காபி வித் காதல் படம் ரிலீஸ் எப்போது?

Yuvan Latest Songs-சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்தது.;

Update: 2022-08-25 06:15 GMT

காபி வித் காதல் பட போஸ்டர் (பைல் படம்)

Yuvan Latest Songs-காபி வித் காதல் படத்தின் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்து அவரே பாடிய இந்த பாடலை எழுதியுள்ளார். மெலடி பாடலாக உருவாகியுள்ளது. இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, ரெடின் கிங்ஸ்லி, ரைசா வில்சன், திவ்யதர்ஷினி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை குஷ்புவின் அவ்னி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு செல்வபாரதி குமாரசாமி என்பவர் வசனம் எழுதியுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News