துருவ நட்சத்திரம் பட ரிலீஸ் - ஹாரீஸ் ஜெயராஜ் சொன்ன சூப்பர் தகவல்!

துருவ நட்சத்திரம் படத்தைப் பற்றிய ஒரு புது அப்டேட்டை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.;

Update: 2023-02-25 06:10 GMT

கௌதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விக்ரம், ரித்துவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் இசை குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கோப்ரா. இந்த படம் சரியான வரவேற்பை பெறாத நிலையில், முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்ததே அவரின் பெஸ்ட்டாக இருந்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் தங்கலான் படம்தான் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது.

பா ரஞ்சித் இயக்கும் புதிய படம் விக்ரமுக்கு 61வது படமாகும். இதை ஸ்டூடியோ கிரீன் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கோலார் தங்க வயல் மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது பா ரஞ்சித் படத்தில் நடித்து வரும் விக்ரமுக்கு தங்கலானுக்கும் பொன்னியின் செல்வனுக்கும் இடையில் இன்னொரு படம் ரிலீஸாக காத்திருக்கிறது அதுதான் துருவ நட்சத்திரம்.

கடந்த 2017ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கி விக்ரம் நடிக்க படப்பிடிப்பு துவங்கிய படம் துருவ நட்சத்திரம். பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்ட இந்த படம், பின் விக்ரம் ஒரு பக்கம் பிஸியாக, கௌதம் மேனன் இன்னொரு பக்கம் பிஸியாக என நிரந்தரமாக கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படம் மீண்டும் துவங்கப்பட்டு மீதமுள்ள காட்சிகள் படம்பிடிக்கப்படும் எனவும் விரைவில் திரைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. விக்ரமும் 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்து மிச்ச காட்சிகளில் நடித்து கொடுத்துள்ளார். இதனையடுத்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன. இன்று முதல் இசைக் கோர்ப்பு பணிகளும் துவங்கியிருப்பதாக இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

விரைவில் படம் திரைக்கு வரும் எனவும் திரையரங்குகளில் சந்திக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இசைப்பணிகள் முடிந்ததும் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News