சைலண்ட் ஆன அப்பத்தா! சப்புனு போகும் எதிர்நீச்சல்!
குணசேகரன் கதாபாத்திரத்துக்கு போதிய காட்சிகள் இல்லாமல் சப்புனு போகிறது எதிர்நீச்சல் சீரியல்.
எதிர்நீச்சல் சீரியல் இன்று | Ethirneechal serial today episode youtube full episode
செப்டம்பர் 14 ம் தேதிக்கான எபிசோட் விரைவில் அப்டேட் செய்யப்படும்
எதிர்நீச்சல் சீரியல் நேற்றைய எபிசோட் | | Ethir neechal serial yesterday episode youtube
செப்டம்பர் 13 ம் தேதிக்கான எபிசோடில் குணசேகரனுக்கு எதிராக பல சதி வேலைகள் நடந்துகொண்டிருப்பதாக கரிகாலன் குழப்பத்தை ஏற்படுத்த, அதனை விசாலாட்சி இல்லை என மறுக்கிறாள். உடனே கரிகாலன் விசாலாட்சி மீதே பழியைப் போட, குணசேகரனும் தனது அம்மா மீது சந்தேகப்படுகிறான்.
எனக்கு எதிரா பலபேரு பல சதி வேலைகளை பின்னிட்டு இருக்காங்க. ஆனா நா எந்த வலையிலையும் சிக்கமாட்டேன்டா கரிகாலா என்று சொல்கிறான். இப்போது கரிகாலன் நானும் மேலே செல்கிறேன் என்று சொல்ல, விசாலாட்சி அதை நீ ஏன் கேட்க போகிறாய் என சொல்ல, கரிகாலன் தனது நாரதர் வேலையை ஆரம்பிக்கிறான்.
தனது கல்வி அறிவை அந்த குழந்தைகளுக்கு புகுத்த வேண்டும் என எனக்கு தோணுது என கரிகாலன் மேலே ரேணுகா அறையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறான். ஈஸ்வரி, ரேணுகாவுக்கு ஃபோன் போட்டு இதை சொல்லிவிடுகிறாள்.
கரிகாலன் அந்த அறைக்கு செல்ல, அறை பூட்டி இருக்கிறது. கதவை தட்டி பார்க்கிறான். கதைவை பூட்டிக்கிட்டு அது என்ன சயின்ஸ். சாப்பாடு கேட்டாலே நக்கலா பதில் சொல்லும் என புலம்பிக்கொண்டே கதவைத் தட்டுகிறான். கண்டுபிடிக்கிறேன் என அவன் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறான்.
பின் மீண்டும் கதவைத் தள்ள அந்த நேரம் பார்த்து ரேணுகா கதவைத் திறந்துவிட, கரிகாலன் கீழே விழுந்து அடி வாங்குகிறான். கையில் புக் இல்லை பேனா இல்லை நோட் இல்லை என்ன டியூசன் இது என குழப்பத்தில் கேட்க, பொம்பள புள்ளைக்கிட்ட என்ன பேச்சு என கரிகாலனை வெளியில் துரத்துகிறாள் ரேணுகா.
பின் டீச்சர் ரேணுகாவிடம் சாரி சொல்ல அதுலாம் வேண்டாம். எனக்கு இவங்களுக்கு சொல்லித் தர முடியலையே என வருத்தம்தான் என்று சொல்கிறாள். தனது நிலையை விவரித்து நான் தான் மன்னிப்பு கேட்கவேண்டும் மாணவர்களை அழைத்து வந்து அமர வைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சில முத்திரைகளைச் சொல்லிக் கொடுக்கிறாள்.
வேண்டா விருப்பா புள்ளை பெத்து காண்டாமிருகம்னு ஏன்டா பேரவச்சிருக்கங்குறமாதிரி காண்டான முகத்தோடு அந்த பெண்களும் ரேணுகாவிடம் பாடம் படித்துக் கொள்கிறார்கள்.
சக்தி, ஜனனி, நந்தினி மூவரும் நந்தினியின் அப்பா வீட்டுக்கு வருகிறார்கள். முதல்முறையாக ஜனனியும் சக்தியும் சேர்ந்து வந்திருப்பதால் மகிழ்ச்சியுடன் அவர்களை அழைத்து உள்ளே செல்கிறான்.
முதல்முறையாக நந்தினியின் அம்மா என ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். அவரும் நோய்வாய்ப்பட்ட பெண்ணாக வந்து நந்தினியிடம் பேசுகிறார். உடம்பு சரியில்லை என்றால் சொல்லக் கூடாதா என அழுகாச்சியைக் கூட்ட, இதனால் கடுப்பான சக்தி, இது அழுகாச்சி சீன் இல்ல சந்தோஷமான விசயத்த சொல்ல வந்தோம்னு சொல்கிறான்.
ஜனனியால் தான் என்ன செய்கிறேன், எப்படி சொந்த காலில் நிற்கிறேன் என அனைத்தையும் தன் தாய், தந்தையிடம் சொல்கிறாள் நந்தினி. இதனால் ஸ்வீட் எடுத்துக்கோ என்று சொல்கிறாள். தனது ஆசையையும் கனவையும் சொல்லி நா பெருசா வந்துடுவேன்னு சொல்கிறாள்.
எதிர் நீச்சல் சீரியல் நேற்று | Ethir neechal serial yesterday episode youtube
செப்டம்பர் 12 ம் தேதிக்கான எபிசோடில் சாப்பாடு பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள் ஜனனி, நந்தினி, சக்தி மூவரும். ஆனால் யாரும் சாப்பிடாமல் இருக்கிறார்கள். இதனால் நந்தினிக்கு ஒரு சந்தேகம். அடடா இந்த அம்மா ஏன் என்னய பாத்து முறைக்குது.
