தனுசுடன் இணையும் ராஜா ராணி சீரியல் நடிகை

Dhanush new update -ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரவீனா வாத்தி படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார்.;

Update: 2022-08-22 05:45 GMT

பைல் படம்.

Dhanush new update-தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாத்தி. வெங்கி இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக இப்படத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரவீனா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார். வாத்தி படப்பிடிப்பில் தனுஷ், பிரவீனா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News