வெட்டி விட துடிக்கும் குணசேகரன்...! மாஸ் எண்ட்ரி கொடுக்கும் அப்பத்தா!

எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோட் எப்படி செல்கிறது என்பதை காண்போம்.

Update: 2023-09-04 05:56 GMT

போலீஸோடு என்ட்ரி கொடுக்கும் அப்பத்தா தான் இன்னிக்கு தேதிக்கு டாக் ஆஃப் தி டவுன். சும்மா கெத்தா ஜெயிலர் ரஜினி மாதிரி என்ட்ரி கொடுக்கிறார் அப்பத்தா இனி அடுத்தடுத்து என்ன ஆகும் என்பதை தான் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் குணசேகரன் ஈஸ்வரியை வெட்டி விட அவரது சொந்தக் காரர்களை எல்லாம் கூட்டி வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஈஸ்வரி அழுது கொண்டு இருக்கிறாள். அவளை நந்தினியும் ரேணுகாவும் சமாதானம் செய்து கொண்டிருக்கின்றனர். ஈஸ்வரி அழுது கொண்டே இருந்தால் எப்படி, குழந்தைகளிடம் பேசி அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். அவர்கள் இன்னும் சாப்பிடவில்லை என்பதால் பாலாச்சும் குடுத்து கூட்டி வாங்க என்று சொல்ல, ஈஸ்வரியும் தர்ஷன், தர்ஷினி இருவரையும் அழைக்கிறாள். ஆனால் தர்ஷினிக்கு திடீரென்று கோபம் கொந்தளிக்கிறது. 

இவ்ளோ பயந்து பயந்து இந்த வீட்டுல ஏன் இருக்கணும்னு என்று தர்ஷினி கேட்க அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இந்த ஆளுகிட்ட நீ ஏன் அடிமையா இருக்க, இந்தவீட்ல நாம ஏன் இருக்கணும் பிரச்னைகள தாங்கிட்டு இருக்கேன்னு மட்டும் சொல்லாத என தர்ஷினி சொல்ல, அடுத்து தர்ஷன் இந்த ஆளு இன்னொரு தடவ உன்ன ஏதாவது தப்பா பேசுனா நா சும்மா இருக்க மாட்டேன் என கத்துகிறான்.

ஈஸ்வரி இதைக் கேட்டதும் நெகிழ்ந்து அவர்களைக் கட்டி அனைத்து பாசமழை பொழிகிறாள். மற்றவர்களும் ஈஸ்வரியை குழந்தைகள் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்களே என நினைத்து மகிழ்கின்றனர்.

ஈஸ்வரி தர்ஷனையும் தர்ஷினியையும் படிக்க சொல்கிறாள். அவர்களுடன் அமர்ந்து சந்தேகங்கள் எதுவும் இருந்தால் சொல்லிக்கொடுக்க இருக்கிறாள். அந்த நேரத்தில் வீட்டில் கீழே குணசேகரன், ஈஸ்வரியின் அப்பா மற்றும் மேலும் ஒரு சில பெரியவர்களோடு அமர்ந்திருக்கிறார்.

ஈஸ்வரியின் அப்பா குழப்பத்துடன் தன்னையும் மற்ற பெரியவர்களையும் ஏன் வரச் சொல்லியிருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு குணசேகரன் நடந்ததை கூறி, நீங்கள் சொன்ன உண்மையின் விளைவுதான் இது என்று கூறுகிறார் குணசேகரன். ஜீவானந்தத்துக்கும் ஈஸ்வரிக்கும் நடந்ததை சொல்லி குணசேகரன் ஈஸ்வரியை அத்துவிட போவதாக கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரியின் அப்பா, நான் எதார்த்தமாதானே சொன்னேன். அப்படினாலும் ஈஸ்வரிக்கு ஜீவானந்தத்த யார்னே தெரியாது என்றும் கூறி குழப்பத்தில் நிற்கிறார்.

ஈஸ்வரியின் அப்பா குணசேகரனை பாவி மனுசன் என்று சொல்ல அதற்கு கதிர் எகிறிக் கொண்டு வருகிறான். ஒருமையில் பேச ஈஸ்வரி கோபத்தில் கதிரை திட்ட ஆரம்பிக்கிறாள். இடைமறித்த குணசேகரன் தன்னுடைய மாமாவிடம் எங்களை பிரித்து விட்ருங்க மாமா இவளுக்கு எவ்வளவு ஜீவாம்சம் வேணுமோ கேட்கச் சொல்லுங்க. நான் கொடுத்துருந்தேன். அவளை வீட்டை விட்டு போக சொல்லுங்க என்று சொல்கிறார்.

அதற்கு ஈஸ்வரி பதிலடி கொடுக்கிறாள். கல்யாணம் என்கிற பெயர்ல ஒரு பொண்ண கூட்டி வந்து அவள கனவ சிதச்சி, அவள அடச்சி வச்சி சித்ரவதை பண்ணி இப்ப பணம் தரேன் போயிடுனு சொன்னா என்ன அர்த்தம் என்று கேட்கிறாள். நான் படிச்ச படிப்புக்கு வேலைக்கு போயிருந்தா என்னோட ரேஞ்ச் இப்ப என்னனு தெரியுமா என்று கேட்கிறாள்.

குணசேகரன் மீண்டும் தன்னுடைய மாமாவிடம் இவளை பிரித்து விட வேண்டும் என்று சொல்ல, அதற்கு அவருடைய மாமா இத்தனை வயசுக்கு பிறகு பிரிச்சு வச்சு என்ன பண்ண போற என்று கேட்க, குணசேகரனை கட்டிக்க ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் அப்பத்தா போலீஸ்காரர்களோடு வீட்டிற்குள் வருகிறார். சும்மா பிஜிஎம் போட்டு தெரிக்க விட ரஜினிமாதிரி ஒரு சூப்பரான என்ட்ரியைக் கொடுக்கிறார். அடுத்து என்ன ஆகப் போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News