சாப்பாடு நல்லா இல்லையோ இல்லனா பழைய காண்ட்ராக்டரோட சொந்தக் காரங்களா இருப்பாங்களோ என நந்தினி ஜனனியிடம் காதைக் கடிக்கிறாள். அதற்கு ஜனனி சிரித்துக் கொண்டே அப்படிலாம் இருக்காதுக்கா என்கிறாள்.
யாரும் எதுவும் சொல்லாமலே இருக்கிறார்கள். உடனே நந்தினி அங்குள்ள பாட்டியிடம் எப்படி இருக்கு என்று கேட்கிறாள். அனைவரும் தனித்தனியாக வடை நல்லா இருக்கு சாம்பார் நல்லா இருக்கு என சொல்ல அதை கேட்டு மனது குளிர்ந்து இறைவனுக்கு நன்றி சொல்கிறாள். வீட்டில் சமைத்து சமைத்து அது சரி இல்லை இது சரியில்லை என குணசேகரனும் அவனது தம்பிகளும் நந்தினியை அவமானப்படுத்தியதை நினைத்து பார்த்துக் கொண்டே ஃபீல் பண்ணுகிறாள் நந்தினி.
குணசேகரன் வீட்டில் கதிர், குணசேகரன், அம்மா, கரிகாலன் முன் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். யாரோ ஒருத்தனுக்கு காசு குடுத்துட்டு திரும்பி தரவில்லை என குணசேகரன் கதிரிடம் ஃபோன் போட்டு கேட்க சொல்கிறான்.
சமையலறையில் ரேணுகாவும் ஈஸ்வரியும் நந்தினி சமாளித்ததையும் குணசேகரனிடம் மாட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதையும் பேசிக் கொண்டே இருக்கையில் அடுத்த ஆப்பு வந்து சேர்கிறது.
ரேணுகா நடனம் சொல்லித் தரும் குழந்தைகள் ஆசிரியருடன் சேர்ந்தே வீட்டுக்கு வருகிறார்கள். குணசேகரன் யார்மா அது என பார்க்கிறான்.
ரேணுகாவை பார்க்க வந்ததாக சொல்ல உடனடியாக வெளியே வந்த ரேணுகா பிள்ளைய பாக்க வந்தீகளா என சமாளிக்கிறாள். ஆனால் கரிகாலன் குறுக்கே புகுந்து குட்டையைக் குழப்ப அவனையும் சமாளித்து செல்ல அடுத்து ஞானசேகரனும் இடையில்புகுந்து ரவுண்டு கட்டுகிறான்.
இந்நிலையில் ரேணுகாவுக்கு சப்போர்ட் செய்ய ஈஸ்வரி களமிறங்குகிறாள். அந்த நேரத்தில் கரிகாலன் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டு அனைவரையும் அதிர வைக்கிறான். நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டே குணசேகரன் பொறுமுகிறான். என்னத்த சொல்ல என குடும்பத்து மருமகள்களை பற்றி சந்தேகத்தை எழுப்புகிறான். ஏதோ பெரிய வெடி வைக்கபோகிறார்கள் என சொல்கிறான்குணசேகரன்.
சாப்பாடு பரிமாறி முடித்துவிட்டு திரும்பும் சக்தி, ஜனனி, நந்தினி ஆகியோரை பாராட்டித் தள்ளுவதோட இல்லாமல் பணத்தையும் கொடுக்கிறார்கள். ஆனால் நந்தினி முதலில் அதை மறுக்கிறாள். இருந்தாலும் அங்குள்ள ஐயா சொல்லி வர மகாலட்சுமியை வேண்டாம் என சொல்லாதே என்று கூறுகிறார். இதனால் பணத்தை வாங்கிக்கொண்டார். மீண்டும் தொடர்ந்து பாராட்டுகளைத் தெரிவிக்கிறார்கள்.
தங்களது கோரிக்கைகளையும் வைக்கிறார்கள் பெரியவர்கள். அடுத்து சக்தி, ஜனனி இருவரும் டிரீட் கேட்க, தனது அம்மாவுக்கு கொஞ்சம் பணத்தை கொடுக்க கேட்கிறாள் நந்தினி. இதையெல்லாம் கேட்டுட்டா இருப்பாங்க. வாங்க என்று கூட்டிச் செல்கிறான் சக்தி.
குணசேகரன் வீட்டில் கரிகாலன் மீண்டும் குட்டையைக் குழப்ப ஆரம்பிக்கிறான். தன்னை வேவு பாக்க நம்பிக்கையான ஒரு ஆளாக வைத்திருக்கிறீர்கள் தானே என்று கரிகாலன் குணசேகரனிடம் சொல்கிறான். அண்டா ல பொங்கல் மேலயும் சரி, டியூசன் எடுக்கவந்த டீச்சர் மேலயும் சரி எனக்கு சந்தேகம் நிறைய இருக்கு என்று கூறுகிறான்.
எதிர் நீச்சல் சீரியல் நாளை | Ethirneechal serial tomorrow episode youtube
தொலைக்காட்சியிலும் சன் நெக்ஸ்ட் ஆப்பிலும் வெளியான பிறகு எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட் யூடியூபில் முழு எபிசோடும் Ethirneechal serial today episode youtube full episode யூடியூபில் வெளியிடப்படும். அதற்கு முன்பாக நமது தளத்தில் அந்த எபிசோட் குறித்த ரிவியூ படித்ததற்கு நன்றி.