கலாய்த்து ஓட விடும் பெண்கள்! குணசேகரன் செய்யப்போகும் அடுத்த அதிரடி!
Ethir Neechal Serial Today Promo-குணசேகரனும் தனது ஆடிட்டரை வீட்டுக்கு அழைத்து அனைவரையும் கையெழுத்து போடச் சொல்கிறான். ஆனால் வீட்டிலுள்ள அனைவரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.
ethir neechal promo today 11 july 2023 | எதிர்நீச்சல் புரோமோ இன்று | ethir neechal serial episode 445
ethir neechal serial today episode 11 july 2023 | எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட் 11 ஜூலை 2023
Ethir Neechal Serial Today Promo-பள்ளியில் சேர்க்கும் முன் விசாரிக்க சென்ற நந்தினி, ரேணுகா, ஐஸ்வர்யா ஆகியோர் ஆட்டோவில் வீடு திரும்பும் காட்சியாக தொடங்குகிறது இன்றைய எபிசோட்.
வழக்கம்போல பொறுமிக்கொண்டு இருக்கிறார் குணசேகரன். இப்போது ரேணுகாவும் நந்தினியும் பள்ளிக்கு கூட்டி சென்று வந்ததில் குணசேகரனுக்கு கோபம் ஆனால் நேரடியாக காண்பிக்காமல் ஞானசேகரனிடம் இது இப்படியே போய்க்கொண்டிருக்காது நான் வேற மாதிரி காட்டுவேன் என்று மிரட்டும் தொனியில் பேசுகிறான்.
வீட்டு ஆண்களை மதிக்காமல் நடக்கும் பெண்கள் வெளியில போயி பெருசா சாதிச்சிடவா போறாங்க என்று அவன் பேசியதற்கு அடுத்தடுத்து பதிலடிகளை ரேணுகா கொடுக்க, அவளிடம் பேசமுடியாமல் பேச்சை மாற்றுகிறான் குணசேகரன். அந்த நேரத்தில் அங்கு அமர்ந்திருக்கும் ஆடிட்டரிடமிருந்து ஃபைல்களை வாங்கி இதில் கையெழுத்து போடுங்க என அனைத்து மருமகள்களையும் அழைக்கிறான்.
என்ன இது என்ற சந்தேகத்துடனேயே நந்தினி அந்த ஃபைல்களை தூரத்திலிருந்து பார்க்கிறாள். தனது சந்தேகத்தை குணசேகரனிடம் கேட்க, அவனும் மருமகள்கள் பேரில் இருக்கும் கம்பெனிகள் அனைத்தையும் தனது பெயரிலும் தன் தம்பிகள் பெயரிலும் மாற்றி எழுதியிருக்கிறேன் கையெழுத்து போடுங்க, நீங்கதான் சாதிக்க போறீங்களே என நக்கல் செய்கிறான் குணசேகரன்.
நந்தினியும் அப்பாடா இதுக்குதானே இவ்ளோ நாள் காத்திருந்தோம். அக்கா வாங்க ஒரு வேல முடிஞ்சிது படபடனு கையெழுத்து போட்டுடுட்டு விசிறிட்டு போயிடுவோம் என்று கூறுகிறாள் நந்தினி. பென்னை எடுத்து ஆட்டிருக்கு நன்றி சொல்லிவிட்டு நக்கலாக குணசேகரனிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறாள். மாமா நா கையெழுத்து போடமாட்டேன்னு சொன்னா என்ன பண்ணுவிய என்று கேட்க, அதற்கு குணசேகரன் நீ கையெழுத்து போடமாட்டேன்னு சொல்லிடுவியா என்று கேட்கிறான். அதற்குள் ரேணுகா முந்திக்கொண்டு அவரால என்ன செய்ய முடியும். அவரால எதுவும் செய்ய முடியாது அவரோட அடியாளத்தான் உனக்கு கட்டி வச்சிருக்காருல அவன வச்சி மெரட்டி உருட்டி ஏதாது செய்யப்பாப்பாரு என்கிறாள் ரேணுகா. நந்தினியும் இன்னும் உங்க மிரட்டலுக்கு பயந்துட்டு இருக்கோம்னு நினச்சிட்டு இருக்கியலா மாமா.. அய்யு பாவம் என நக்கல் அடிக்க, குணசேகரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.
அடுத்து இந்தியாவில் குடும்ப பெண்களுக்கு சட்டம் கொண்டு வந்துள்ளதைப் பற்றியும், குடும்பத்து பெண்கள் 24 மணி நேரமும் வேலை செய்யுறதால அவங்களுக்கு சேர வேண்டிய உரிமை பற்றியும், குடும்ப சொத்தில் சரிபாதி மனைவிக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்குகிறாள். இதனைக் கேட்ட குணசேகரன் ஆடிட்டரிடம் இதுகுறித்து கேட்க, அவர் பம்முகிறார்.
