'நாட்டு நாட்டு' பாடலுக்கு விருது.. தேம்பி தேம்பி அழுத நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித்
நாட்டு நாட்டு பாடலுக்கு விருது அறிவித்தபோது தேம்பி தேம்பி அழுததாக நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.;
நாட்டு நாட்டு பாடலுக்கு விருது அறிவித்தபோது தேம்பி தேம்பி அழுததாக நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் 'நாட்டு நாடு' பாடலுக்கு நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரின் சிறந்த நடனம் பிரபலமாவதற்கு பெரிதும் உதவியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர், நடிகர்கள், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோருடன் நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித்தும் முக்கிய காரணம். பிரேம் ரக்ஷித்தின் அற்புதமான நடன அமைப்பு இந்திய சினிமாவை ஏழு கடல்களைக் கடந்தது. தற்போது இந்த பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. மேலும் இப்படம் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரேம் ரக்ஷித் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர். அவரது பெற்றோரைத் தவிர, அவரது குடும்பத்தில் அவருக்கு ஒரு தம்பி ஒருவர் உள்ளார். இவரது ராஜலட்சுமி, மகன் பரீக்ஷித். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித்தின் குடும்பம் ஒரு காலத்தில் மிகவும் வசதியான குடும்பமாக இருந்து வந்தது. அவரது தந்தை ஒரு வைர வியாபாரியாக இருந்தார்.
1993 ஆம் ஆண்டில், சில காரணங்களால், அவரது தந்தை தனது குடும்பத் தொழிலில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது. அங்கிருந்து அவரது குடும்பத்தின் நாட்கள் தொடங்கியது. குடும்பத்தை நடத்துவதற்காக அப்பா படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். அங்கு இருந்தபோது, பிரேம் ரக்ஷித் தையல் கடையில் சிறிய வேலைகளைச் செய்யத் தொடங்கினார்.
பிரேம் ரக்ஷித் 2004 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான வித்யார்த்தியில் நடன இயக்குனராக அறிமுகமானார். 2005 இல் ராஜமௌலியின் சத்ரபதி மூலம் புகழ் பெற்றார். 'வித்யார்த்தி' படத்துக்குப் பிறகு அவருக்கு அதிக வேலை கிடைக்காததால், கஷ்டப்பட்ட நாட்களில் ராஜமௌலியின் குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்தார். அதுவரை பிரேம் ரக்ஷித் வித்யார்த்திக்கு நடனம் அமைத்தது ராஜமௌலிக்குத் தெரியாது.
ஒருநாள் ராஜமௌலியிடம் தைரியம் வந்து உண்மையைச் சொன்னார். இதையடுத்து 'சத்ரபதி' படத்துக்கு நடனம் அமைக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார் ராஜமௌலி. 'சத்ரபதி'யில் இருந்து பிரேம் ரக்ஷித்தின் படைப்புகள் எல்லா இடங்களிலும் பாராட்டப்பட ஆரம்பித்தன. பல படங்களில் சிறந்த பணிக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். 'சத்ரபதி' மூலம் ராஜமௌலியுடன் அவருக்கு இருந்த உறவு இன்னும் அப்படியே உள்ளது. இந்த இருவரின் பணியும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அவர்களை கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் டிஜிட்டல் மீடியா ஒன்றுக்கு நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் அளித்த நேர்காணலில், நாட்டு நாட்டு பாடலுக்கு முதன்முதலில் விருது கிடைத்தது. இதனை கேள்விப்பட்டு ஒரு மணி நேரம் தேம்பித்தேம்பி அழுததாகவும் அவர் தெரிவித்தார். இந்த வாங்கிக்கொண்டு அவர் அப்பாவிடம் கொடுத்ததாகவும், அவர் அதற்கு நான் இதை புத்தகத்தில்தான் பார்த்தேன் எனத் தெரிவித்ததாகவும், அவர் மிகவும் மகிழ்ச்சியில் இருந்ததாகவும் அவர் கூறினார்.
நாட்டு நாட்டு பாடல் எடுக்கப்பட்டது குறித்து கேட்டபோது, பாடலின் முழு நிறைவுக்கு காரணம் ராஜமௌலி சார் தான். ஒரு ஒன்மோர் அல்ல 18 ஒன்மோர் கேட்டதாகவும், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் அவர்களையும் ராஜமொளலி சார்தான் ஒன்மோர் கேட்டார் என பிரேம் ரக்ஷித் கூறினார்.