Ethirneechal எதிர்நீச்சல் தொடரில் திடீர் திருப்பம்! குணசேகரனை மிரட்டும் கிள்ளி!
Ethirneechal எதிர்நீச்சல் தொடரில் திடீர் திருப்பம்! குணசேகரன் எடுக்கும் முடிவு!
எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட் யூடியூபில் முழு எபிசோடும் Ethirneechal serial today episode youtube full episode வெளியாவதற்கு முன்பாக தொலைக்காட்சியிலும் சன் நெக்ஸ்ட் ஆப்பிலும் வெளியாகும்.
எதிர்நீச்சல் சீரியல் இன்று | Ethirneechal serial today episode youtube full episode
நால்வரும் காரில் பயணித்துக்கொண்டே அப்பத்தா குறித்து பேசுகிறார்கள். அப்பத்தா ஜீவானந்தம் இடத்தில்தானே இருப்பாங்க என்று நந்தினி கேட்டு ஃபீலாகிறார். அதற்கு ஜனனி பதில் சொல்லிக் கொண்டே வருகிறாள்.
நந்தினியும், ஜனனியும் ஜீவானந்தம் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் பேசி வருத்தப்பட்டுக் கொண்டே பயணிக்கின்றனர். அவர்களது குடும்பத்தை கலைத்து கதிர்வேலை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது என அழத் துவங்குகிறாள்.
ஜனனி நந்தினியிடம் ஒன்றைக் கூறுகிறாள். அது அவரிடம் பரிதாபப்படும்படி பேசினால் அவருக்கு கண்டிப்பாக பிடிக்காது. நாம போற காரியமும் நடக்காது என்று கூறுகிறாள் ஜனனி. அதுவரை அமைதியாக வந்துகொண்டிருந்த ஈஸ்வரியிடம் ரேணுகா என்ன விசயம் என்று கேட்கிறார்.
ஈஸ்வரியும் தனது கதையை நினைத்து ஃபீல் பண்ண தோணவில்லை. ஜீவானந்தம் குறித்தும் அவர்களது பழைய கதை குறித்தும் பேசி வருகிறார் ஈஸ்வரி. கடந்து போன மனுசங்க, நிகழ்வுகள் எல்லாமே இருக்கும். அத திரும்ப நினச்சி பாக்குற அளவுக்கு மனுசங்க ரொம்ப குறைவு. அத நினச்சி பாக்றப்ப ஒரு சந்தோஷம் கிடைக்கும். அதுமாதிரிதான் ஜீவானந்தம். அவர சந்திச்சப்றம்தான் என் கிராம கல்லூரி வாழ்க்கை எல்லாமே நினைவுக்கு வருது என்று பேச ஆரம்பிக்கிறாள். கண்கள் தழுதழுக்க தனது முடிந்த போன கடந்த கால வாழ்க்கையைப் பற்றி ஜீவானந்தம் நினைவு கூர்ந்ததாக சொல்லி பேசுகிறாள்.
குணசேகரன் வீட்டில் அம்மாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்பத்தாவை பற்றி திட்டிக் கொண்டிருக்கிறார் குணசேகரன். காரியம் முடியட்டும் சொத்துபூரா தன் கையில் வரட்டும் என்று பேசிக் கொண்டிருக்கையில், அங்கே பச்சை சட்டை அணிந்த கடம்பவனம் உள்ளே வருகிறார்.
கடம்பவனம் இன்னும் உயிரோடதான் இருக்கிறானா என கேட்டு வரச் சொல்கிறான் குணசேகரன். வந்தவன் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல பல வார்த்தைகளை எடுத்து பேச குணசேகரனுக்கு கோபம் தலைக்கு மேல் வருகிறது. ஆனாலும் அடக்கிக் கொண்டு இருக்கிறான்.
