இன்றைய பர்த் டே - ஹேண்ட்சம் ஹீரோ கார்த்தி பர்த் டே மெசேஜ்

கார்த்தி என்று அழைக்கப்படும் கார்த்திக் 1977, மே 25 ஆம் நாளில் நடிகர் சிவகுமார், லட்சுமி அவர்களுக்கும் பிறந்தார்.;

Update: 2021-05-25 05:10 GMT

கார்த்தி என்று அழைக்கப்படும் கார்த்திக் சிவகுமார் 1977, மே 25 ஆம் நாளில் நடிகர் சிவகுமார், லட்சுமி அவர்களுக்கும் சென்னையில் பிறந்தார். இவர் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை படித்தார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை படித்து முடித்தார். இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.

நடிகர் சிவகுமாரின் சொந்த ஊர்தான் இந்த காசிகவுண்டன் புதூர். இங்கு இன்னும் அவரது பழைய வீடு அந்த கிராமத்துக்கே உரிய மணம் மாறாமல் அப்படியே உள்ளது. சிவகுமாரின் சொந்த அக்கா உள்ளிட்ட உறவுக்காரர்கள் அத்தனைபேரும் கிராமத்தில் வசிக்கின்றனர்.இவரது திருமணம் காசிகவுண்டன் புதூர் சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனியுடன், 3 சூலை 2011 அன்று கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. கார்த்தி - ரஞ்சனிக்கு நடந்த திருமணம் காசிகவுண்டன் புதூர் கிராமத்தினரின் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாக மாறியது. அங்குள்ள 250 குடும்பங்களும் தங்கள் வீட்டு திருமணமாகவே நினைத்து கொண்டாடினார்களாம்.இவர்களுக்கு உமையாள் என்ற ஒரு மகள் உண்டு.daughterumayal

கார்த்தி-ரஞ்சனி திருமணம் கடந்த 2011 ம் ஆண்டு சூலை 3 ம் தேதி கோவையில் கோலாகலமாக நடைபெற்றது. கார்த்தியின் அண்ணன் சூர்யா-ஜோதிகா திருமணத்தின் போது குறிப்பிட்டவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனராம். உறவினர்கள் அனைவரையும் மகன் திருமணத்திற்கு அழைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் சிவகுமாருக்கு இருந்து வந்ததாம். அதனை போக்கும் வகையில் கார்த்தி-ரஞ்சனி திருமணத்திற்கு உறவினர்கள் அனைவரையும் அழைத்து விருந்து படைக்க முடிவு செய்து, அத்தனை பேருக்கும் நேரில் போய் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்.அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு உறவினரிடமும், "இது உங்கள் வீட்டு திருமணம். கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும்" என்று அன்பாக அழைப்பு விடுத்தாராம்.

இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதை தொடர்ந்து இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூலை 2005 ஆம் ஆண்டு வெளியிடப்படுமென அறிவித்து நிதி பிரச்சனை காரணமாக ஜனவரி 2007 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியை அடைந்தது. அதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் 3 வருட படப்பிடிப்புக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு வெளியானது.

இவர் 2004 ஆம் ஆண்டு முதல் பருத்தி வீரன் (2007), ஆயிரத்தில் ஒருவன் (2010), மெட்ராஸ் (2014) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.


இன்றைய பர்த் டே ஹேண்ட்சம் ஹீரோ கார்த்தி பர்த் டே மெசேஜ்💐 (I don't know you personally but through the news and other informational ways. You are genuinely a very generous and humble person. Your personality makes you unique from others, may you live thousands and thousands of years. Happy birthday to my charming star karthi.)_💓



 


Tags:    

Similar News