கமல் மீது சென்னை போலீசில் திடுக் புகார்: காரணம் இதுதான்!

மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-05-12 13:00 GMT

கமல்ஹாசன்.

மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் நேரங்களிலும் அரசியலிலும், மற்ற நேரங்களில் சினிமா, டிவி என்று கவனம் செலுத்தி வருகிறார். அவ்வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விக்ரம் படத்தில், கமல் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் கமல் தவிர, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ் கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. அனிருத் இசை அமைத்துள்ளார். 'விக்ரம்' திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதனிடையே, இப்படத்தின் பாடல் ஒன்று நேற்று படக்குழு வெளியிட்டது. "பத்தல பத்தல" என்ற பாடல், நேற்று வெளியானது. கமல் ஹாசன் எழுதி, பாடியிருக்கும் இந்தப் பாடல் பெரும் வரவேற்பை பெற்று, டிரெண்டிங் ஆகியுள்ளது.

இப்பாடலில், மத்திய அரசை கமல் மறைமுகமாக சாடியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கஜானாலே காசில்லே..

கல்லாலையும் காசில்லே..

காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..

ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னுமில்ல இப்பலே...

சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே..

என்று அப்பாடல் வரிகளில், அரசியலை தூவி இருக்கிறார் கமல். இப்பாடல், வெளியான 24 மணி நேரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்றது.

இதனிடையே, பாடலில் ஒன்றியம் என்று மத்திய அரசை குறிப்பிட்டு, சாவி இப்ப திருடன் கையில் என்று மத்திய அரசை கமல் விமர்சனம் செய்துள்ளதாக, சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுதவிர, ஜாதி ரீதியாகவும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளதாக விமர்சனங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

எனவே, சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை கமல்ஹாசன் நீக்க வேண்டும்; இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம், இணையதளம் வாயிலாக, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

( தவறவிடாதீர்கள்நித்யானந்தாவுக்கு என்னாச்சு? சமாதியானது உண்மையா? )

Tags:    

Similar News