அவர்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கிளப் ஒன்றில் மெம்பர்சிப் வாங்குவது குறித்து உதவி கேட்டு வந்திருக்கிறார் கடம்பவனம். அந்த நேரத்தில் கிள்ளிவளவன் வீட்டுக்கே தேடி வந்திருக்கிறான்.
வந்தவரை யார் என்று கேட்கிறார் விசாலாட்சி. அவரை தன் நண்பர் எனவும் காபி கீபி எதுவும் வேண்டாம் எனவும் சொல்லும் குணசேகரன், கடம்பவனம் இருப்பதால் பேச்சைத் தொடங்காமல் இருக்கிறான். அந்த நேரத்தில் கதிர் கடம்பவனத்தை விரட்ட நினைக்கிறான்.
ஆனால் கடம்பவனம் கிள்ளிவளவனிடம் தன்னை அறிமுகப்படுத்த முனைகிறான். கடம்பவனத்தை விரட்டி விடுகிறான் கதிர். பின் கிள்ளிவளவன் குணசேகரனிடம் கோபத்தில் கொந்தளிக்கிறான்.
பின் அவர்கள் பணத்தைப் பற்றி பேசுகிறார்கள். அதே நேரம் ஜீவானந்தத்தை கொல்ல திட்டமிடுகிறார்கள். விரைவில் ஜீவானந்தத்தை கொல்ல முடிவு செய்து திட்டம் தீட்டுகிறார்கள்.
கதிர் செய்ததை சொல்லி காண்பித்து கொந்தளிக்கிறாள் நந்தினி. கொலை செய்ததை அவசரப்பட்டு சொல்லி விடுவாளோ என நினைத்து உடனே ஓடி வந்த ரேணுகா, குணசேகரன் கதிர் - நந்தினியின் மகள் தாராவை தூக்கி எறிவதாக மிரட்டிதான் அப்பத்தாவிடம் கையெழுத்து வாங்கினார் என சொல்ல, அதற்கும் சற்றும் உணராத கதிர், அவரு என் அண்ணன் எல்லா உரிமையும் இருக்கு. அவரு புள்ளைய தூக்கி போட்டாலும் நான் எதுவும் கேட்க மாட்டேன் என சொல்கிறான் கதிர். இதனால் நந்தினியும் ரேணுகாவும் ஷாக் ஆகின்றனர்.
பின் அப்படியே படி வழியாக இறங்கி கீழே வந்துவிடுகிறான் கதிர். அங்கே அண்ணன் குணசேகரனிடம் சென்று அனைவரையும் வெளியே விரட்டி விட சொல்கிறான். ஆனால் குணசேகரன் அமைதியாக இருக்கும்படி சொல்கிறான். சொத்து நம் கையில் வர வேண்டும் கிழவி கையிலிருந்து நம்ம வாழ்க்கைய கைப்பற்றணும் அதான் முக்கியம் என்று கூறிவிட்டு ரேணுகாவையும் நந்தினியையும் கீழே அழைக்கிறான்.
தாராவை இங்க வா என்று கூப்பிட அவள் பயந்துகொண்டே வராமல் தயங்கி நிற்கிறாள். பயப்படாதே வா என்று கூறியும் அவள் வரவில்லை. தாராவையும் திட்ட ஆரம்பிக்கிறான் குணசேகரன். கூடவே நந்தினியையும்.
சொத்து தன் கையில் வர வேண்டும் என அடுத்த திட்டத்தைக் கையிலெடுக்கிறான் குணசேகரன். நானும் பெரியம்மாவும் ஒரு இடத்துக்கு போயிட்டு வந்துடுறோம்னு சொல்லி தாராவை அப்பத்தா கூட இருந்துக்கோ என்று சொல்கிறாள் நந்தினி. வழக்கம்போல எகிறிக் கொண்டு செல்கிறான் கதிர்.
