன் பேசுகிறான்.
தனது முன்னாள் போலீஸ் நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக தன் தம்பி கதிருடன் சென்னை வந்திருக்கும் குணசேகரன், அங்கு ஒரு சொகுசு பங்களாவில் தங்கியிருக்கிறார். அடுத்த நாள் காலையிலேயே போலீஸ் நண்பரை சந்திக்க கடற்கரைக்கு செல்கின்றனர். கதிரும் குணசேகரனும் அமர்ந்திருக்க, குணசேகரனிடம் அந்த போலீஸ் நண்பர் கைக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்க என்று கேட்க, சுளுக்கிவிட்டதாக கூறி சமாளிக்கிறார் குணசேகரன்.
எதிர் நீச்சல் சீரியல் நேற்று | Ethir neechal serial yesterday episode youtube
இடம் : அரசுப் பள்ளி
நபர்கள் : ஆசிரியர், நந்தினி, ரேணுகா, ஐஸ்வர்யா
நடனம் சொல்லித் தருகிறேன் என்று சொல்லியிருந்த ஆசிரியர் ஒருவர் வரவில்லை என்பதால் மாணவர்களை வீட்டுக்கு போகச் சொல்லி ஆசிரியர் கேட்கிறார். அவர்கள் மனம் வருந்தி நடனம் கிளாஸ் இல்லையே என செல்கிறார்கள். அப்போது அங்கு நந்தினியும், ரேணுகாவும் ஐஸ்வர்யாவுடன் வருகிறார்கள். அதனால் வேறு டீச்சர் இருந்தால் சொல்லுங்க என்று கேட்கிறார் அந்த ஆசிரியர்.
அப்போது ஐஸ்வர்யா தனது சித்தியே நன்றாக நடனம் ஆடுவார் என சொல்ல அந்த நேரத்தில் பதறிப் போன நந்தினி நான் சின்ன வயசுல ஆடியிருக்கேன். ஆனா இப்ப டச் விட்டு போச்சு. எனக்கு சரியா தெரியல ஆட வருமான்னு. நான் சொல்லித் தரமுடியாதுனு நினைக்குறேன். ஆடுறது வேற சொல்லிக் குடுக்குறது வேற இல்லியா என்று சொல்ல அனைவரும் மீண்டும் வருத்தத்தில் மூழ்குகிறார்கள்.
அந்த நேரத்தில் ரேணுகா தான் வேண்டுமென்றால் முயற்சி செய்து பார்க்கட்டுமா என்று கேட்க, நந்தினியும் ஐஸ்வர்யாவும் ஷாக் ஆகிறார்கள். எங்களிடம் சொல்லிக்கவே இல்லையே என்னக்கா என நந்தினியும் என்கிட்ட டான்ஸ் பத்தி பேசுனதே இல்லையேம்மா என ஐஸ்வர்யாவும் கேட்க, ரேணுகா ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். அடுத்து அவரை ஆடச் சொல்கிறார்கள்.
நந்தினி ஜதி சொல்ல ரேணுகா சூப்பராக ஆடுகிறார். அடுத்து குழந்தைகளுக்கு ஆட சொல்லிக் கொடுக்கிறார். அப்போது ஐஸ்வர்யாவும், நந்தினியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாத்தையும் மனசுக்குள்ளயே வச்சிருக்கும் கிறுக்கு. உன்ன மாதிரிதான் என ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார். பின் சித்தப்பா பத்தியும் பேசுகிறார். உங்க சித்தப்பன் பெரியப்பனுக்குலாம் நாங்க எல்லாம் தெரிஞ்சிருக்கணும் ஆனா அத வெளியில சொல்லிக்க கூடாது.
இடம் : ரெஸ்ட்டாரண்ட்
நபர்கள் : ஜீவானந்தத்திடம் ஏமாந்தவர், சக்தி, ஜனனி
ஜீவானந்தத்திடம் சொத்தை கொடுத்து ஏமாந்தவர் போலீஸை பார்த்ததும் பதறி ஓட பார்க்கிறார். அவரை சமாளித்து பின் அமர வைக்கிறார்கள். நடந்ததைக் குறித்தும் தாங்கள் போலீஸ் கிட்ட போகமாட்டோம் எனவும் சொல்லி அவரிடம் கேள்வி கேட்கிறார்கள்.
