துருவ நட்சத்திரம் எப்ப ரிலீஸ் தெரியுமா?

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-10-02 11:00 GMT

சீயான் விக்ரம் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நீண்ட காலமாக கிடப்பில் இருந்த இந்த படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றால்தான் அடுத்து கௌதம் மேனன் படம் இயக்குவார் என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்தப் படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டன. 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. பின் பல கடன்களுக்காக இந்த படம் கிடப்பில் போனது. கௌதம் மேனன் ஒரு படத்துக்கு வாங்கிய கடனை வைத்து வேறு படத்தை தயாரித்து மொத்தமாக கடனில் சிக்கி தவித்தார் என்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது

ஐஸ்வர்யா ராஜேஷை முற்றிலுமாக படத்திலிருந்து நீக்கி அவர் இல்லாதவகையில் புதிய கதையை வைத்து எடிட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்பனை ஆகவில்லையாம். ஹாட்ஸ்டார்தான் இந்த உரிமையைப் பெற்றுள்ளதாம். அதனால் அதிகாரப்பூர்வமாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும்படி அழுத்தம் கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதன்படி, இந்தப் படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் விக்ரம், ரீத்துவர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சதீஷ் கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஹாரிஸ் இசையில் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

Tags:    

Similar News