இன்ஸ்டாநியூஸ் சினிமா ஞாயிறு அப்டேட் தகவல்🔥
பாரதிராஜா வில்லனாகவும் வசந்த் ரவி என்பவர் ஹீரோவாகவும் கமிட் ஆகி நடிச்சிக்கிட்டிருந்த ராக்கி படம் குறித்த சேதியிது.
ராக்கி என்றொரு படம் குறித்த சேதியிது
பாரதிராஜா வில்லனாகவும் வசந்த் ரவி என்பவர் ஹீரோவாகவும் கமிட் ஆகி நடிச்சிக்கிட்டிருந்த படம்..இந்த படத்துக்காக இதன் டைரக்டர் அருண் மாதேஸ்வரன் குமாரராஜா பலரின் சிபாரிசுக்களுக்குப் பின் பாரதிராஜாவைப் போய் பார்த்து சிம்பிளா கதைச் சொல்லி கமிட் ஆன கதையே ஒரு குறும்பட ஸ்டோரி மாதிரி இருக்கும்.
இந்த அருண் மாதேஸ்வரம் அப்படீங்கறவர் தியாகராஜன் குமாரராஜா -வின்'ஆரண்ய காண்டம்' படத்தில் உதவி இயக்குநராகவும், சுதா கொங்கராவின் 'இறுதிச்சுற்று' படத்தில் டயலாக் போர்ஷனை எழுதியவராவும் அறியப்பட்டவர்
இவர் மேற்படி படம் குறிச்சு ஒரு தபா, "இந்த டைட்டில் ரோலான ராக்கி கேரக்டருக்கு முதலில் கௌதம் மேனனைத்தான் நினைச்சேன். போய்ச் சொன்னால், அவருக்கு ரொம்பப் பிடிச்சது. அவருக்கு இருந்த சில வேலைகளில் அவரால் செய்ய முடியலை. அப்புறம்தான் வசந்த் ரவி படத்திற்குள் வந்தார். கதையின் அத்தனை மடிப்புகளையும் தெரிஞ்சிகிட்டு பிரமாதமா நடிச்சார். ரொமான்டிக் படத்தில் நடித்தவருக்கு இதுல வேற ஒரு இடம் கொடுத்திருக்கோம். முக்கியமான கேரக்டரில் பாரதிராஜா. இதில் அவர் இப்படித்தான் இருப்பார்னு நீங்க கற்பனை பண்ணவே முடியாது. தயங்கித் தயங்கித்தான் அவர்கிட்ட சொன்னேன். கதையையும், எடுத்ததில் சிலதையும் காண்பிச்சேன். 'ஷூட்டிங் வந்துடுறேன் போ'ன்னு சொல்லிட்டாரு. இந்த கேரக்டருக்கும் கௌதம் மேனனை நினைத்து வைத்திருந்தேன். சூழல்களால் இதற்கும் அவர் வரமுடியவில்லை" அப்படீன்னெல்லாம் சொல்லி இருந்தார்
ஆனா இந்தப் படத்தோட ஷூட் முடிஞ்சு டப்பிங் பேச வந்த பாரதிராஜா சீன்களைப் பார்த்து அப்செட் ஆகிட்டாராம்.. அதுனாலே டப்பிங் பேசாம டைரக்டர் அருண் மாதேஸ்வரன்கிட்டே ' ஏம்ப்பா.. ஃபுல் ஸ்கிரிப்போட என்னை வந்து பாரு,,, நான் ஒழுங்கா ஆர்டர் பண்ணித் தாரேன்'-ன்னு சொல்லிட்டு போயிட்டதாவும் அதை எதிர்பார்க்காத டைரக்டர் பாரதிராஜாவை போய் பார்க்காததால் படம் அப்படியே முடங்கிக் கிடக்கறதா ஒரு தகவல்
ஆனா அருண் மாதேஸ்வரன் இந்த ராக்கி-யை பக்காவாக முடிச்சிட்டு நெக்ஸ்ட்டா செல்வராகவன் & கீர்த்தி சுரேஷ் காம்பினேசனில் சாணிக் காகிதம் படம் கூட முடிச்சு வச்சிட்டு இப்ப தனுஷ் -க்கான கதை ஒண்ணை செதுக்கிட்டு இருக்கறதா இன்னொரு தகவல்
ஸ்ப்பபப்ப்பா.. ஒரு புது டைரக்டர் வளர்ச்சிக்கு தடைப் போட எப்படியெல்லாம் சேதியைப் பரப்பறாய்ங்க..!