இயக்குனர் மோகன் ஜியின் புதிய திரைப்படம் பகாசூரன் படப்பிடிப்பு தொடக்கம்

பகாசூரன் படத்தின் படப்பிடிப்பு முதல் காட்சியில் நடிகர் நட்ராஜ் இருப்பது போன்று புகைப்படம் ஒன்றை மோகன் வெளியிட்டுள்ளார்.;

Update: 2022-04-18 13:22 GMT

பகாசூரன் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாக மோகன் ஜி, அறிவிச்சிருக்கார். முதல் காட்சியில் நடிகர் நட்ராஜ் இருப்பதுபோன்று புகைப்படம் ஒன்றும் வெளியிட்டுள்ளார்.

திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மோகன் ஜி. இவரின் அடுத்த படைப்பாக உருவாகும் திரைப்படம் 'பகாசூரன்'. இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவனும் அதோடு நடிகர் நட்ராஜ் மெயின் ரோலிலும் நடிக்கிறாய்ங்க. இந்த படத்தை மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரிச்சு வருது.

சமீபத்தில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படப்பூஜையுடன் நிகழ்ச்சி நடைபெற்று படத்தின் தலைப்பும் அறிவிக்கப்பட்டது. இந்த படம் மோகன் ஜியின் வழக்கமான படமா அல்லது வேறு விதமான கதையாக என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாக மோகன் ஜி, அறிவிச்சிருக்கார். முதல் காட்சியில் நடிகர் நட்ராஜ் இருப்பதுபோன்று புகைப்படம் ஒன்றும் வெளியிட்டுள்ளார்.

Similar News