தனுஷ் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் லிஸ்ட் இதோ! ஒவ்வொன்னும் தரம்!
Dhanush Upcoming Movies List Tamil-தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களுள் ஒருவராகி இப்போது இந்திய சினிமாவின் முகமாக மாறியிருக்கிறார் தனுஷ். 90களில் கமல்ஹாசனுக்கு நாடு முழுக்க இருந்த ரசிகர்கள் அளவுக்கு இளைய தலைமுறையினரை தன் வசம் ஈர்த்திருக்கிறார் தனுஷ் என்றால் அது மிகையில்லை.;
Dhanush Upcoming Movies List Tamil-2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஷ், காதல் கொண்டேன் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். காரணம் அவரின் கதாபாத்திரம்தான். திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் படங்கள் பேசப்பட்டாலும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது தேவதையைக் கண்டேன் படம்தான்.
இடையில் டிரீம்ஸ், அது ஒரு கனா காலம் உள்ளிட்ட படங்கள் நடித்திருந்தாலும் அவை பெரும்பாலும் யாருக்கும் தெரியாத படங்களாகவே இருந்தன. புதுப்பேட்டையில் கொக்கிகுமாராக வாழ்ந்திருப்பார் ஆனால் படம் வெளியான போது இவரை கொண்டாடவே இல்லை நாம்.
வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமாகும் பொல்லாதவன் படம்தான் தனுஷ் ஆக்ஷன் அவதாரம் எடுக்க உதவியது. அடுத்த படமே யாரடி நீ மோகினி, இந்த இரண்டு படங்களிலும் தனுஷின் இன்னோசன்ஸ் அப்படி தெரியும். படம் முழுக்க ஒரே மாதிரிதான் நடித்திருப்பார். அதன் பிறகு படிக்காதவன், குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களிலும் ஒரே மாதிரியான கியூட் நடிப்பை காட்டிய தனுஷ், தன்னுள் இருக்கும் நடிகனை அடையாளம் கண்டு வெரைட்டியாக தரத் துவங்கியது ஆடுகளம் படத்திலிருந்துதான்.
மீண்டும் மாப்பிள்ளை, வேங்கை என கமெர்ஷியல் படம், மயக்கம் என்ன, 3 போன்ற கொஞ்சம் அழுத்தமான படங்கள், ராஞ்சனா, மரியான், நையாண்டி என வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.
தனுஷின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி தமிழகத்தின் பெரும்பான்மை ரசிகர்களை அவர் மீது கவனம் செலுத்த வைத்தது விஐபி வேலையில்லா பட்டதாரி படம்தான்.
ஷமிதாப் ஹிந்தி படத்தில் இவரின் நடிப்பை பார்த்துவிட்டு மிரண்டவர்கள் பலர் உண்டு. மாரி, தங்கமகன், தொடரி, கொடி என அடுத்தடுத்து படங்கள் நடித்தாலும் பா பாண்டி மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமானார்.
தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் படத்தின் மூலம் ஆங்கிலத்திலும் அறிமுகமானவர் பின்னாளில் தி கிரே மேன் எனும் இன்னொரு ஆங்கிலப் படத்திலும் நடித்தார்.
தனுஷின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களான வட சென்னை, அசுரன், கர்ணன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் மாதிரியான படங்களும் சமீப நாட்களில் ரசிகர்களுக்கு அவர் கொடுத்து விருந்து படைத்தவைதான்.
கடைசியாக தனுஷ் நடிப்பில் வாத்தி படம் வெளியாகியிருந்தது.
தனுஷ் லைன் அப்:
கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். சத்யஜோதி தியாகராஜன் படத்தை தயாரிக்கிறார். இந்த வருடம் படம் திரைக்கு வர இருக்கிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ஒரு படம் நடிக்கவுள்ளார் தனுஷ். இந்த படத்தில் சஞ்சய்தத் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சுனில் நரங் இந்த படத்தை தயாரிக்கிறார்.
ராயன் (D50) என்று ரசிகர்கள் கூப்பிடும் பெயர் என்றாலும் இன்னும் பெயர் வைக்கப்படாத தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கவுள்ளார் என்கிறார்கள். படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.
இந்த படத்தில் தனுஷிடன் விஷ்ணு விஷால், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2