Chandramukhi 2 பேய்க்கு முடி கொட்டாதா? பாடாய் படுத்தும் முருகேஷன்!
பேய்க்கு வயசாகாதா? முடி கொட்டாதா ராகவா லாரன்ஸை பாடாய் படுத்தும் வடிவேலு;
நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் நடித்துள்ள சந்திரமுகி 2 படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது. இந்த படத்துக்கு ஆரம்பத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தாலும் பின் அவை எல்லாம் புஷ்வானமாகிவிட்டது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த படத்தை கண்டுகொள்ளவில்லை என்பதாலேயே இரண்டு வாரங்கள் லேட்டாக வருகிறது.
முன்னதாக கடந்த வாரத்திலேயே படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது. இது கிராபிக்ஸ் பணிகள் என்று கூறப்பட்டாலும், கடந்த வாரம் அதிக போட்டி இருந்தது என்பதும் ஒரு காரணம். இந்த வாரம் செப்டம்பர் 28, 29, 20, அக்டோபர் 2 என அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வருவதால் இந்த நாளை குறிவைத்திருக்கிறார்கள்.
2005ம் ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது இந்தப் படம். முதல் பாகமே மற்ற மொழி படங்களின் ரீமேக் தான் என்றாலும், அதிலெல்லாம் குறைவாக இருந்த ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி, த்ரில்லர் என பல்வேறு விஷயங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டது. குறிப்பாக படத்தில் ரஜினியின் ஆக்ஷன், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு, நயன்தாராவின் ப்ரெஷ்னஸ், ரஜினி - வடிவேலு காமெடி உள்ளிட்டவை மிகவும் சிறப்பாக சேர்க்கப்பட்டு, ரஜினிக்கு மட்டுமில்லாமல் இந்தப் படத்தின் நடிகர்கள் அனைவருக்கும் படம் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்திருந்தது
முக்கியமாக வடிவேலு இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாக இருந்தார். அவரால் ரஜினிகாந்துக்கு கூடுதலாக ஒரு பிளாக் பஸ்டர் கிடைத்திருந்தது. சந்திரமுகி படத்தில் ரஜினி, வடிவேலு இருவரும் இணைந்து பேய் குறித்து பேசும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்நிலையில் இரண்டாம் பாகத்திலும் வடிவேலுவை வைத்தே கல்லா கட்ட முடிவு செய்துள்ளனர். படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தின் புதிய ட்ரெயிலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் ட்ரெயிலரில், சந்திரமுகியில் கங்காவாக நடித்திருந்த ஜோதிகா குறித்த பேசும் உரையாடல்களும் இடம்பெற்றுள்ளன. இதனிடையே சந்திரமுகி 2 படத்திலும் ராகவா லாரன்சுடன் இணைந்து பேய் குறித்த தன்னுடைய சந்தேகத்தை எழுப்பியுள்ளார் வடிவேலு.
படத்தின் முக்கிய அம்சங்கள்
- ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- இயக்குநர் பி வாசு இயக்கியுள்ளனர்.
- ஆஸ்கர் நாயகன் கீரவாணி இசையமைத்துள்ளார்.
- படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகிறது.
படத்தின் எதிர்பார்ப்பு
சந்திரமுகி படம் 2005ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது என்றால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் நடித்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதால், ரசிகர்கள் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.