தனலட்சுமியிடம் தகராறு செய்த ராபர்ட் மாஸ்டரால்...பரபரப்பு... படிங்க...

dhanalakshmi vs robert master fight in bigg boss 6, bigg boss tamil season 6 ஏங்க...நீங்களும் பிக்பாஸ் பார்க்கறீங்க தானே... ஏங்க இப்படி அடிச்சுக்கிறாங்க...இதெல்லாம் நிசமாவா,,,- இல்லை சும்மானாச்சும்மா...கொஞ்சம் சொல்லுங்களேன்...சண்டை போடவேண்டாம்னு...

Update: 2022-11-02 11:53 GMT


dhanalakshmi vs robert master fight in bigg boss 6, bigg boss tamil season 6



dhanalakshmi vs robert master fight in bigg boss 6, bigg boss tamil season 6

உலகத்திலே பொழுதுபோக்கு என்று ஒன்று இல்லாவிட்டா அவ்வளவுதாங்க. அதனாலதான் அந்தக்காலத்தில் சினிமா பிச்சுக்கிட்டுபோச்சுங்க.... காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது டிவிக்கு முன்னாடி உட்கார்ந்தால் எப்ப எழுவார்கள்எ ன சொல்லமுடியாது. அந்த அளவிற்கு நம்மை கட்டிப்போடும் வகையில் நல்ல நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறது சேட்டிலைட் சேனல்கள்.சேட்லைட் சேனல்கள் அதிகமாகிவிட்டதால் வணிக ரீதியாக அவர்கள் வளர அவர்களாகவே ஒரு பூதாகரத்தினை கிளப்பிவிட்டுவிட்டு அதன் மூலம் சோஷியல் மீடியாவில் பரவுவதை வைத்து ரேட்டிங் பெற்று விடுகின்றனர். இதுபோல் சேட்டிலைட் சேனல்களுக்குள் இருக்கும் போட்டிகளோடு நிகழ்ச்சிகளும் போட்டியிடுகிறது. அதுவும் சீரியல்களா? சொல்லவே தேவையில்லை... ரேட்டிங் பெற என்னென்ன வேலைகளை செய்கிறார்கள் தெரியுமா? அந்த மாதிரி ரேட்டிங்கை அதிக அளவில் பெற்று தருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

5 சீசன்களை முடித்துவிட்டு 6 வது சீசனை வெற்றிகரமாக விஜய் டிவியானது துவங்கி கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் தினந்தோறும் விறுவிறுப்பாகவே செல்கிறது. அது ஒண்ணுமில்லீங்க...தமிழகத்தில் தற்காலத்தில் கூட்டுக்குடும்பமாக இருந்தால்இதுபோல்தான் இருந்திருக்கும் என சொல்லாமல்சொல்கிறது பிக்பாஸ் என்று கூட வைத்துக்கொள்ளலாம். காரணம் அக்கால கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தனர். அவர்களின் வழிகாட்டுதல் படிதான் வாழ்ந்தனர் கட்டுப்பாடுகளோடு.

dhanalakshmi vs robert master fight in bigg boss 6, bigg boss tamil season 6


dhanalakshmi vs robert master fight in bigg boss 6, bigg boss tamil season 6

இந்த பிக்பாஸ்தான்கூட்டுக்குடும்ப வீடு. இதில் பெரியவர் நடிகர் கமல்ஹாசன். வாரம் இரண்டு நாட்கள் காட்சி தருவார். அன்று இதுவரை நடந்த நிகழ்ச்சிகள்,சண்டைகள், குறித்த விவாதங்கள் நடக்கும். அவர் அளிக்ககூடிய டாஸ்க்குகளை இவர்கள் ஒன்றிணைந்து செய்ய வேண்டும் என தொடர்கிறது பிக்பாஸ்.

ஒண்ணுமில்லீங்க....நம்ம வீட்டு பொம்பளங்களை ஆம்பளங்களை ஒரே வீட்டில் வைச்சீங்கன்னா என்னா நடக்குமோ அதுதாங்க நடக்குது...நம்மள படம்பிடிக்க ஆளில்லை... நாம் ரியலா அடிச்சுப்போம்.. அவர்கள் ரீலா அடிச்சுக்கிறாங்க... ஆனா காசு பாக்கறாங்க.. விளம்பரத்துல... மத்த விஷயத்தில... நாம அதைப்பார்த்து நம்மை நேரம் வீணாவது பற்றி கவலைப்படாமல் சண்டைகளை சந்தோஷமாக குடும்பத்தோடு உட்கார்ந்து பாக்குறோம் அவ்வளவுதாங்க வித்தியாசம்... அவங்களுக்கு பணம் வருது...ந மக்கு பணம் , நேரம் போவுது...

பிக்பாஸ் நடத்த கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து இந்த வீட்டினை ரெடி செய்துள்ளார்கள். இங்குஇல்லாத வசதிகளே இல்லை போங்க... இப்படி வெளியில சுதந்திரமா சுத்திட்டு இருந்தவங்களை நாலு சுவத்துக்குள் அடைத்து வாழ வைக்கிறாங்க... அதற்கு காசும்கொடுப்பாங்க.. நாம உஷாரா இருக்கணும். வேணும்னே சண்டைக்கு வருவாங்க.. நாம பேசாமா இருக்கணும் அல்லது அவங்களோட சண்டை போடணும். இதுவரை தன்னுடைய சொந்த வீடுகளில் வேலை செய்யாதவர்கள் உள்ளே சென்றுவிட்டால் டைம்டேபிள் படி வேலை செஞ்சாகணும்...டபாய்க்க முடியாதுங்கோன்னா பாத்துக்குங்க...

