முதல்ல நானே பெரிய ஃபேன்.. அப்றம்தான் மருமகன் அது இதுலாம்.. மாஸ் காட்டிய தனுஷ்!

தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெயிலர் படம் குறித்து பதிவிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.;

Update: 2023-08-07 08:35 GMT

தனுஷின் இந்த டிவீட்டை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமல்ல, ரஜினிகாந்தே மகிழ்ச்சியில் திளைத்திருப்பார். அப்படி ஒரு டிவீட்டை போட்டிருக்கிறார் தனுஷ்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தையும் ரசிகர்களையும் பிடித்துவிட்டார் தனுஷ். அவரது ஒவ்வொரு படமும் ஏன் ட்வீட்டும் கூட அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களும் தனுஷ் படங்களுக்கு மிகுந்த ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தனுஷ் ஒரு நடிகராக மட்டுமின்றி ரஜினிகாந்தின் மருமகன் என்பதாலும் அவருக்கு ரஜினி ரசிகர்களின் ஆதரவு மிகுந்த அளவில் இருக்கிறது.

ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். சில வருடங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி மனதளவில் பிரிந்து வாழத் தொடங்கிவிட்டனர்.

தனுஷ் தனது திரைப் பயணத்தில் குடும்பத்துக்கு போதிய நேரம் ஒதுக்குவதில்லை என்று அவ்வப்போது செய்திகள் வெளிவந்தாலும் அவரும் சரி ஐஸ்வர்யாவும் சரி கருத்து வேறுபாடுகள் பல இருந்தும், மகன்களின் கல்வி, விளையாட்டு விசயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதோடு இணைந்து செல்ல வேண்டிய இடங்களில் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பது மிகப் பெரிய விசயமாகும்.

பிரிந்து வாழ்ந்தாலும் இன்று வரையில் ஒரு வார்த்தை அவரைப் பற்றி இவரோ இவரைப் பற்றி அவரோ தப்பாக பேசியதே கிடையாது என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள். இதற்கு காரணம் தனுஷுக்கு ரஜினிகாந்த் மேல இருக்கும் மரியாதைதான் என்கிறார்கள்.

மரியாதை மட்டுமின்றி அதனையும் தாண்டி ரஜினிகாந்தின் ரசிகராக இருக்கிறார் தனுஷ். ரஜினிகாந்த் படம் எப்போதெல்லாம் வெளிவருகிறதோ அப்போதெல்லாம் கூல் சுரேஷ் மோடுக்கு போய்விடுகிறார். இப்போது ஜெயிலர் படத்தின் ரிலீஸ் சமயத்தில் படம் குறித்து ஒரு டிவீட் போட்டிருக்கிறார் தனுஷ்

தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள தனுஷ் இது ஜெயிலர் வாரம் என்று குறிப்பிட்டுள்ளார். தனுஷ் ஜெயிலர் குறித்து வெளியிட்டுள்ள இந்த பதிவு வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News