கதிரை தடுத்து நிறுத்தி விசாலாட்சி தள்ளி நிக்க சொல்கிறாள். நந்தினியையும் ரேணுகாவையும் போயி கிழவி கிட்ட பேசிட்டு வர சொல்கிறாள். கதிர் கோபத்தில் நானே பாத்துக்குறேன் என்று சொல்ல குணசேகரன் எரிச்சலில் கதிரை அமைதியா இருக்க சொல்கிறான். தன்னுடைய அவஸ்தையைச் சொல்லி கதிருக்கு நடக்க வேண்டியதை விளக்குகிறான்.
நால்வரும் கிளம்பி செல்கின்றனர். எங்கே செல்வது என்று தெரியாமல் குழம்ப, ஜனனி ஜீவானந்தத்தை தேடி போகலாம் என்று கூறுகிறாள். கோவிலுக்கு அருகில் ஒரு மரத்தடியில் நின்று அனைவரும் பேசுகின்றனர்.
ரேணுகா ஜனனியிடம் ஜீவானந்தம் குறித்து பேசுகிறாள். அவரது மொபைல் எண் இருக்கிறதா என்று கேட்க தன்னிடம் இல்லை என்று கூறுகிறாள் ஜனனி.
ஜீவானந்தம் குறித்து ரேணுகா, ஈஸ்வரியிடம் கேட்க அவளும் ஃபீல் பண்ணி பேச ஆரம்பிக்கிறாள். குணசேகரன் ஒரு கொலைகாரன் அவனோட மனைவி நான்னு வருத்தப்பட்டு பேச, நந்தினியும் நானும் ஒரு கொலைகாரனோட பொண்டாட்டிதான் என்று கோபத்தில் சொல்கிறாள். தானும் எமோசனலாக அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என நினைக்க சக்திதான் உண்மையைப் புரிய வைத்தான்.
அதுமட்டுமின்றி சட்டத்துக்கு முன் நிறுத்தினால் அவர்கள் ஈஸியா வெளியே வந்துவிடுவார்கள். ஜீவானந்தத்துக்கு தெரிந்தால் உடனடியாக கொன்னுடுவார். அதனால் அம்மாவ இழந்த குழந்த அப்பாவையும் இழக்க நேரிடும். இப்போதைக்கு நாம அப்பத்தாவ பாத்துதான் பேசணும்.
ஜனனி கௌதமிடம் பேச தயங்க, ஐஸ்வரி அவனுக்கு ஃபோன் செய்கிறாள். ஆனால் அவன் ஃபோனை எடுக்கவில்லை. ஆனால் இம்முறை ஃபர்ஹானா ஃபோனை எடுக்கிறார். ஆனால் ஜீவானந்தத்தை சந்திக்க முடியாது என்று சொல்கிறார். நடந்தவற்றை ஈஸ்வரி சொல்லி தங்களால் ஜீவானந்தத்துக்கு எந்த தொந்தரவும் மன கஷ்டமும் வராது. நான் கண்டிப்பாக அவரைச் சந்தித்து பேச வேண்டும் உதவுங்கள் என ஈஸ்வரி சொல்ல அவரும் இரக்கப்பட்டு பார்க்க வர வேண்டிய இடத்தைச் சொல்கிறாள்.
நால்வரும் கார் புக் செய்து கிளம்புகிறார்கள். அப்பத்தாவை காண்பார்களா? ஜீவானந்தம் தன்னுடன்தான் அப்பத்தாவை வைத்திருக்கிறாரா என்பதை அடுத்த எபிசோடில் காண்போம்.
எதிர் நீச்சல் சீரியல் நாளை | Ethirneechal serial tomorrow episode youtube
தொலைக்காட்சியிலும் சன் நெக்ஸ்ட் ஆப்பிலும் வெளியான பிறகு எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட் யூடியூபில் முழு எபிசோடும் Ethirneechal serial today episode youtube full episode யூடியூபில் வெளியிடப்படும். அதற்கு முன்பாக நமது தளத்தில் அந்த எபிசோட் குறித்த ரிவியூ படித்ததற்கு நன்றி.