குணசேகரன் எங்கே? புத்திசாலித்தனமாக காய் நகர்த்தும் எதிர்நீச்சல் டீம்!

தனது பிள்ளைகளே ஜீவானந்தம் தங்களது அப்பாவாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என பேசியதைக் கேட்ட குணசேகரன் திடீரென காணாமல் போகிறார்.

Update: 2023-09-19 07:10 GMT

சின்னத்திரையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் வெற்றிக்கு காரணமாக இருந்த நடிகர் மாரிமுத்து கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய இறப்பிற்கு பிறகு பெரும்பாலான ரசிகர்கள் மாரிமுத்து இறந்தது குறித்து வருத்தத்தில் இருக்கின்றனர். சிலர் அதனைக் கடந்து வந்துவிட்டனர்.

மாரிமுத்துவை மிஸ் பண்ணும் ரசிகர்கள்

மாரிமுத்துவை அதிகமான ரசிகர்கள் மிஸ் பண்ணி வருவதால் எபிசோட்டின் இடை இடையே அவர் வருவது போன்று அவர் ஆரம்பத்தில் நடித்த காட்சிகளை வைத்து வருகின்றது சீரியல் குழு. இது பலருக்கும் ஆறுதலை கொடுத்து வருகிறது. அதே நேரத்தில் அவரை மீண்டும் பார்ப்பது பலருக்கு பயமாக இருப்பதாகவும் வருத்தமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

குணசேகரனின் அமைதியான காட்சிகள்

சில எபிசோடுகளாகவே மாரிமுத்து எந்த காட்சிகளிலும் பேசாமல் அமைதியாகவே வருவது போன்று இருக்கிறது. இது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. குணசேகரன் எப்போதும் தன்னுடைய கர்ஜிக்கும் குரலால் பேசுவது தான் அதிகமான ரசிகர்களுக்கு பிடிக்கும். அவரின் ஏய் இந்தாம்மா டயலாக்தான் அனைவரிடமும் அவரைக் கொண்டு போய் சேர்த்தது. ஆனால் இப்போது அவர் எதுவுமே பேசாமல் முறைத்தபடியே இருப்பது பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறி வந்தனர்.

குணசேகரன் எங்கே போனார்?

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் தர்ஷினி மற்றும் தர்ஷன் இருவரும் நமக்கு ஜீவானந்தம் அப்பாவாக வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தனர். அதற்கு கதிரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரூமிற்குள் இருந்து குணசேகரன் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது போன்றே காட்சிகள் அமைந்திருந்தது. அதே நேரத்தில் கடைசியில் கதிர் இதை எல்லாம் கேட்டுக்கொண்டு உள்ளுக்குள்ளே இந்த மனுஷன் உட்கார்ந்து இருக்காரே என்று தன்னுடைய வருத்தத்தை அழுத்தமாக பதித்து இருந்தார்.

குணசேகரன் எங்கேயோ போய்விட்டார்

அதிலிருந்து நமக்குத் தெரிந்தது இன்றைய எபிசோடில் கண்டிப்பாக குணசேகரன் எங்கேயாவது போவது போன்று தான் காட்சிகள் இருக்கும் என்று. இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் குணசேகரனை காணவில்லை என்று விசாலாட்சி கேள்வி கேட்க அப்போது வீட்டில் எல்லாரும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

குணசேகரனின் கடிதம்

அந்த நேரத்தில் குணசேகரன் வழக்கமாக கும்பிடும் மீனாட்சி அம்மன் போட்டோவின் கீழே ஒரு கடிதம் இருக்கிறது. அதை படித்து பார்த்து ஞானம் அழுது கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஞானம் அழுதது நிஜத்தில் நடிகர் மாரி முத்து இல்லை என்பதை நினைத்து அழுவது போன்றே இருந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இன்று சீரியலை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.

புதிய குணசேகரன் யார்?

இன்னும் எதிர்நீச்சலில் ஆதி குணசேகராக எந்த நடிகர் நடிக்க போகிறார் என்று உறுதியாக சீரியல் டீம் தேர்ந்தெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் குணசேகரனாக புது நடிகர் வருவது வரைக்கும், குணசேகரன் எங்கேயோ போய்விட்டார் என்பது போன்று தான் காட்சிகள் இருக்கும். இந்த நிலையில் வீட்டிற்கும் மீண்டும் வரும் ஆதி குணசேகரன் ஆக புது நடிகர் வர இருக்கிறார். இதுவும் ஒரு விதத்தில் ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாகத்தான் இருக்கிறது. அதே நேரத்தில் இனி மாரிமுத்து வரவே மாட்டார் என்று அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News