கடைசியா அப்டேட் சொல்லிட்டாரு கௌதம் மேனன்! அந்த படம் எப்ப ரிலீஸ் தெரியுமா?
Dhruva Natchathiram Update-துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி எது என்பது தெரியவந்துள்ளது. இதனை கௌதம் மேனனே கூறியிருப்பதால், அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விக்ரம் ரசிகர்கள்.;
Dhruva Natchathiram Update-துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி எது என்பது தெரியவந்துள்ளது. இதனை கௌதம் மேனனே கூறியிருப்பதால், அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விக்ரம் ரசிகர்கள்.
விக்ரம் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் நம்ம கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன், ராதிகா, டிடி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் வந்தால் மட்டுமே நம்புவோம் என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.
கிட்டத்தட்ட 5 தயாரிப்பாளர்கள் கொண்ட இந்த படம் மாறி மாறி கடன்களால் சூழப்பட்டு பண பிரச்னையால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு, படத்தை எடிட் செய்ய அனுப்பியிருந்தார்கள் இந்நிலையில் தற்போது ஆர் ஆர் வேலைகளும் துவங்கிவிட்டன என ஹாரிஸ் ஜெயராஜே அறிவித்திருந்தார்.
துருவ நட்சத்திரம் படம் இசை கோர்ப்பு வேலைகள், தணிக்கை என பல கட்ட வேலைகளுக்கு பிறகு வரும் மே மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் மாதம் 28ம் தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியாக இருக்கும் நிலையில், நவம்பர் மாதம் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.
அடுத்த பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படம் 2024 ம் ஆண்டில் ரிலீஸ் ஆனால் அடுத்தடுத்து 3 படங்கள் என விக்ரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.
இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு சீன் நடிகராக வந்து கடைசியில் முழுநேர வில்லனாக நடித்து வருகிறார் கௌதம் மேனன். விஜய் நடிப்பில் லியோ திரைப்படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருந்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2