ஜீவானந்தத்திடம் போனால் போனதுதான் அவன்கிட்ட போனது திரும்பி வராது. அவன் நினச்சத சாதிக்காம விடமாட்டான். கவுஞ்சிக்கு போனா இவன ஹீரோ மாதிரி கொண்டாடுறாங்க. கொடைக்கானலிலிருந்து 40 கிமீ தூரத்தில் இருக்கும் இந்த இடத்தில் இவருக்கு சொந்த மான இடத்தை அடித்து பிடுங்கியிருக்கிறார் ஜீவானந்தம் என்பது மட்டும் ஜனனிக்கு இப்போது தெரியவந்துள்ளது.
இப்போது ஜனனி எப்படி யோசிப்பார் என்பதை தெரிந்துகொண்டு சக்தி அங்க போகணும்னு சொல்லாத என்று முன்கூட்டியே சொல்கிறார். ஆனால் அங்கு போனால்தான் நாம் ஜீவானந்தம் யார் என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்பதை ஜனனி சக்தியிடம் கூறுகிறார். அப்பதான் ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என்று சொல்கிறார் ஜனனி.
இடம் : கெஸ்ட் ஹவுஸ்
நபர்கள் : கதிர், குணசேகரன், வேலையாள்
கதிரும் குணசேகரனும் காரில் சென்னை வந்தடைகின்றனர். கொடுக்கப்பட்டுள்ள கெஸ்ட் ஹவுஸில் தங்க வந்து சேர்கின்றனர். அங்கு நீச்சல் குளம் இருப்பதை பார்த்து வியந்து நிற்கிறார் குணசேகரன். அப்போது போலீஸ் நண்பர் கால் செய்கிறார். அவரிடம் தான் இன்று இரவே ஊர் திரும்ப நினைத்தேன் என்று கூறுகிறார் குணசேகரன். ஆனால் தான் சொன்னால் ஒரு காரணம் இருக்கும் என்று உனக்கு தெரியும்தானே.. அமைதியாய் தங்கி ரெஸ்ட் எடு நாளைக்கு திருவான்மியூர் பீச்சுக்கு போயி பேசிக்கலாம் என்கிறார்.
இதனை கதிரிடம் சொல்ல, கதிர் அண்ணே ஏன் இவனைத் தேடி வந்திருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கான காரணத்தை சொல்கிறார் குணசேகரன். திருநெல்வேலி கோவில்பட்டியிலும் மதுரையிலும் இந்த போலீஸ் காரர் செய்த விசயங்களை எடுத்துச் சொல்ல, அடுத்து பட்டம்மாள் குறித்தும் பேச்சு எழுகிறது.
ஜீவானந்தத்தை கொன்றே தீர வேண்டும் என குணசேகரன் கதிரிடம் சொல்கிறார்.
எதிர் நீச்சல் சீரியல் நாளை | Ethirneechal serial tomorrow episode youtube
ஜீவானந்தத்தை நெருங்க இரண்டு தரப்பிலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஜீவானந்தம் யார், அவன் ஏன் இதனை செய்கிறார் என ஜனனியும் சக்தியும் ஒரு பக்கம் செல்ல, இன்னொரு பக்கம் அவனை மிரட்டி கொன்று சொத்தை திரும்ப வாங்க வேண்டும் என குணசேகரனும் கதிரும் போலீஸ் நண்பருடன் சேர்ந்து ஒரு பக்கம் திட்டமிடுகின்றனர்.
தொலைக்காட்சியிலும் சன் நெக்ஸ்ட் ஆப்பிலும் வெளியான பிறகு எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட் யூடியூபில் முழு எபிசோடும் Ethirneechal serial today episode youtube full episode யூடியூபில் வெளியிடப்படும். அதற்கு முன்பாக நமது தளத்தில் அந்த எபிசோட் குறித்த ரிவியூ படித்ததற்கு நன்றி.