மீண்டும் நந்தினி குணசேகரனை வாரிக்கொண்டே இருக்கிறார். குணசேகரன் செய்த அடாவடிகளையும் ஏமாற்று வேலைகளையும் நினைவுபடுத்திக் கொண்டே தான் படித்த படிப்புக்கு இப்போ வேலைக்கு போயி சம்பாதிச்சிருந்தா லட்சக்கணக்குல சம்பாதிச்சிருப்பேன் என்கிறார். இப்படியே அவர்களின் பேச்சு தொடர்கிறது.
கௌதம், ஜீவானந்தத்தை தேடி வருகிறான். ஒரு மாஞ்சோலையில் அவர்களது சந்திப்பு நடக்கிறது. அங்கு ஜீவானந்தத்தின் உதவியாள் பெண்மணியும் இருக்கிறார். பட்டம்மாள் குறித்தும் அவர்களது குடும்ப பின்னணி குறித்தும் தெளிவாக கூறுகிறார். ஜனனி கௌதமின் தோழி என்பதை தெரியாத ஜீவானந்தம் அவரிடம் நட்பாக பழகி அங்கு நடப்பதை அறிந்து கொண்டு வர சொல்கிறார். கௌதம் ஏதோ ஒரு உண்மையை மறைப்பதை ஜீவானந்தமும் தெரிந்துவைத்திருக்கிறார்.
சக்தியும் ஜனனியும் வெளியிலிருந்து வீட்டுக்கு வந்து பைக்கை நிறுத்தும்போதே ஞானசேகரனை விட்டு அவனை அழைக்கச் சொல்கிறார் குணசேகரன். உள்ளே வந்த சக்தியிடம் குணசேகரன் கையெழுத்து போடச் சொல்லிக் கேட்கிறார். ஆனால் ஜனனி கையெழுத்து போடாதே என்று தடுக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் ஜனனியிடம் கோபப்படுகிறான். சக்தியிடம் தன் பேச்சை கேட்டு கையெழுத்து போடப் போறீயா இல்லை அவ பேச்சைக் கேட்டு நாசமா போகப் போறியா என கேட்க, சக்தி வெளியில் செல்கிறான். இதனால் குணசேகரனின் கோபம் இன்னும் அதிகரிக்கிறது.
ethir neechal serial yesterday episode youtube 10 july 2023 | எதிர்நீச்சல் சீரியல் நேற்றைய எபிசோட் 10 ஜூலை 2023
எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோடில் அப்பத்தாவை பார்த்து பரிதாபப்படுகிறாள் ஜனனி. அவர் நார்மல் ஆக வேண்டும் என வருத்தப்பட்டு பேசுகிறாள். பின் அவர் கையைப் பிடித்து அவர் முகத்தைப் பார்க்கும்போது ஜனனியின் கண்கள் ஓரம் கண்ணீர் துளிர்க்கிறது.
மண்டபத்துக்கு போன நேரம் உங்க அண்ணன் ஏதோ பண்ணிருக்காரு சக்தி. கேமரா கரெக்ட்டா ஆஃப் ஆகி இருக்கு எப்படி? என்கிட்ட கேமரா வைக்கப் போறேன் கேமரா வைக்கப்போறேன்னு சொன்னவரு அப்பத்தா இங்க இப்படி படுத்த படுக்கையா ஆன அப்றம் கேமரா பத்தியே பேசல.. என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜனனிக்கு ஏதோ ஒரு யோசனை வருகிறது. அந்த யோசனையை அடுத்து சக்தியை வேக வேகமாக அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறாள்
வீட்டு பால்கனியிலிருந்து அந்த பக்கம் அமைந்துள்ள வீட்டை நோக்கி கை காண்பித்து அந்த வீட்டில் சிசிடிவி இருக்கிறது என்பதை சக்திக்கு தெரியப்படுத்துகிறாள். அதில் யார் வீட்டுக்கு வந்தார்கள் என்ன நடந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும் என்கிறாள்.
இருவரும் வீட்டை விட்டு வெளியில் வந்து அந்த எதிர் வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு வீடு பூட்டி இருப்பதையடுத்து உள்ளே இருப்பவர்கள் சார் சார் என்று அழைக்க, அவரிடம் ஒரு உதவி வேண்டும் என்று கேட்கிறார்கள்.
நடந்ததைக் கூறி அந்த நாளில் யார் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்பதைக் காண வேண்டும் என்று சொல்ல அவரும் தன் மொபைலில் பதிவான வீடியோவைக் காண்பிக்கிறார். அதில் ஜீவானந்தம் மற்றும் அவரின் ஆட்கள் உள்ளே நுழைவதைக் காண்கிறாள் ஜனனி. ஆனால் தவறுதலாக அவர் குணசேகரனின் ஆட்கள் என்று தப்பாக யூகிக்கிறார்கள் இருவரும். பின் வண்டியை எடுத்துக் கொண்டு வரச் சொல்கிறாள். சக்தியும் வண்டியை எடுக்கச் சென்றுவிடுகிறான்.
