நேருக்கு நேர் மோதும் தனுஷ்-செல்வராகவன்

நடிகர் தனுஷ் வாத்தி படம் மற்றும் இயக்குனர் செல்வராகவன் நடித்த பகாசூரன் ஒரே நாளில் வெளிவருகிறது.;

Update: 2023-01-28 09:45 GMT

பைல் படம்.

நடிகர் தனுஷின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் அவரது அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நானே வருவேன் படத்தையும் செல்வராகவன் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இயக்குனராக ஒருகாலத்தில் பிஸியாக இருந்த செல்வராகவன் தற்போது நடிகராக மாறி அதிலும் படு பிசியாகி விட்டார். தற்போது பல படங்கள் நடித்து வரும் அவர், அடுத்து மோகன்.ஜி இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்து இருக்கிறார் அவர்.


அந்த படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்து இருக்கின்றனர். பகாசூரன் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் தான் தனுஷின் வாத்தி படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அண்ணன் தம்பி இருவரும் நேருக்கு நேர் பாக்ஸ் ஆபிசில் மோதுவது உறுதியாகி இருக்கிறது. 



Tags:    

Similar News