பிக்பாஸ் வீட்டில ஆண்களும், பெண்களும் என இருதரப்பினருக்கும் வாய்ப்புகொடுக்கப்பட்டு உள்ளே உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு அட்ஜஸ்ட் பண்ணி இருக்கணும். ஆனா உள்ளே என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா? நின்னாசண்டை, உட்கார்ந்தா சண்டை, நடந்தா சண்டை..இப்படித்தான் போகுதுங்க..

dhanalakshmi vs robert master fight in bigg boss 6, bigg boss tamil season 6



dhanalakshmi vs robert master fight in bigg boss 6, bigg boss tamil season 6


பிக்பாஸ் சீசன் 6ல் பொதுமக்கள் சார்பில் பொதுமக்கள் என இரண்டு பேரை உள்ளே அனுமதிச்சிருக்கிறாங்க..அதில ஒண்ணு தனலட்சுமின்னு ஒரு பெண், மற்றும் ஷிவின் என்றதிருநங்கை ஆகிய இரண்டுபேரைத்தான் பொதுமக்கள் என்ற பிரிவில் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் எல்லாம் ஒரு பிரபலமானவர்கள் என வைச்சுங்க..ஒவ்வொருத்தரும் ஒரு துறையில் இருப்பவங்க அவ்வளவுதாங்க.

அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர்னு ஒருத்தர் உள்ளே இருக்கார் இந்த தடவை. அவர் என்னா பண்ணாருன்னா இந்த தனலட்சுமியைப் பார்த்து உன்னை செருப்பால அடிப்பேன்னு சொல்லியிருக்காரு... இது தேவைங்களா?

சாதாரணமா ரோட்டில நடக்கிற பொண்ணுங்ககிட்ட பேசினாவே குத்தமா நினைக்கிற உலகத்தில வெளியே வரமுடியாது என்ற நிலைமையில அதாவது ஜெயில் மாதிரி உள்ள வீட்டில நீ ஒரு பெண்ணை பார்த்து தைரியமா உன்னை செருப்பால அடிப்பேன்னு சொல்லியிருக்கியே உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?

இந்த சண்டைதான் இப்ப பிக்பாஸ் வீட்டில ரெக்கை கட்டி பறக்குதுங்க..இந்த விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தனலட்சுமி முதல் வாரத்தில் இருந்தே யாருடனாவது சண்டையிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

முதல் வாரத்தில் ஜிபி முத்து உடன் சண்டையிட்ட தனலட்சுமி, அடுத்த வாரம் அசல் கோலாரை டார்க்கெட்டாக்கி அவரிடம் சண்டையிட்டுபிரபலமாகிவிட்டார். அசல் கோலார் சும்மா இருக்காம இந்த அம்மாவை ஆன்ட்டி என சொல்லிவிட்டதால் இதுக்கு கோபத்தின் மேல் கோபம் வந்துடுச்சு. அவ்வளவுதாங்க... கடந்த வாரத்தின் பொம்மை விளையாட்டில இந்த தனலட்சுமி சும்மா இருக்காம அசீனோடு சண்டை.. இதனால் அசீம் கோபப்பட்டு இவரை தள்ளிவிட்டுவிட்டதால் அது ஒரு சர்ச்சையானது. இப்படியே வாரா வாரம் ஆரவாரமாக தனலட்சுமி அக்காவின் சண்டை பிரபலமாகி வருகிறது பிக்பாஸ்ல.

dhanalakshmi vs robert master fight in bigg boss 6, bigg boss tamil season 6



dhanalakshmi vs robert master fight in bigg boss 6, bigg boss tamil season 6

இந்த வாரத்திற்கு டார்கெட் யாரு தெரியுமா? ராபர்ட் மாஸ்டர்தான். சிவனேன்னு இருக்கற ராபர்ட் மாஸ்டர் சும்மா இருக்காம பகலில் துாங்கும் தனலட்சுமியை பத்தி சாப்பிடறா, துாங்கறான்னு சொல்லப்போக அவ்வளவுதான் போங்க. இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையான்னு மாஸ்டரைப் பார்த்து தனலட்சுமி சொல்லப்போக செருப்பால அடிப்பேன்னு மாஸ்டர் சொல்லப்போக முட்டிக்கிச்சுங்கோ...

நீ இப்படி துாங்கிக்கிட்டுஇருந்தா நாய் குலைக்கும்னுதான் நான் உன்னை சொன்னேன் என மாஸ்டர் சாக்கு சொல்லியுள்ளார். நீங்க அப்படியெல்லாம் என்னை சொல்லாதீங்கன்னு அவரை எதிர்த்து பேசியுள்ளார் நம்ம சண்டை போடும் தனலட்சுமி.வாரா வாரம் சண்டை போட ஆளைத்தேர்ந்தெடுக்கும் தனலட்சுமி அக்கா இந்த வாரம் ராபர்ட் மாஸ்டரை லிஸ்டில் வைத்திருந்தார்களோன்னு உள்ளே பேசிக்கிறாங்களாம்.அடுத்தவாரம் யாருன்னுதான் தெரியல...உள்ளே இருப்பாங்களா? இவங்க...இல்லை... அடுத்தவாரமும் சண்டைதானா? என்பதைப் பார்ப்போம்...

Tags:    

Similar News