D51 Heroine விஜய் பட நடிகையைக் டிக் செய்த தனுஷ் படக்குழு!
தனுஷ் ஜோடியாக நடிக்க விஜய் பட நாயகியை ஒப்பந்தம் செய்துள்ளனராம்.;
தனுஷின் 51வது படத்தில் நாயகியாக நடிக்க விஜய் பட நடிகையை Dhanush 51 Heroine Name ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. தமிழ் தெலுங்கு இருமொழிகளிலும் உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அடுத்து வாரிசு படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். இரண்டு படங்களிலும் பெரிய அளவில் பர்பாமன்ஸ் தரவில்லை என்றாலும் இப்போது தனுஷ் ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நன்கு பரீட்சியமான முகம் வேண்டும் என்பதால் இவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.
தனுஷ் - சேகர் கம்முலா இணையும் புதிய படம் இந்த ஆண்டு டிசம்பரில் துவங்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக சன்பிக்சர்ஸ் - தனுஷ் இணையும் படம் துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படப்பிடிப்பில் தனுஷ் இணைவார் என்கிறார்கள்.
இந்த படத்தை முடித்த கையோடு உடனடியாக சேகர் கம்முலா படத்துக்குச் செல்கிறார் தனுஷ். டாலர் ட்ரீம்ஸ் எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான சேகர் கம்முலா, சராசரியான படங்களைக் கொடுத்து வந்தார்.
கடந்த 2017ம் ஆண்டு வருண் தேஜ், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் ஃபிடா படத்தை இயக்கியிருந்தார் சேகர். இதன்மூலம் தெலுங்கு சினிமாவில் இளைஞர்களுக்கும் பிடித்த இயக்குநராக மாறினார். அடுத்து லவ் ஸ்டோரி 2021 படத்தின் மூலம் அதனை மீண்டும் நிரூபித்தார்.
இப்போது தனுஷ் நடிப்பில் விரைவில் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில்தான் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். Dhanush 51 Heroine Name இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம்.