நடிகை கௌதமி பிறந்த நாள்

சூப்பர் ஸ்டாரின் குருசிஷ்யன் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கவுதமி கமலஹாசன், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.;

Update: 2021-07-02 02:39 GMT

நடிகை கௌதமி

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சேஷகிரி ராவ் – வசுந்தரா தேவி இணையரின் மகளாக 2 ஜூலை 1965 ஆம் நாள் பிறந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குருசிஷ்யன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கவுதமி அதன் பின்னர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்

சந்தீப் பாட்டியா-கௌதமி-ஜெயலலிதா 

இந்த நிலையில் கடந்த 1988 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார். ஆனால் குழந்தை பிறந்த சில மாதங்களில் இருவருக்கும் விவாகரத்து நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திருமனத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.

அதன்பின் கமல்ஹாசனுடன் 10 வருடங்கள் வாழ்ந்த கௌதமி தற்போது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் என்பதும் பாரதிய ஜனதா கட்சிகள் இணைந்து அரசியல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


Tags:    

Similar News