கொல்லப்பட போகிறாரா அப்பத்தா? எதிர்நீச்சலில் அடுத்த திருப்பம்!
எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா கதாபாத்திரம் கொல்லப்படபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக குணசேகரனும் கதிரும் திட்டமிடுவது போல புரோமோ வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல் இன்று | Ethirneechal serial today episode youtube full episode
குணசேகரனுக்கு அப்பத்தா செக் வைத்ததால் கடுப்பான அவர், அப்பத்தாவை எப்படியாவது வென்றுவிட துடிக்கிறார். இதனால் தன் தம்பி கதிர், வக்கீல், ஆடிட்டர் உள்ளிட்டோருடன் வெளியிடத்தில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடுகிறார்.
ஆடிட்டரும், வக்கீலும் சொன்னபடியே குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர, அங்கு கதிரை அழைத்துக் கொண்டு வருகிறார் குணசேகரன். நால்வரும் அப்பத்தாவை வெல்ல என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை செய்ய, வழக்கம்போல கதிர் அவசரப்படுகிறான். ஆனால் அவசரப்பட்டு எதுவும் செய்யக்கூடாது என்பது ஆடிட்டரின் வாதாம். அதேதான் வக்கீலும் சொல்கிறார்.
குணசேகரனுக்கு கடுங்கோபம் எல்லாத்துக்கு விடிவுகாலம் வரணும்னா என்ன பண்றது, பேசாம அப்பத்தாவ போட்டுடலாமா என கொடூரமாக திட்டமிடுகிறான். இதற்கு கதிர் நிச்சயமாக மறுப்பு தெரிவிக்கப்போவதில்லை. ஆனால் வக்கீலும் ஆடிட்டரும் என்ன சொல்ல போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.
ஏற்கனவே அப்பத்தா உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் நினைத்த காரணத்தினால்தான் போலீஸுடன் வந்திருக்கிறார். போலீஸையும் மீறி எப்படி அப்பத்தாவை கொல்வார், இதற்கு ஜீவானந்தம் என்ன பதிலடி கொடுக்கப்போகிறார் என்பதே அடுத்தடுத்த எபிசோட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கள் கிழமை எதிர்நீச்சல் எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் மற்றும் கதிர் ஆகியோருக்கு அப்பத்தா கொடுத்த பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இந்த நிலையில், செப்டம்பர் 4 ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அப்பத்தாவின் திருப்புமுனையான செயல்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த எபிசோடின் ஆரம்பத்தில், குணசேகரன் ஈஸ்வரியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று ஊர் பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது, அப்பத்தா வீட்டிற்குள் நுழைகிறார். அலப்பறை கிளப்புறோம் பாடலுடன் அங்கு வரும் அப்பத்தா அங்கு அடுத்து அலப்பறை செய்ய இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு ஆவலான எபிசோடாக மாறியது.
விவாகரத்து விசயத்துக்காக அங்கு வந்திருக்கும் பெரியவர்கள் முன் அப்பத்தா கெத்தாக நடந்து சென்று ஒரு முக்கியமான விசயத்தை பேச வேண்டியிருப்பதாக கூறுகிறார்.
அப்பத்தா, "இது எல்லாம் இருக்கட்டும். அதுக்கு முன்னாடி, எனக்கு சில முக்கியமான விஷயங்கள் பேச வேண்டியது இருக்கு" என்று கூறுகிறார். அப்போது, அங்கு இருந்த ஊர் பெரியவர்கள், "இங்கே நீங்கள் வேற என்ன பேசுறீங்க? விவாகரத்து பற்றி முடிவு எடுக்கணும் என்று கூறுகிறார்கள்.
அதற்கு அப்பத்தா, "இங்கே நான் 40% ஷேரில் இருக்கிறேன். அதனால, இந்த வீடு என் இடம்தான். நீங்க இங்கே இருந்து வெளியே போங்க" என்று கூறுகிறார். இதனால், ஊர் பெரியவர்களை இப்போ நீங்க போங்க பிறகு வந்து பேசலாம் என்று அனுப்பி வைத்துவிடுகிறார் அப்பத்தா.
மேலும் அப்பத்தா, குணசேகரனை உனக்கு சொந்தமான மாடிக்கு வா நான் அங்கு வச்சு உன்னிடம் பேச வேண்டும். உனக்கு 5 நிமிசம் டைம் என்று சொல்லிவிட்டு மாடிக்குச் செல்கிறார் அப்பத்தா. குணசேகரனும் எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறான். சுற்றியும் மற்றவர்களும் அமர்ந்திருக்க, ஞானம் வருவதற்காக காத்திருக்கிறான் குணசேகரன்.
அதன்பிறகு, அப்பத்தா, "குணசேகரன், நீ என்னை வீட்டை விட்டு வெளியேற சொல்லி மிரட்டுற. நான் வெளியே போக மாட்டேன். நான் என்ன சொல்றேன்னு கேட்டுட்டு உன் வேலைய பாரு" என்று கூறுகிறார்.
இதனைக் கேட்டதும் கதிர் அப்பத்தாவின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு நெறிக்க முற்படுகிறான். அப்போது அங்கு இருக்கும் போலீஸ்காரர் ஏய் கையை எடு, இல்லன்னா உள்ள போய் தூக்கி போட்டுருவேன். நீங்க இப்படி எல்லாம் பண்றீங்கன்னு தெரிஞ்சு தான் அவங்க போலீஸ் பாதுகாப்போடு வந்திருக்காங்க. அதற்குப் பிறகும் இப்படி எல்லாம் பண்றீங்க என்று போலீஸ் காரர் மிரட்டுகிறார். இதனால் கதிர் அமைதியாக இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அப்பத்தா, தான் இன்னும் ஒரு வாரத்தில் தன் சொத்துக்களை என்ன செய்யணுமோ அதை செய்ய இருப்பதாகவும், அதுவரைக்கும் நீ இந்த மருமகள்களை அடித்து துன்புறுத்தினால் தான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை எனவும் கூறுகிறார்.
அதுபோல இனி இந்த வீட்டில்தான் சக்தியும் ஜனனியும் தன்னுடன் இருப்பாங்க என்று சொல்கிறார். அதற்கு கதிர் கோபமடைந்து கத்த, அப்படி என்றால் கீழே இருக்கும் என்னுடைய போர்சனில் எல்லாத்தையும் நான் மூடி விடுவேன். நீங்க மாடியில் மட்டும் தான் புலங்க வேண்டும். நீங்க மாடிக்கு கயிறு மூலமாக வருவீங்களோ எப்படி வருவீங்களோ எனக்கு தெரியாது என்று செக் வைக்கிறார் அப்பத்தா. இதற்கு என்ன சொல்வது என்று புரியாமல் குணசேகரன் பதில் எதுவும் சொல்லாமல் கோபத்தோடு முறைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த அப்பத்தாயின் செயல்களால், குணசேகரனும், கதிரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த எபிசோட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.