நிஜ நாயகனாக நிமிர்ந்து நிற்கும் அல்லு அர்ஜுன்..!

cine field real hero allu arjun தெலுங்குப் பட உலகின் ஸ்டைலிஷ் ஸ்டாரான நடிகர் அல்லு அர்ஜுன், கேரள மாணவி ஒருவருக்கு கல்விக் கட்டண உதவி செய்துள்ளார்.

Update: 2022-11-11 14:09 GMT

 cine field real hero allu arjun

பொதுவாகவே திரைப்பட நாயகர்கள் திரைப்படங்களில் நடிப்புக்காக செய்யும் வீர தீர சாகசங்களையும் ஏழை எளியோர்க்கும் இல்லாதோருக்கும் கொடுத்து உதவும் தர்மச் செயல்களையும் பார்த்துப் பார்த்து அவற்றை நிஜம் போல நம்பி அவர்களைப் பற்றிய மிக உயர்ந்த பிம்பத்தை தங்கள் மனதினில் வரித்துக் கொள்வார்கள். ஆனால், நிஜத்தில் பல நாயகர்கள் அப்படி இல்லை என்பதுதான் யதார்த்தம்.

ஆனால், விதிவிலக்காக ஒரு சில நாயகர்கள் தங்களது நிஜ வாழ்க்கையிலும் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் எண்ணற்ற நற்பணிகளை மனமுவந்து செய்து நிஜ வாழ்க்கையிலும் தாங்கள் நாயகர்களே என்று நிரூபித்து வள்ளலாய் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தநிலையில், தெலுங்குப் பட உலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரும் டோலிவுட் ரசிகர்களால் ஸ்டைலிஷ் நாயகன் என்று கொண்டாடப்பட்டு வருபவரான நடிகர் அல்லு அர்ஜுன் எண்ணற்ற நற்பணிகளை செய்து நிஜ நாயகன் என்று தெலுங்கு மக்களின் மனத்தில் நிமிர்ந்து நிற்கிறார்.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்த ஆண்டு, வெள்ளித் திரையில் வெளியான, 'புஷ்பா' திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் இவரது யதார்த்தமான நடிப்பு, பேச்சு, பாடி லாங்வேஜ் என அனைத்தும் உச்சமாக இருந்ததால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

 cine field real hero allu arjunசெம்மரக் கடத்தலை மையமாக வைத்து கமர்சியலாக உருவான, 'புஷ்பா' படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.மேலும், பாக்ஸ் ஆபீஸிலும் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'புஷ்பா-2' திரைப் படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாகத் தொடங்கி உள்ளன. நடிகர் அல்லு அர்ஜுனின் புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகின. அடுத்த ஆண்டு இறுதிக்குள், 'புஷ்பா-2' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் நர்சிங் படிப்பை தொடர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த கேரள மாணவி ஒருவருக்கு அவரது கல்வி தடையின்றித் தொடர உதவிக்கரம் நீட்டி உள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பில் 92 சதவிகித மதிப்பெண்ணை பெற்ற அந்த மாணவியின் தந்தை, கடந்த ஆண்டு கொரோனாவால் இறந்ததால், மேல்படிப்புக்கு கல்விக் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால், தனது படிப்பைத் தொடர முடியாமல் போனது. இதைடுத்து, அந்த மாணவியின் நான்கு ஆண்டு படிப்புக்கான அனைத்து செலவுகளையும் நடிகர் அல்லு அர்ஜுன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

 cine field real hero allu arjunநடிகர் அல்லு அர்ஜுனின் உன்னதமான செயலை ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.கிருஷ்ண தேஜா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார். இந்தத் தகவலை கேள்விப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் நீங்கள் ரீல் ஹீரோ மட்டும் இல்லை நிஜத்திலும் ஹீரோதான் என அவரை வெகுவாகப் புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள். நடிகர் அல்லு அர்ஜுன் உதவிக்கரம் நீட்டியதை அடுத்து பல கல்லூரிகளில் இருந்து அந்த மாணவிக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த மாணவியும் அவரது குடும்பத்தினரும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நெகிழ்ந்து நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News