வைரலாகும் துருவ நட்சத்திரம் டிரைலர்!
விக்ரம் நடிப்பில் துருவநட்சத்திரம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.;
கௌதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
விக்ரம், சிம்ரன், ரீத்து வர்மா, ராதிகா, பார்த்திபன், கௌதம் மேனன், திவ்யதர்ஷினி நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கிய படம் துருவ நட்சத்திரம். இந்த படம் பல்வேறு சோதனைகளைத் தாண்டி இப்போது ரிலீசாக இருக்கிறது.
வரும் நவம்பர் 24ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கௌதம் மேனன் இந்த படத்தை மிகவும் நம்பியிருக்கிறார். 5 வருடங்கள் ஆனாலும் இந்த படத்தின் கதை நிச்சயம் தற்போதை ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இருக்கும் என அவர் நம்புகிறார். இதனால் இந்த படத்தை சினிமேட்டிக் யுனிவர்ஸாக கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறார் கௌதம்.
இந்நிலையில் ரிலீசுக்கு சரியாக 1 மாதம் இருக்கையில் இப்போது விஜயதசமி விருந்தாக படக்குழு படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது.
10 பேர் கொண்ட எந்த சட்ட திட்டத்துக்குள்ளும் அடங்காத அட்டகாசமான போர்ப்படை தளபதிகளைக் கொண்ட ஒரு டீம் எதிரிகளை அழிக்கப்புறப்படுகிறது. கிரிக்கெட் டீம் மாதிரி 11 பேர் இருந்தால் நன்றாக இருக்கும் என சொல்லும்போது விக்ரம் ஜானாக என்ட்ரி கொடுக்கிறார். வேற லெவலில் இறங்கி அடிக்கும் விக்ரம் இந்த படத்தை தனது கம்பேக்காக கொடுப்பாரா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலர் வெளியான 2 மணி நேரங்களுக்குள் 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த படத்தில் விக்ரமின் லுக் மற்றும் ஹாரிஸின் இசையைக் கொண்டாடி வருகின்றனர்.