பின் ஐஸ்வர்யா படிக்கும் புதிய பள்ளியைக் காண்பிக்கிறார்கள். நந்தினி, ரேணுகா இருவரும் ஐஸ்வர்யாவின் பள்ளிக்கு உடன் வந்திருக்கிறார்கள். தன்னம்பிக்கை குறைவதற்கு காரணமே வேறொரு மொழியில் படிப்பதுதான். இதனால்தான் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்று ஆசிரியர் ஒருவர் பேச, அதில் மகிழ்கிறார்கள் அனைவரும். பின் அவர் ரேணுகா, நந்தினி, ஐஸ்வர்யா மூவரையும் அருகில் இன்னொரு இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு பள்ளி மாணவர்கள் தங்களின் பள்ளியிலேயே ஆங்காங்க மரம், செடி, கொடிகளையும் பூச்செடிகள், காய்கறிகள், பழங்கள் என பலவற்றை பயிரிட்டு வளர்த்து விளைவித்து அங்கேயே சமைத்து சாப்பிடுவார்கள் என்று விளக்குகிறார் ஆசிரியர். தோட்டக்கலை மட்டுமின்றி நடனம், பாடல், மற்ற கலைகளையும் கற்றுத் தருகிறோம் என்று கூறுகிறார்.
மதிப்பெண்களை மட்டும் நோக்கமாக கொண்டு கற்று தரும் பள்ளிகளுக்கு மத்தியில் அரசு பள்ளிகள் என்னென்ன செய்கின்றன என்பதை இயக்குநர் தெளிவாக காட்ட விரும்பியிருக்கிறார். அந்த வகையில் ரேணுகாவும் ஜனனியுமே நம்மைப் போல வியந்து பார்த்துக் கொண்டு வருவதைப் போலவும் நம் பிரதிநிதிகளாக இவற்றை வியந்து பாராட்டுவதாகவும் காட்சி அமைத்திருக்கிறார் இயக்குநர்.
தாங்களும் அரசுப் பள்ளியில்தான் படித்தோம் டிகிரி முடித்து இப்படி பெரிய இடத்தில் வாக்கப்பட்டு வந்தபிறகு பணத்தைக் கொட்டி பாடம் படித்தால்தான் நல்லது என நாங்களே மாறிவிட்டோம் இப்போதுதான் எங்களது கண்கள் திறந்திருக்கிறது என்பதாக நந்தினி பேசியது அவருக்கு மட்டுமில்லை நம்மில் பலருக்கும் அதுதான் தோன்றியிருக்கும். பணத்தை விட அரசு பள்ளியில் பயிலும் பல விதமான செயல்முறைக் கல்வி மாணவர்களை வளரும்போதே தன்னம்பிக்கையுடன் வளரச் செய்கிறது.
ஐஸ்வர்யா, ரேணுகா, நந்தினி மூவரும் ஆட்டோவில் ஏறி வீடு திரும்பும் வழியில் பள்ளியைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் இதை எப்படி நடத்துவது, பெரிய பள்ளியை விட்டுவிட்டு இந்த பள்ளிக்கு ஐஸை எப்படி சேர்ப்பது, குணசேகரன் எதை சொல்வாரோ எப்படி திட்டுவாரோ என்ற பயத்தில் நந்தினி கேட்க, ரேணுகா பின்வாங்கவே மாட்டேன் என்று சொல்கிறாள். நந்தினியும் கரிகாலனின் கதையை இழுத்து விட்டால் நம்மை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று கூறிவிடுகிறாள்.
சக்தி, ஜனனி இருவரையும் காண கௌதம் வருகிறான். ஜனனியே அவரை வரச் சொல்லியிருக்கிறாள். சக்தியும் அப்பத்தாவுக்கும் குணசேகரனுக்கும் இருக்கும் பிரச்னை, அருணுடன் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம், அப்பத்தா கோமா சென்றது, குணசேகரனின் தில்லு முல்லு என அனைத்தையும் கூறுகிறான். ஜீவானந்தத்தின் பெயரை ஜனனி கூறும்போது கௌதம் ஷாக் ஆகிறான்.
காரணம் குணசேகரன் செய்ததாக சொன்ன அனைத்தையும் செய்தது ஜீவானந்தம்தான். இதற்காக சக்தியும் ஜனனியும் கௌதமிடம் கூறுகிறார்கள். அவன் ஜீவானந்தத்தின் புகைப்படத்தைக் காண்பித்து யார் என்பதை கண்டுபிடிக்க உதவி கேட்கிறான். இதனால் என்ன செய்வது என்பது தெரியாமல் குழம்பி நிக்கிறான் கௌதம்.
ethir neechal serial tomorrow episode 12 july 2023 | எதிர்நீச்சல் நாளைய எபிசோட் 12 ஜூலை 2023
கரிகாலனை அடிக்கப் போன தர்ஷினி! அதிரடி முடிவு எடுக்கப்போகும் குணசேகரன்!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2