Dhanush in Leo வேகமாகப் பரவும் தகவல்! ஒருவேள உண்மையாதான் இருக்குமோ?

விஜய்யுடன் லியோ படத்தில் தனுஷும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2023-07-05 10:02 GMT

தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் தனுஷும் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இது போலியான தகவல் என்று நினைத்தாலும் பல்வேறு தரப்பிலிருந்து கிடைக்கும் தகவலைப் பார்க்கும்போது இது உண்மையாகவே நடந்தால் மாஸாக இருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் லியோ. இந்த படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் நட்சத்திர பட்டாளம் மிகப்பெரிய அளவில் கூடிக்கொண்டே செல்கிறது. மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்பும் படத்தில் இணைந்துள்ளார். இதனால் படத்தில் இன்னும் எத்தனை பேர்தான் இருக்கீங்க, எல்லாரும் 5, 5 நிமிடங்கள் வந்து செல்வார்களோ என ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

இதுக்கே இப்படி என்றால் அடுத்து இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷும் நடிக்கிறார் என்று ஒரு தகவல் இணையதளம் முழுக்க பரவிக் கிடக்கிறது. இதுவும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் படம் வேற லெவலுக்கு இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆனால் ரஜினியைப் போலவே விஜய்யும் தன் இமேஜூக்கு நிகரான இன்னொரு நடிகரை தனக்கு எதிரான கதாபாத்திரத்தில் அதுவும் ஸ்கோர் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க விடமாட்டார்கள். ஏற்கனவே இதனை மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு நிகரான கதாபாத்திரத்தைக் கொடுத்து வாங்கிக்கட்டிக் கொண்டார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். 

Tags:    

Similar News